பிரதான செய்திகள்

கபாலி மோசடி! - தினமணி தலையங்கம்

மிகப்பெரிய எதிர்பார்ப்பை செயற்கையாக உருவாக்கிக் கடந்த ஒரு வார காலமாக, ஊரெல்லாம் அதே பேச்சு என்பதாக "கபாலி', "கபாலி' என்று முழங்கிய ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம், அதற்கு முந்தைய கோச்சடையான், லிங்கா வரிசையில் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. திரைப்படம் வெற்றிப் படமா, தோல்விப் படமா என்பதல்ல பிரச்னை. ஒரு திரைப்படத்திற்கு இந்த  அளவுக்கான பரபரப்பும், அதிக அளவிலான கட்டணமும் சரியானதுதானா என்பதுதான் கேள்வி.
ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் "கபாலி ஜுரம்' என்று வர்ணிக்கப்பட்டு வெளியான தகவல்கள் தலைசுற்றலை ஏற்படுத்தியது. இதற்கு முன் எந்தவொரு இந்தியத் திரைப்படத்திற்கும் இல்லாத
அளவிலான சமூக வலைதளங்களின் மூலமான பரப்புரைகளும், செய்திகளும் ஏதோ யுகப் புரட்சியோ, சினிமா சுனாமியோ ஏற்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கின.
பெருநகரங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை சராசரி ரூ.600 என்று கூறப்படுகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக ரூ.1000 கொடுத்து "கபாலி'
திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தன.

காபாலி தோல்வியடைய வேண்டும் ஏன் ?

 
காபாலிக்கு  படத்திற்கு உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்பார்ப்பை உருவாக்க முயற்சிக்கிறா ர்கள்.அவரது முந்தைய இரண்டு படங்கள் கோச்சடையான்,லிங்கா படுதோல்வியடைந்தது. அந்த படங்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு பல திரையரங்க உரிமையாளர்கள்  போராடினார்கள். ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. லிங்கா பட வினியோக உரிமையில் கூட சில நிறுவனங்கள்  தொடுத்த சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.
                    இப்படி ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியே அவரது பட வெற்றி என்பது இயக்குனர்களின் வெற்றியாக மட்டுமே இருக்கும். எந்திரன் படத்தின் வெற்றி சங்கரின் வெற்றி .ரஜினியின் இடத்தில் வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் கூட படம் வெற்றி உறுதி .மேலும் அந்தபடம் சன் பிக்சர் படம் .அவர்கள் செய்த விளம்பரம் வெற்றிக்கு முக்கிய காரணம்.

அட்ரா மச்சான் விசிலு - ரஜினிக்கு எதிரான படமா ?

ரஜினிக்கு எதிராக எடுக்கபட்ட படமாகவே அட்ரா மச்சான் விசிலு படம் தெரிகிறது.சூப்பர் ஸ்டார் என்பதற்கு பதிலாக பவர் ஸ்டார் என மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி நேரடியாகவே ரஜினியை மையமாக வைத்து எடுக்கபட்ட படம். ரஜினியின் பல படங்கள் ப்ளாப் ஆன போது நஷ்ட ஈடுகேட்டு வினோகஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள் பலர் ரஜினி எதிராக திரண்டார்கள். இப்போதுகூட கோச்சடையான் விவகாரம் காரணமாக லதா ரஜினி காந்த மீது ஒரு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. இவற்றை மையப்படுத்த்தி எடுக்கபட்ட படம். சினிமா நடிகர்கள் மீது பைத்தியமாக அலையும் இளைஞகர்களை பற்றிய படம்.

கதைசுருக்கம்...
மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் சிவாவும் நாயகி நைனா சர்வாரும் காதலித்து வருகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாத சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டாரின் ரசிகர்களான நண்பர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதை, அவ்வப்போது போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார்.

அப்பா....சூப்பர்ப்பா!!!!

"அம்மா பத்துமாதம் தான் குழந்தையை வயிற்றில் சுமக்கி றாள்.அப்பா கடைசி வரை மனதில் சுமக்கிறார் " என்பார்கள். உண்மை தானே?.
அம்மாவின் பாசதத்திற்கு சற்றும் குறைந்தல்ல அப்பாவின் பாசம் என்பதை மிக சரியாக சொல்லியிருக்கிறது படம்.மிக நிண்ட நாட்களுக்கு பிறகு நல்லபடம் பார்த்த திருப்தி.
வழக்கமான படம் அல்ல.  கதாநாயகனை முன் வைத்து எடுக்கபட்ட படமல்ல. கவரச்சி ஆட்டம் இல்லை. ஆனால் கதை இருந்தது.
             ஒரு அப்பா தன் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். எப்படி வளர்க்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடவேண்டும் என்பதை அழகாக சொல்லி செல்கிறது படம்
               மேலும் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள கல்வி எந்த அளவுக்கு குழந்தைகளையும் ,பொற்றோர்களையும் பாடாய்படுத்துகிறது. கல்வி நிறவனங்களின் கட்டண கொள்ளை. தங்கள்  கல்வி நிறுவனம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை படுத்தும் பாடு.தன் பிள்ளை 100/100 எடுக்க வேண்டும் என நினைக்கும் பொற்றேருக்கு சசிக்குமார்( படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்) சொல்லும் அறிவுரை..."எல்லாரும் 100/100  வாங்குன 90,80.70 மார்கெல்லாம் யார் வாங்குறது.சாதணமான மாணவர்கள் தான் பிற்காலத்தில் சாதித்திருக்கிறார் என்பதையும் மிக அழகாக சுட்டி காட்டுகிறார்.