பிரதான செய்திகள்

பாரதிராஜா: தமிழ்க் கிராமத்தின் கடைசி காட்சிப்பதிவாளர்

 

எங்க ஊர்க்காரங்கே…” என்று மதுரை வட்டார வழக்குமொழியில் அவர் ஒரு மேடையில் பேசத் தொடங்கியபோது, பேசிக் கொண்டிருந்தது ஒரு திரைப்பட இயக்குநர் அல்ல; தன் மண்ணின் மனிதன் தனது மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாலும், அவருக்குள் வாழ்ந்த கிராமத்து மனிதனை நகர வாழ்க்கையால் மாற்ற முடியவில்லை.

பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான கதைகள் நகரங்களின் வீடுகளிலும், ஸ்டுடியோக்களின் செயற்கை அரங்குகளிலும் சுற்றிக் கொண்டிருந்தன. அந்தப் போக்கை உடைத்து, புழுதி பறக்கும் கிராமச் சாலைகளையும், வயல்வெளிகளையும், வெயிலில் கருகிய முகங்களையும், வெள்ளந்தியான மனிதர்களையும் பெரிய திரைக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அது ஒரு புதிய இயக்குநரின் வருகை மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் பார்வையையே மாற்றிய ஒரு பண்பாட்டு நிகழ்வாகும்.

மதுரை அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி  கிராமத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. 

தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி  கிராமத்தை சேர்ந்த பண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு   கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு  குழி தோண்டிய போது பெரிய பாணை இருப்பதாக அவ்வூரே சேர்ந்த கணேசன் என்பவர் தகவலின்படி
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையம் தொல்லியல் கள ஆய்வாளருமான  முனைவர் து முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது. உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜ் அவர்களுக்கு  தகவல் கொடுக்கப்பட்டு  நேரடியாக களத்திற்கு வந்து அவர் முதுமக்கள் தாழி கைப்பற்றி கிராம நிர்வாக  அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அழியும் நிலையில் 800 ஆண்டு பழமையான நாராயணன் லட்சுமி கற்சிற்பம்.


 நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் அழிவு நிலையில்…தலைப்பகுதி உடைந்த நிலையில்  நாராயணன் லட்சுமி நாராயணன் கற்சிற்பம்.(கி.பி 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை )

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில்  800 ஆண்டு பழமையான கற்சிலை   கண்டறியப்பட்டது.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் 7 நூல்கள்..

 


                என் வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி வழிகாட்ட முடியும் என நீங்கள் கேட்கலாம்.அது ஒருவகையில் உண்மைதான். ஆனால் வாழ்க்கை முறைகள் வேறு வேறு மாதிரியாக இருந்தாலும் வாழ்க்கையின் அடிப்படை ஒன்றுதானே. அந்த அடிப்படை விஷயங்களை மனிதர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவை கதைகளாக, கவிதைகளாக ,கட்டுரைகளாக உருவாக்கப்பட்ட  7 நூல்கள் தான் இவை. 

மதுரையில் சுத்தி பார்க்க என்ன இருக்கு...?

 


 மதுரையின் ஒவ்வொரு தெருவும் வரலாற்று முக்கியதுவம் கொண்டது.மதுரையின் வரலாற்றை பல எழுத்தாளர்கள் எழுதி குவித்தாலும் தீர்ந்து போகத வரலாறு கொண்ட நகரம். இந்த நூல் மதுரையின் வரலாற்றை அல்ல மதுரையை முழுமையாக அறிந்து கொள்ள உதவும் சுற்றுலா வழிகாட்டி.மதுரை காரர்களுக்கே தெரியாத பல புதிய இடங்களை இந்த நூல் அறிமுகம் செய்கிறது.பொதுவாக வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு மீனாட்சி அம்மன் கோயில்,திருமலை நாயக்கர் மகால்,காந்தி  அருங்காட்சியகம், திருப்பரங்குன்றம் முருகன்கோயில், இப்போது கூடுதலாக கீழடி செல்கிறார்கள். ஆனால் மதுரை  வரலாறு நிறைந்த நகரம்  அந்த வரலாற்றை வெளிபடுத்துகிற பல தொல்லியல் இடங்கள் பலரும் அறியாதது.. அவற்றை பார்க்க இந்த நூல் உதவியாக இருக்கும்.

தமிழர் தோன்றியது எங்கே?

   


அமேசானில் வெளிவந்துள்ள ஆற்புதமான நூல்.தமிழர் தோன்றியது எங்கே? என்ற இந்த நூல் தமிழர்களின் தமிழரின் பரிணாம வளர்ச்சி…4 நிலைகளில் விளக்குகிறது.

தமிழர்களுக்கு தங்களின் வரலாற்றின் மீது எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு.தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது.சிலர் மத்திய தரைக்கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் கூலித்தொழிலாளர்களாக தமிழர்கள்  குடியேற்றப்பட்டார்கள்.  அதே போலவே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள்  பரவலாக  பல்வேறு காரணங்களுக்காக குடியேற்றப்பட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு "திரைக்கடல் ஒடியும் திரவியம் தேடு"என்தற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் பெற்று  அமெரிக்கா,ஐரோப்பா, சீனா உள்ளிட்ட   நாடுகளில் வாழ்கிறார்கள் . 1983-இல் ஏற்பட்டஇலங்கை இனக்கலவரங்கள் தமிழர்களை    அஸ்த்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே என உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது.இன்று  அவர்கள் வாழும் நாடுகளிலேயே தனி முத்திரைபதித்து வருகிறார்கள் தமிழர்கள்.

          செஸ்விளையாட்டாகட்டும், இமெயில் கண்டுபிடிப்பாகட்டும், இசைக்காக இரண்டு கைகளிலும் ஆஸ்கார் வாங்குவதாகட்டும் ,இலக்கியம், இயல்,இசை,நாடகம் என இந்த பூமியில் நடைபெறும்  அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ் இனம் தனது முத்திரை பதித்து வருகிறது.

