மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஈஷா மையத்தின் சார்பாக 112 அடி ஆதிசிவன் சிலை திற்கக்பப்ட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் முதல்வர் பங்கேற்க உள்ளனர்.இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகிஉள்ளது.
ஆன்மீகத்தின் பெயரால் வனப் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதையும் பழங்குடியினர் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டதையும் விலங்குகளின் வாழ்நிலை சீர்குலைக்கப்பட்டதையும் அங்கீகரிக்கலாமா என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடதுசாரித் தலைவர்களும், நீதிபதி அரிபரந்தாமனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமரும் முதல் வரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 13 லட்சம் சதுர அடி பரப்பில் ஈஷாயோகா மையம் சார்பில் அதன் தலைவர் ஜக்கிவாசுதேவ் பல்வேறு கட்டடங்களை சட்டவிரோதமாகக் கட்டிவருவது பற்றிக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்ற அரசாணையையும் அவர் மதிக்கவில்லை என்ற நிலையில், பிப்.24 அன்று இங்கு மகாசிவராத்திரி விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.இதுதொடர்பாக புதனன்று (பிப்.22) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிஅரிபரந்தாமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் “ஒரு பகுதிமக்களின் ஆன்மிக விழாவை நாங்கள் எதிர்க்கவில்லை. இயற்கை வளம் பாதிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம். மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருக்கிறபோது, இந்த விழாவில் பிரதமரும் முதலமைச்சரும் பங்கேற்பது, விதி மீறல்களை அங்கீகரிப்பதாகிவிடும். எதிர்காலத்தில் வேறு அமைப்புகளும் இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபடத் தூண்டுவதாகிவிடும்,” என்று கூறினர்.



