5 ஜூன், 2012

நாளை தவறவிடதீர்கள் ... தவறினால் 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் + வீடியோ இணைப்பும் நண்பர்களே... நாம் வாழும் தற்போதைய காலத்தில் வானில் ஒரு அற்புதம் நிகழவிருக்கிறது.பார்க்க தவறவிட்டால் உங்கள் பேரன் அல்லது அவனது மகனுக்கோ வாய்ப்பு கிடைக்கும்.வருகிற ஜூன் 6ல் சூரிய மண்டலத்தின் இரண்டாவது கிரகமான வெள்ளி கிரகணம் சூரியனை இடைநகர்வு செய்கிறது.

கோள்களின் இடைநகர்வு என்றால் என்ன?. 

சூரியன் சந்திர இடைநகர்வை கிரகணம் என்கிறோம் முழுகிரகணம், பகுதி கிரகணம் என்று நாம் அந்த அற்புதங்களை பார்த்திருப்போம். வெகு தொலைவில் உள்ள சூரியனின் அளவும்,
அருகேயுள்ள சந்திரனின் அளவும் பார்ப்பதற்கு சம அளவில் தெரிவதால் கிரகணத்தின் போது அவை முழமையாக மறைப்பதை போல நாம் காண்கிறோம். வளையவடிவ சூரியகிரகத்தின் போது சந்திரன் சற்று தொலைவில் இப்பதால் சூரியனின் உட்புறத்தில் இருப்பது போல தெரியும்.அப்போது சூரியனை பார்பதற்கு வளையம் போல் காட்சிதரும்.அதே போல பூமியின் உட்புற கோள்களான புதனும்,வெள்ளியும் சில சமயம் சூரியனை இடைமறிப்பு செய்கின்றன.அளவில் சிறியதாகவும்,வெகு தொலைவாகவும் தெரியும் வெள்ளி கிரகம் சூரியனை இடைமறிப்பு செய்யும் போது ஒரு கரும்புள்ளி சூரியனின் உட்புரத்தை கடந்து செல்வதைப் போல் காட்சிதரும்.இது விந்தையான ஆபூர்வ காட்சியாகும். இதை வெள்ளி இடைநகர்வு என்கிறோம்.

கடந்த 400 ஆண்டுகளில் ....

மிக அறிதாக கூடிய இந்த வெள்ளி இடைநகர்வு கடந்த 400 ஆண்டுகளில் 7 முறை மட்டுமே பார்க்க முடிந்துள்ளது. இந்த முறை ஜூன் 6 அன்று நாம் பார்க்க தவறினால் அடுத்து 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.பார்க்கும் நேரம் -எப்படி பார்க்கலாம்?...

ஜூன் 6 அதிகாலை 5.22லிருந்து பகல் 10.22 வரை பார்க்கலாம்.

1. தொலைநோக்கி மூலம் பிம்பத்தை பிடித்து பார்க்கலாம். (நேரடியாக பார்க்கலாம்)
2. சூரிய வடிகட்டி கண்ணாடிகளை பயன்படுத்தலாம்.
3. வெல்டிங் கண்ணாடி எண்.14 பயன்படுத்தலாம்
4. சூரிய கதிர்களை முகம்பார்க்கும் கண்ணாடி மூலம் பிம்பம் பிடித்து பாக்கலாம்.
5. குவி லென்ஸ் மூலம் சூரியனின் நிழலுருவை பெற்று பார்க்கலாம்


எப்படி பார்க்க கூடாது

1. சூரியனை நேரடியாக பார்க்ககூடாது
2. புகைபிடித்த கண்ணாடி, பிலிம் ரோல்
3. எக்ஸ்ரேபிலம்,சிடி, கலர்கண்ணாடிகள்
போன்றவற்றை பயன்படுத்த கூடாது.

சூரிய வடிகட்டி கண்ணாடி வாங்கிட
மேலும் தகவல்களுக்கு

கலிலியோ அறிவியல் மையம்
4/672, ராஜாலட்சுமி வளாகம்,
சதாசிவ நகர், மதுரை -20
பேச:9842595536
மின் அஞ்சல்:maiyammdu@gmail .com
facebook: maiyam madurai

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு

இந்த அரிய நிகழ்வைப் பார்க்க தமிழக அரசு சென்னை பிர்லா கோளரங்கத்திலே யும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகிலே யும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதுதவிர தமிழ்நாடு முழுக்க அறிவியல் இயக்கம் சார் பாக 600 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய் திருக்கிறார்கள். அங்கே போய் எளிதாகப் பார்க்கலாம். இது தவிர அந்தந்த ஊர்ல இருக் கிற லோக்கல் கேபிள் டிவி சேனல்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கடலோரமாக உள்ள காஞ்சிபுரம், கட லூர், நாகை, குமரி ஆகிய இடங்களிலேயும் பெரும் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். அறி வியல் இயக்கம் சார்பாக 10 ஆயிரம் ஆசி ரியர்களுக்குப் பயிற்சி கொடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு இந்நிகழ்வைக் காண்பிக்க வும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
 
                                 
                    video

வெள்ளி இடைநகர்வு மாதரி வீடியோ

அறிவியல் தெளிவோடு வெள்ளி இடை மறிப்பைக் கண்டால் ரசிக்கலாம், வானியல் புதிர்களைப் புரிந்துகொள்ளலாம். ஜோதிட சிகமணிகளும், கழிப்பு கழிக்கிற மந்திரவாதி களும், குறி சொல்கிறவர்களும் கூறுகிற கதைகளையும் சடங்குகளையும் பின்பற்றி னால் அச்சம் மட்டுமே மிஞ்சும். அந்த அச்சத் தைத் தடுக்க சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பல பெண்கள் இந்த வெள்ளி நகர்வை வரவேற்று வழியனுப்பும் வகையில் வெள்ளித் திருவிழா கொண்டாடுகிறார்கள். அச்சத் தின் சடங்கில் சிக்குவதை விட இந்த அறிவி யல் கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ லாமே...

-பென்னிசெல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...