      தமிழின் முதல் காப்பியம்(நாவல்) ஏன் உலக அளவிலேயே முதல்காப்பியமான சிலப்பதிகாரம் எழுதப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கலெவெட்டுக்களின் அடிப்படையில் அதிகபட்டமாக 5000 ஆண்டுகள் பழமையான தமிழ்பிராமி,வட்டெழுத்து போன்ற தமிழ் எழுத்துக்கள் கிடைக்கின்றன.  



  மேற்கண்ட நூலை வாங்க.. கீழே உள்ள  இணைப்பை கிளிக் செய்க

                           தமிழர் தோன்றியது எங்கே?

 இந்நிலையில் தமிழர் தோன்றியது எங்கே?  என்ற கேள்விக்கான விடைதேட  உலக தமிழர்களில் நானும் ஒருவானாக  நான்படித்து சேகரித்த பலவேறு தகவல்களின் தொகுப்பே இந்த நூல்.தமிழர்களின் தோற்றம் குறித்து 4 விதமான கருத்துக்கள் உண்டு.ஆதி தமிழன்,ஆப்பிரிக்கா தமிழன்,லெமுரியா  தமிழன்,சிந்துவெளி தமிழன்  இந்த 4 விதமான கருத்துக்களும் வேவ்வேறு காலகட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிகள்   குறித்து 13 தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது.

                               படித்து பாருங்கள் தமிழர்களின் வரலாற்றை புரிந்து கொள்ள முடியும்

திருமங்கலம் அருகே கி.பி 16 ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்துக்களுடன் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு


 மதுரை மாவட்டம்  திருமங்கலம் அருகே கரடிகல் விவசாய நிலப் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட  நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரடிகல் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர்  என்பவர்,  தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவல்படி   மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் து .முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன்,  ஆய்வாளர்  ஆனந்தகுரமன் , ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது  ஊரில் மேற்கு பகுதியில் விவசாய நிலத்தில்  மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி.16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது :

சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக உள்ளது. நடுகல் என்பது போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல். பெருநிரை ( பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டு போன வீரனுக்காக எடுக்கப்படும் நினைவுக்  கல்லாகும்.   




நடுகல் சிற்பம்

 கரடிகல் விவசாய நிலத்தில் கண்டறியப்பட்ட  நடுகல் சிற்பம் 3 அடி உயரம்,  2 அடி அகலம் 12 செ.மீ தடிமன் கொண்ட கருங்கல்லான தனி பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையில் ,இடது கையில் கேடயம் ஏந்தியவாறு,  வலது கையை நீண்ட வாளை பிடித்தவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையானதை அள்ளி முடிக்கப்பட்டும்,  காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி,  பதக்கம் போன்ற ஆபரணங்களும்,  மார்பில் சன்னவீரம் எனப்படும் வீர சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகவும். வீரன் இடுப்பு பகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும்  , கை, கால்களிலும் வீரக்கழல் அணிந்து கொண்டு முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்வது போன்று நின்ற நிலையில் காணப்படுகிறது. 

வீரன் வலதுபுறத்தில் பெண் சிற்பம் தேய்ந்த முகத்துடன் நீண்ட காதுகளில் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையும் ,  உடல் முழுவதும் ஆடை அணிந்து வலது கை தொங்கவிட்டு இடது கை வீரனை பின் தொடர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 






கல்வெட்டு செய்தி 

சிற்பத்தின் மேல் பகுதியில் நீண்ட வடிவில் பெரிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு  தேய்ந்த நிலை காணப்பட்டது .இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் படிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் கடைசி வரி  பெற்றான் என்ற வரி மட்டும் வாசிக்க முடிந்தது.மற்ற எழுத்துக்கள் தேய்மானம் கொண்டு இருப்பதால் பொருள் அறியமுடியவில்லை.  கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் கி.பி 16  ஆம் நூற்றாண்டைச்   சேர்ந்தவையாகும்

இப்பகுதியில் போர்க்களத்தில் திறம்பட போரிட்டு  இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் . தற்போது மக்கள் வேட்டைக்காரன் சாமி என்று வழிபட்டு வருகின்றனர்  என்றார்.

வாத்தி - திரைவிமர்சனம்

 


"இந்திய பொது சமூகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை, தேவைப்படும் அவசியமான கருத்தை, அறிவுரையாக இல்லாமல் பொழுதுபோக்குசினிமா மூலம் சுவாரஸ்யமாக அளித்திருக்கிறது பதிவு செய்திருக்கும் படம் வாத்தி.

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.முதல் முறையாக வாத்தியார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்ததே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

1990களில் துவங்குகிறது படம். கல்வி வியாபாரியான சமுத்திரகனி, அரசு பள்ளிகளையும் தன் வசம் கொண்டு வர திட்டமிடுகிறார். அதன்படி, அரசு பள்ளிகளுக்கு தானே தரமான ஆசிரியர்களை அனுப்பி தரத்தை உயர்த்துவதாக கூறுகிறார். லஞ்சம் கொடுத்து காரியத்தையும் சாதிக்கிறார். அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் தர ஆசிரியர்களை அனுப்புகிறார்.அப்படி அனுப்பப்பட்டவர்தான் தனுஷ். அவரோ சிறப்பாக பாடம் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற செய்கிறார்.இதனால் ஆத்திரமடையும் சமுத்திரகனி, என்ன செய்கிறார்.. அதை தனுஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.தனுஷ் வழக்கம் போல் தன்னுடைய நடிப்பினால் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். மாணவர்களை எப்படியாவது படிக்கவைத்து விட வேண்டும், படிப்பு தான் மரியாதையை தேடி தரும் என்று போராடும் தனுஷின் நடிப்பு சிறப்பு.கதநாயகியாக தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே பார்வையாளர் மனங்களைஆக்கிரமிக்கிறார்சம்யுக்தா. வில்லனாக வரும் சமுத்திரக்கனி மிரட்டுகிறார்.



