அஜித்தின் விவேக மற்ற படம்...


அஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம்  முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.
                படம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...
         கதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.


இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.
அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்‌ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.

அக்‌ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்‌ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்‌ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்‌ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்‌ஷரா கூறுகிறார்.
இந்நிலையில், அக்‌ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்‌ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.

அதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார்? தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார்? உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர்? அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

          அஜித் இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் ரெம்ப கஷ்டம்.

செல்வன்

கருத்துகள்