‘கல்வியில் கிடைக்கும் பணம் அரசியலில் கிடைக்காது’ என்று அவர் கூறும் வசனம்  எதார்த்த சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.

மேலும், சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி உள்ளிட்டோர் கச்சிதமாக அவரவர்  கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இயக்குனர் வெங்கி அட்லூரி எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய சமுதாயத்திற்கு – கல்வி குறித்த புரிதலுக்கு – மிகவும் தேவையானது.ஜி.வி. பிரகாஷின் வா வாத்தி பாடல் கவனத்தை கவர்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.அனைவரும் பார்க்க வேண்டிய படம்

வாத்தி - சமூகத்துக்கான பாடம்

பிரபாகரன் பற்றி நெடுமாறன் கூறிய தகவல் நம்பிக்கைகுரியதாக இல்லை - பெ.மணியரசன்

 


நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…….

தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தமிழீழப் பாவலர் ஐயா காசி. ஆனந்தன் அவர்களும் நேற்று (13.2.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி “தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும், அவர் துணைவியார் மதிவதனி அவர்களும் மகள் துவாரகா அவர்களும் உயிருடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

“தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார். தமிழ் ஈழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தலைமறைவிலிருந்து” வெளி வந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்க இருக்கும் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கட்கு, அவரது இந்த இலட்சியத் திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்திலும், அது செயல்படாத பிற்காலத்திலும் அந்த அமைப்பின் சார்பில் கருத்துகள் – நிலைபாடுகள் – முடிவுகள் முதலியவற்றை வெளியிடும் அதிகாரத்தை இவ்விருவருக்கும் அவ்வமைப்பு வழங்கியதில்லை.

கவிஞர் காசி ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ்., பாசகவின் ஆரியத்துவா, அதாவது அவர்களின் இந்துத்துவா கொள்கையை ஆதரித்து, பாசக ஆட்சியின் ஆதரவைப் பெற்று தமிழீழத் தமிழர்களின் அரசியல், இறையாண்மை மற்றும் உரிமைகளை மீட்கப் போவதாக அறிவித்துச் செயல்பட்டு வருபவர். கவிஞரின் இந்நிலைபாட்டை எள்ளளவும் ஆதரிக்காத தமிழ்நாட்டு தமிழீழ ஆதரவு அமைப்புகள் பல உள்ளன. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கவிஞரின் இந்நிலைபாட்டைத் தொடக்கத்திலிருந்து மறுத்து வருகிறது.

கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் குரலுக்கு இப்போது தமிழ் ஈழமக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது முதன்மையான வினாக்குறி! அவரைத் தமது பேச்சாளராக (Spokesperson) தலைவர் பிரபாகரன் தேர்வு செய்தாரா என்பது அடுத்த வினாக்குறி.

ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் 2009 மே 18 லிருந்து பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று உயிரோடிருக்கிறார் என்று கூறிவருகிறார்.

2009 மே 18 அன்று தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சிங்கள அரசு படம் போட்டுக் காட்டி அறிவித்தது. அப்போது கொந்தளித்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் – நான் உட்பட – தமிழ்நாட்டில் முழுக்கடையடைப்பு நடத்த கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். அடுத்த நிமிடமே பிரபாகரன் உயிரோடு தப்பிச் சென்றுவிட்டார் என்று நெடுமாறன் ஐயா அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு காசி ஆனந்தன் மூலம்தான் எனக்குத் தெரிந்தது.

மறு ஆண்டு 2010 நவம்பர் 27 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கு – சிற்றரங்கில் நடந்த மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ஐயா நெடுமாறன், “அடுத்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வைத் தலைவர் பிரபாகரன் வெளிவந்து நடத்துவார்” என்று அறிவித்தார். அதன் பிறகு இன்றுவரை தலைவர் வரவில்லை.


ஈழத்தமிழர் இனப்படுகொலையில் பல வடிவங்களில் பங்கெடுத்த இந்திய அரசுக்கு எதிராக கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆவேசம் கொண்ட அந்த வேளையில், அந்த ஆவேசத்தை ஓரளவு தணிப்பதற்கே நெடுமாறன் அவர்களின் “தலைவர் உயிரோடு இருக்கிறார்” என்ற அறிவிப்பு பயன்பட்டது.

இப்பொழுது நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவுக்கு எந்த அளவு அதிக விசுவாசத்துடன் பிரபாகரன் இருந்தார் என்று காட்டும் அக்கறையே மேலோங்கியுள்ளது.

“விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை, இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்” என்று பழ. நெடுமாறன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். சீனா இலங்கையில் காலூன்றுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க்காலத்திலும் அதன் பிறகும் இன்று வரை இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்குத் துணையாகவே செயல்பட்டு வருகிறது. காங்கிரசு ஆட்சியிலும் பாசக ஆட்சியிலும் இதுதான் உண்மை நிலை!

“இலங்கை வழியாக சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றும் நெடுமாறன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேற்கண்ட அறிக்கை மற்றும் பழ. நெடுமாறன் அவர்களின் கூற்று ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஏற்கெனவே கவிஞர் காசி ஆனந்தன் குழுவினர், பாசகவை ஆதரித்து ஈழ மக்கள் உரிமைகளை மீட்கலாம் என்று கூறிய திட்டத்தை பழ. நெடுமாறன் அவர்கள் வலியுறுத்துகிறார் என்று தெரிகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றம்- சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க முன்வந்த போதெல்லாம் அதற்கு எதிராகச் செயல்பட்டது இந்திய அரசு என்பதே வரலாறு. காங்கிரஸ் ஆட்சியும், பாசக ஆட்சியும் இதில் ஒரே நிலைதான் எடுத்தது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாசக ஆரியத்துவா ஆட்சியை ஆதரித்து பாதாளப் படுகுழியில் விழக் கூடாது என்பதை நாம் எச்சரித்துக் கூறுகிறோம். கவிஞரும் ஐயா பழ. நெடுமாறனும் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பகத்தன்மை உடையதாக இல்லை.

இது மூன்று வகையில் ஆபத்தானது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று வாழ்கிறார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தி ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக வளர்ந்து வரும் தமிழின உணர்வை, தமிழ்த்தேசிய உணர்வை மடைமாற்றி, பாசகவின் பக்கவாத்தியமாக திசைமாற்றும் உத்தி இரண்டாவதாகத் தெரிகிறது.


மூன்றாவதாக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்திய அமைதிப்படையின் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ஆர். அரிகரன், “நெடுமாறன் அறிக்கை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியர்களை உசுப்பிவிட்டு, பிரபாகரன் ஆதரவைப் பெருக்கிவிட வாய்ப்பளிக்கும்” என்கிறார். அதாவது இதன் மூலம் தமிழின உணர்வாளர்கள் மீது அரசு அடக்கு முறையை ஏவிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது. இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் பிறப்பிக்க நெடுமாறன் அவர்கள் அறிக்கை வாய்ப்பளிக்கும்.

இன்னொரு கெடுவாய்ப்பும் இருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் இல்லாத 13-வது சட்ட திருத்தத்தை இந்தியாவின் அழுத்தத்தோடு ஈழத் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களுக்குத் தன்னாட்சி கொடுத்துவிட்டதாக சிங்கள அரசு பசப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

தக்க சான்றுகள் இல்லாமல், தலைவர் பிரபாகரன் வரப்போகிறார் என்று நெடுமாறன் அவர்களும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் கூறுவதை அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை. தமிழ் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இன உணர்வாளர்கள் – உரிமை மீட்பாளர்கள் தங்கள் சிந்தனையைச் சிதறவிடாமல் பணிகளைத் தொடர்வதே சரியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாணிஜெயராமின் காலம் கடந்தும் இருக்கப்போகும் பாடல்கள்

 


கடந்த சனிக்கிழமை காலை(4.02.2023) காலமான பிரபல பின்னணி பாடகிவாணி ஜெயராம் ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் காலம் கடந்தும், மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் முதல் பத்து பாடல்களும் அவற்றின் பின்னணியும்


1. மல்லிகை என் மன்னன் மயங்கும்

1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி பாடலை எழுதியிருந்தார். முத்துராமனும் கே.ஆர். விஜயாவும் இந்தப் பாடலைப் பாடி நடித்திருந்தார்கள். பாடலில் ஆண் குரல் கிடையாது. இதற்கு முன்பாகவே தமிழில் வாணி ஜெயராம் பாடியிருந்தாலும் இந்தப் பாடல்தான் அவரை எல்லோரும் கவனிக்க வைத்தது.


2. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்: 

கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடலை எழுதியிருந்தார். இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகத்தில் இடம்பெற்றிருந்தன. பந்துவராளி, சிவரஞ்சனி, சிந்து பைரவி, காம்போதி ஆகிய நான்கு ராகங்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தன. மிகச் சிக்கலான கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு கட்டியம் கூறுவதைப் போல இடம்பெறும், இந்தப் பாடல் மிக அபூர்வமான இசையையும் வரிகளையும் கொண்டிருந்தது. ஸ்ரீவித்யா இந்தப் பாடலைப் பாடுவதைப் போல திரைப்படத்தில் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார் வாணி ஜெயராம்.


3. மானச சஞ்சரரே: 

சங்கராபரணம் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. ஸ்வாமி சதாசிவ ப்ரஹ்மேந்திரரால் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில் மஞ்சு பார்கவி பாடுவதைப் போல இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. மிக மிக அற்புதமாக பாடப்பட்ட இந்தப் பாடலுக்கும் சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.


4. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது: 

வாணி ஜெயராம் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் முதல் பாடல் இதுவாகத்தான் இருக்கும். கே. ரங்கராஜ் இயக்கத்தில் மோகனும் ராதாவும் நடிக்க வெளிவந்த நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம்பெற்ற பாடல் இது. சங்கர் - கணேஷ் இசையமைக்க, இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். வாணி ஜெயராமின் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது.


5.நானே நானா யாரோ தானா:

 வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் புகழ்பெற்ற மற்றுமொரு பாடல். 1979ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடலை எழுதியது வாலி. ஜெய் கணேஷும் லதாவும் இந்தப் பாடலின் காட்சியில் இடம் பெற்றிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்றிருந்த "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்" பாடலும் கேட்போரை உருக வைக்கக்கூடியது.



6.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ

 ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984ல் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைக்க, கங்கை அமரன் பாடலை எழுதியிருந்தார். ஜெயச்சந்திரனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருந்தார் வாணி ஜெயராம். 80களின் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து, வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது.



7. நினைவாலே சிலை செய்து

 1978ல் வெளியான அந்தமான் காதலி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை கே.ஜே. யேசுதாஸும் வாணி ஜெயராமும் இணைந்து பாடியிருப்பார்கள். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதியிருந்தார். "திருக்கோவிலே ஓடிவா" என்ற வரியை கே.ஜே. யேசுதாஸ் தெருக்கோவிலே ஓடிவா என உச்சரித்ததாக சிலர் உணர்வதுண்டு. ஆனால், வாணி ஜெயராமின் குரல் துல்லியமாக ஒலிக்கும்.


8.என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஏக்கம்

1979ல் வெளிவந்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைக்க கங்கை அமரன் பாடல் எழுதியிருந்தார். தான் இன்னும் சிறப்பான ஒரு வாழ்க்கைக்கு தகுதியானவள் என நினைக்கும் நாயகியின் மன உணர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் கங்கை அமரன். "என் மன கங்கையில் சங்கமிக்க, சங்கமிக்க பங்கு வைக்க, பொங்கிடும் பூம்புனலில், பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின், போதையிலே மனம், பொங்கி நிற்க தங்கி நிற்க, காலம் இன்றே சேராதோ" என்ற வரிகளில் வாணி ஜெயராமின் குரல் அந்த ஏக்கத்தின் உச்சத்தைத் தொடும்.



9.மேகமே மேகமே

1981ல் வெளிவந்த பாலைவனச் சோலை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், தமிழ்த் திரையிசையில் ஒரு அபூர்வமான பாடல். சங்கர் கணேஷ் இசையில் பாடலை எழுதியவர் வைரமுத்து. சுஹாசினியும் சந்திரசேகரும் இந்தப் பாடலில் நடித்திருந்தனர். ஒரு கஸல் பாடலைப் போல ஒலிக்கும் இந்தப் பாடல், 80களின் துவக்கத்தில் இளைஞர்களின் இதய ராகமாக இருந்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற "தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தினம் கனவு எனதுணவு நிலம் புதிது விதை பழுது எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்" என்ற வரிகளை இப்போதும் வாணி ஜெயராமின் அஞ்சலிக் குறிப்புகளில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


10.ஒரே நாள் உனை நான்

1978ல் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைக்க, வாலி பாடலை எழுதியிருந்தார். எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து வாணி ஜெயராம் இந்தப் பாடலை பாடியிருந்தார். கமல்ஹாசனும் ஸ்ரீப்ரியாவும் இந்தப் பாடலில் நடித்திருந்தனர். அந்த காலகட்ட காதலர்களின் தேசிய கீதமாக இந்தப் பாடல் இருந்தது. "நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன், நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன், கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம், மழை நீ நிலம் நான் தயக்கமென்ன" என்ற வரிகள் வானொலியில் ஒலிக்கும்போது மயங்காதவர் இல்லை.


-தனபாலன்

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா- வைரல் வீடியோ

 


உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டது. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள பிரதமர் அலுவலக ஊழியர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் போது சுவையான இனிப்புப் பொங்கலை ருசிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



வீடியோவில், பாதுகாப்புச் சீருடை அணிந்த ஆண்கள் மற்றும் பிற அதிகாரிகள் வரிசையாக அமர்ந்து பொங்கல், அரிசி, வெல்லம் மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்புப் பொங்கலை ருசிப்பதைக் காட்டுகிறது. வாழை இலையில் பரிமாறப்பட்ட இட்லி, சட்னி மற்றும் வாழைப்பழங்களுடன், அவை வெவ்வேறு சுவைகளை ருசிப்பதைக் காணலாம். வேட்டி மற்றும் சட்டை அணிந்த ஒரு நபர் அவர்களிடம் இன்னும் ஏதாவது வேண்டுமா என்று கேட்பதைக் காணலாம்.

மேலும் அதிகாரிகளில் ஒருவர் ‘மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று சொல்வது கேட்கப்படுகிறது. அவர்களில் சிலர் ஸ்பூன்களைப் பயன்படுத்தி உணவை சாப்பிடுவதைக் காணலாம், மற்றவர்கள் தங்கள் கைகளால் சாப்பிட்டார்கள். பன்முகத் தன்மையைக் கொண்ட இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான மதுரை அரிட்டாபட்டி புகைப்படங்கள்

 


மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரிட்டாபட்டி கிராமத்திற்கு சில ஆண்டுகளுக்கு  முன் எழுத்தாளார் முத்துக்கிருஷ்ணனின்  பசுமை நடை குழுவினரோடு சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்கள இந்த கட்டுரையோடு வெளியிட்டுள்ளேன்  

 அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. 

அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை


 தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இப்பறவைகள் தற்போது ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் மிக அரிதாக அரிட்டாபட்டி மலையில் இந்தப் பறவைகள் வசித்து வருகின்றன.இந்தப் பறவைகள் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

வேட்டைப் பறவைகளான கழுகு இனத்தைச் சேர்ந்த இவை மலை உச்சியில் உள்ள பாறைகளின் இடுக்குகளில்தான் கூடு கட்டும். தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் வேறு எங்குமே இந்தப் பறவை இனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமண சிற்பங்கள் நிறைந்தபகுதி..









இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோயில்கள் இங்கே காணப்படுகின்றன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. மலையைக் கடவுளாக வணங்கும் அரிட்டாபட்டி பகுதி மக்கள் இந்த மலையை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது இந்த மகத்தான பணியால் அரிட்டாபட்டி மலை பல உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பாதுகாப்பிட மாகவும் விளங்குகிறது. 

நாளை முதல் நீங்கள்,நான் ..800 கோடியில் ஓருவர்

 


நாளை முதல் நாம் 800 கோடியில் ஒருவர் ஆகிவிடுவோம்..நாளை உலகத்தின் மக்கள்தொகை 800கோடியாக உயருகிறது.

நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்! பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த

 ஜூலை 11-ந்  தேதி, ஐ.நா.வால் வெளியிடப்பட்டது.                 

  அமேசானில் வாங்க

 படத்தை கிளிீக் செய்க

உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை இன்னும் 2 நாட்களில் எட்டப் போகிறோம். பூமிப்பந்து, மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்... 'நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது' என்கிறார். அதேநேரம் ஐ.நா. பொதுச் செயலாளர் கூறும் முக்கியமான எச்சரிக்கை இது... 'உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது' என்கிறார். 


 2050-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.


காளையார் கோயில் அருகே 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டுபிடிப்பு.


 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்  பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறிக்கப்பெற்ற பானை ஓடு  சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

சிவகங்கை  தொல்நடைக் குழு நிறுவநர்  புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன், கள ஆய்வாளர் கா. சரவணன்  பாண்டியன் கோட்டைப் பகுதியில் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு செய்து வந்தோம். கடந்த ஞாயிற்றுக் கிழமை  சரவணன் ஒரு பானை ஓட்டில் கீறல் தெரிவதாக எனக்கு தகவல் தெரிவித்தார். கள மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்ததில் அது தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு என்பது உறுதி செய்யப்பட்டது.

கானப்பேரெயில்.

    காளையார் கோவில் கானப் பேர் என்றும் கானப்பேரெயில் என்றும் இலக்கியங்களில் வழங்கப்படுகிறது. ஐயூர் மூலங்கிழார் எழுதிய புறநானூற்று பாடல் 21, கானப் பேரெயில் கோட்டை. ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் எயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட காப்புக்காடுகளையும் உடையது என்கிறது.


 அமேசானில் இந்த வயர்லெஸ் 

மவுஸ் வாங்க படத்தை கிளிக் செய்க

 

 எச்சமாய் நிற்கும் பாண்டியன் கோட்டை.

  தற்போதும் பாண்டியன் கோட்டை கோட்டைகளுக்கான இலக்கணத்தோடு எச்சமாய் மண் மேடாய் காட்சி தருகிறது. வட்ட வடிவிலான இக்கோட்டையில் ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது. கோட்டையின் நடுவில் நீராவி குளமும் காணப்படுகிறது. 37 ஏக்கரில் இக்கோட்டை  மேட்டுப்பகுதியாக காணப்படுவதோடுஇதன் அருகே உள்ள  ஊரும் மேட்டுப்பட்டி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விடம் முத்து வடுகநாதர் மற்றும் மருது பாண்டியர் காலத்தில் நாணயச் சாலையாக பயன்படுத்தப்பட்டதாக கூறுவர் நான்கு பக்கங்களிலும் வாயிலைக் கொண்ட கட்டிடம் ஒன்று சிதைந்த நிலையில் இன்றும் உள்ளது, அதன் கிழக்கு வாயில் தரைத்தளத்தில் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.

கோட்டைக் காவல் தெய்வங்கள்.

கோட்டை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் தெய்வங்களை வைத்து வணங்குவது மன்னர்கள் மற்றும் மக்களின் இயல்பாக இருந்துள்ளது, அதன் நீட்சியே இன்றும் கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவிலிலும் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் வழிபாட்டில் உள்ளன.


வாள்மேல் நடந்த அம்மன் கோவில்.

பாண்டியன் கோட்டையின் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் உள்ளது,கோவிலில் நடைபெறுகிற திருவிழாவில் ஏழாம் திருநாள், காளையார் கோவிலில் புகழ் பெற்ற காளீஸ்வரர் கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் தொடர்புடையதாக இருப்பது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனுக்கு பொய்ப்பிள்ளைக்காக மெய்ப்பிள்ளை தந்த கதை, விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சொக்கர் மீனாட்சி கருவறைக் கோவில்.

காளையார் கோவிலில் மூன்று சிவன் கருவறைகளும் அம்மன் கருவறைகளும் தனித்தனியாக உள்ளன. இதில் சொக்கர் மீனாட்சி கருவறைக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுண பாண்டியன் என்கிற மன்னன் கட்டுவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இக்கோவில் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்கள் 14ல் ஒன்றாக உள்ளது. மாறா வர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டோடு பிற கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக் கிடைக்கின்றன.

பாண்டியர்களோடு தொடர்புடைய கானப் பேரெயில்.

புறநானூறு குறிப்பிடுகிற படி வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி தொடங்கி, காளையார் கோவில் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் 13ம் நூற்றாண்டில் பணியாற்றிய பாண்டிய அரசு அலுவலர்களின் பெயர்கள்  18 பெயர் குறிப்பிடப்படுவதால் இவ்வூர் பாண்டியர்களோடு நீண்ட காலம் தொடர்பில் இருந்ததை அறிய முடிகிறது.

சங்க காலத்தோடு தொடர்புடைய பொருள்கள்.

 பாண்டியன் கோட்டையில் மிகவும் பழமையான சங்ககால செங்கல் எச்சங்கள், கீழடியில் கிடைத்தது போன்ற கையால் செய்யப்பட்ட மேற் கூரை ஓட்டு எச்சங்கள் மேலும் சிறுவர்கள் விளையாடும் வட்டச் சில்லுகள், விலங்கு விரட்டவோ கவண் எறியவோ பயன்பட்ட  சிறிய அளவிலான உருண்டைக்கல்,பந்து போன்ற மண் உருண்டைகள் போன்றவை மேற்பரப்பு கள ஆய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.

 அமேசானில் இந்த சுமார்ட்பல்ப்பை

 வாங்க படத்தைகிளிக் செய்க

 

 நீராவி குளத்திலிருந்து தோண்டப்பட்டுள்ள வாய்க்கால்.

கோட்டையைச் சுற்றி ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது, மேலும் கோட்டையின் நடுவே காணப்படும் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னாள் இதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள்  நீர் வடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதால் கோட்டையின் நடுவில் உள்ள நீராவி குளத்திலிருந்து வாய்க்கால் வெட்டப்பட்டு பின்னர் அகழியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 

கீழடி போன்று காணப்படும் மண் சுவர்கள்.

நீர் வடிவதற்காக வெட்டப்பட்ட இந்த வாய்க்கால்கள்   4 அடி  ஆழமுடையனவாக உள்ளன. கீழடியில் வெட்டப்பட்டுள்ள அகழாய்வு குழிகளைப் போல இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக்குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு ஆகாய்வுக் குழிகள் போலவே தென்படுகின்றன. இந்த வாய்க்காலில் தான் தமிழி எழுத்து பொறித்த பானையோடு கிடைக்கப்பெற்றுள்ளது.



தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு.

கருப்பு சிவப்பு நிற பானை ஓட்டில் கருப்பிலும் சிவப்பிலும் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது,பானை ஓட்டின் உட்புறம் முழுமையாக கரிய நிறமாக உள்ளது.இவ்வோடு 7 செ.மீ அகலமும் 7 1/2 செ.மீ உயரமும் உடையதாக உள்ளது.ஐந்து எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன, மோ, ச, ர ,ப ,ன்   ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாக தெரிகின்றன.

தொல்லியல் அறிஞர்கள் கருத்து  

எழுத்துகள் தெளிவுற வாசிப்பதற்காக தொல்லியல் அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டதில் அவர்கள்ஐந்து எழுத்துகள்  மோ, ச, ர ,ப ,ன்   போன்று வெளிப்படையாக தெரிந்தாலும் ர என்கிற எழுத்து த வாக இருக்கலாம் சற்று ஒரு கோடு சிதைவுற்று இருக்கலாம்.மோசதப[ன்]*மோசிதப[ன்] என்று இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சங்ககாலத்திலே மோசிகீரன் என்ற பெயர் வழக்கில் உள்ளதால் மோசிதபன் என்று கருதவும் இடம் உண்டு.

முறையான அகழாய்வு.

 இவ்விடத்தில் முறையான அகழாய்வை தமிழக அரசு தொல்லியல் துறை மேற்கொண்டால் பழமையான கானப்பேர் என அழைக்கப்படும் காளையார் கோவிலின் தொன்மையும் பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்களும் தமிழகத் தொன்மையும் வெளிப்படும்.

சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு.

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைக்கப்பெற்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓட்டை அதன் தொன்மையும் பெருமையும் பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க சிவகங்கை தொல்நடைக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன் உடன் இருந்தார் என்று தெரிவித்தார்.

 

ஜெ. மரண அறிக்கையின் இறுதி பக்கத்தில் இருந்த திருக்குறள் !!!!


 ஜெ.மரண அறிக்கையில்  இறுதி பக்கத்தில் உள்ள திருக்குறளின் அர்த்தம் இது தான்.

   சட்டசபையில் இன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் அதிமுவுக்கும் , தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.



        ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த  களிறு" என்ற திருக்குறள்  இடம் பெற்றுள்ளது.


 அமேசானில் இந்தபொருளை வாங்க படத்தை கிளிக் செய்க

இந்த  திருக்குறளின்  விளக்கம் என்னவென்றால் "வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற  ஆற்றல் படைத்த யானை ,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக்கொன்று விடும்" என்பதாகும்.இந்த குறள் மூலம் யானைபோன்ற பலமிக்க ஜெயலலிதாவை  நரிகள் போன்ற சிலர் சேர்ந்து கொன்று விட்டதாக மறைமுக   பொருளும் அடங்கி இருக்கிறது


சீனாவின் பறக்கும் கார் ....காரை வாங்க நீங்க ரெடியா?

 


சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத்  என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது.

  சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.  எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் . 

   இந்தபொருளை அமைசானில் வாங்க படத்தை கிளிக்செய்க

  முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டு உள்ளன. 


 துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டது. அதில் ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டது அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளம் ஆக இந்த சோதனை அமையும் என அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கும் காரை வாங்க நீங்க ரெடியா?


ராஜராஜன் காலத்தில் இந்துமதம் இல்லை..கமல் பேச்சு


ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது  அது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர் என்று நடிகர் கமல்ஹாசன்  கூறியுள்ளார்.

 இந்த பொருளை அமைசானில் வாங்க படத்தை கிளிக் செய்க...


   

பொன்னியின் செல்வன்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கமல் பேசும் போது  ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்திருக்கிறார்கள். தமிழ், நாம் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க வந்திருக்கின்றனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்த்த போது ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும். இந்தப் படத்தின் தொடக்கத்தில் பொற்காலம் பற்றி என் குரலில் ஒரு வசனம் வரும். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்ட உணர்வு எனக்கு ஏற்படுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக பெருமிதம் கொள்ள வைக்கிறது.என்றார்.



  திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதும் தொடர்ந்து நடைபெறுவதாக இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.இது குறித்து நடிகர் கமலிடம் கேட்கப்பட்டது.

 இந்த செய்தியோடுதொடர்புடைய தகவல்கள்

இணைப்பை கிளிக்செய்து படிக்கவும்

1.ராஜராஜசோழன் எந்தசாதிக்காரன்

2.பொன்னியின்செல்வன் படம் பார்க்கும் முன்

3.பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வால்நட்சத்திரத்தின்பெயர் என்ன


  இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம் என இருந்தது. சைவம் என இருந்தது. சமணம் எனஇருந்ததே தவிர அது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர். நம்மை என்ன சொல்வது என தெரியாமல் அவர்கள் வைத்த பெயர்.. தூத்துக்குடியை டூட்டிகொரின் என சொன்ன மாதிரி.  வெவ்வேறு மதங்கள் இருந்தன. கி.பி.8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மதம்னு ஸ்தாபிதம் பண்றார். இதெல்லாம் சரித்திரம். அந்த சரித்திரத்தைப் பற்றி இங்க சொல்லக் கூடாது. இந்த படம் சரித்திரப் புனைவுபற்றியது.. இங்கு சரித்திரத்தை திணிக்க வேண்டாம். மொழி பிரச்சனையை இங்க கொண்டுவரவும் வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


பொன்னியின் செல்வனில் தோன்றும் வால்நட்சத்திரத்தின் பெயர் என்ன?


பொன்னியின் செல்வன் படத்தில் துவக்கத்திலிருந்தே ஒரு வால் நட்சத்திரம் தோன்றும். அப்படி தோன்றினால் அது அரசு குலத்திற்கு ஆகாது என்பது  நம்பிக்கை. அந்த நம்பிக்கை தற்போதும் உள்ளது தான். படம் முழுவதும் தோன்றும் அந்த வால் நட்சத்திரம் பகலிலும் தெரியும் அளவுக்கு பெரிதாக காட்டப்படும். பொன்னியின் செல்வனில் நிகழும் சோழர்களின் வரலாறு கிட்டதட்ட 1000 ஆண்டுகள் பழமையானது . அப்போது தோன்றிய வால்நட்சத்திரத்தை பற்றி பெயர் எதுமில்லை.வால்நட்சத்திரத்தை "தூமகேது" என நம் தமிழ் இலங்கியங்கள் அழைக்கின்றன.


 வால்நட்சத்திரங்கள் சூரியமண்டலத்தின்  உள்ள "ஊர்ட்மேகம்" என்ற பகுதியிலிருந்து  வருகிறது. அதாவது சூரியனை சுற்றுகிற தனது பாதையில் நம் பூமியை கடந்து செல்லும்போது நம்கண்களுக்கு தெரிகிறது. பல வால்நட்சத்திரங்கள் அவ்வப்போது  வந்து செல்வது வழக்கம் தான். ஆனால் சில பெரிய புகழ்பெற்ற வால்நட்சத்திரங்கள் உண்டு.அதில் ஹோலி வால்நட்சத்திரம் மிக முக்கியமானது.


=========


         படத்தில் வந்தியத்தேவனும் பூங்குழலியும் பேசிக்கொள்வது...

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று பூங்குழலி கேட்டாள்.

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.   

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே!"    

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."    

"நீ என்ன சொல்லுகிறாய்?"    

"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்." சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.

============



 மற்றொரு இடத்தில் வந்தியத்தேவனும் சோதிடரும் பேசிக்கொள்வது.


வந்தியத்தேவன்  , "சோதிடரே! வால் நட்சத்திரம் எப்படி இருக்கிறது?" என்று வினவினான். 

"மிகமிக நீளமாகப் பின்னிரவு நேரங்களில் தெரிகிறது. இனிமேல் நீளம் குறைய வேண்டியதுதான். தூமகேதுவினால் விபத்து ஏதேனும் ஏற்படுவதாயிருந்தால், அதிசீக்கிரத்தில் அது ஏற்பட்டாக வேண்டும். கடவுளே! இராஜகுலத்தில் யாருக்கு என்ன நேரிடுமோ என்னமோ!" என்றார் சோதிடர்.   

 வந்தியத்தேவனுடைய உள்ளம் அதிவேகமாக அங்குமிங்கும் பாய்ந்தது. தஞ்சையில் பாரிச வாயு பீடித்துப் படுத்த படுக்கையாயிருக்கும் சுந்தர சோழரும், நாகைப்பட்டினத்தில் நடுக்குசுரம் வந்து கிடக்கும் பொன்னியின் செல்வரும், கடம்பூர் மாளிகையில் நந்தினியைச் சந்திக்கப் போகும் ஆதித்த கரிகாலரும், இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டு மக்களின் கோபத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் மதுராந்தகரும், கையில் கொலை வாளை வைத்துக்கொண்டு கொஞ்சும் நந்தினியும் அவனுடைய உள்ளத்தில் வரிசையாகப் பவனி வந்தார்கள்.

இதுபோல பொன்னியின் செல்வன் நாவலிலுள்ள ஐந்து பாகத்திலும் வால் நட்சத்திரம் குறித்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.

  அமேசானில் வாங்க படத்தைகிளிக் செய்க

=========


ஹாலி வால் நட்சத்திரம்

ஹாலி வால் நட்சத்திரம் ஒவ்வொரு 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமிக்கு அருகில் வந்துசெல்கிறது. பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்கக் கூடியனவற்றில் குறைந்த கால இடைவெளியில் பூமிக்கு அருகில் வந்துசெல்லும் ஒரே வால் நட்சத்திரம் ஹாலி வால் நட்சத்திரம்தான்.

வால் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள், கி.மு. காலத்திலிருந்தே கிடைக்கின்றன. சீனர்கள், பாபிலோனியர்கள் என்று பலரும் இதைப் பற்றி பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் எட்மண்ட் ஹாலி.


 அதனால்தான், அதன் பெயர், ‘ஹாலியின் வால் நட்சத்திரம்’!1910க்கு பிறகு 1986 பிப்ரவரி 9: வந்து சென்றது ஹாலி வால் நட்சத்திரம் பூமியில் தெரிந்தது.மீண்டும் 2061 ல் பார்க்கலாம்.

       இந்த ஹாலி வால் நட்சத்திரம் தான் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்தில் தோன்றியதாக இருக்கலாம்.

பொன்னியின் செல்வன் படம் பார்க்கும் முன் ...

 


கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது.

 கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

 

     நடிகர் எம்.ஜி.ஆர்.கமல்ஹாசன்  முயற்சித்து கைவிடப்பட்ட நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரஉள்ள இத்திரைப்படத்தை பார்க்கும் முன் இந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வீக்கி பீடியா உள்ளிட்ட பல இணைய தளங்களில் வந்துள்ள தகவல்களின் இணைப்பு கொடுத்துள்ளேன்..



 இணைப்புகளை கிளிக் செய்து பார்க்கலாம்...


1.வீக்கிபிடியா

 2.கதையை பிடிஎப் பாக டவுன்லோட் செய்ய

3.பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு

4.பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்

5.பொன்னியின் செல்வன் கதை 

6.வீடியோவாக பார்க்க

7 வீடியோ




அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் வேண்டாம்...பீட்டா!!


அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பீட்டா அமைப்பு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பீட்டா அமைப்பு, மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், மாமிசம் சாப்பிடும் ஆண்கள் 41 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிடுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நகர்ப்புறத்தில் வாழும் ஆண்கள் ஒரு கையில் பீர் பாட்டில்களுடன், அசை உணவை சாப்பிடுவார்கள். 
 மாமிசத்தை சாப்பிடுவதன் மூலம் தனது பெருமையை மற்றவர்களிடம் காட்டுவதற்கு ஆண்கள் விரும்புகின்றனர்.



இறைச்சி சாப்பிடுவதனால் மிருகங்களை துன்புறுத்துவது மட்டுமல்லாமல் பூமிக்கும் கேடு செய்கின்றனர் என பீட்டா தெரிவித்துள்ளது. ஆண்கள் தங்களது செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். தற்போது பருவநிலை மாற்ற பிரச்னைகள் அதிகரித்து வருவதற்கு ஆண்கள்தான் முக்கிய காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகள் ஆரோக்கியமான பூமியில் வாழ விரும்பும் அப்பாக்கள்தான் மாமிசத்தை சாப்பிடாமல் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பீட்டா கூறியுள்ளது. பீட்டாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.