அட்ரா மச்சான் விசிலு - ரஜினிக்கு எதிரான படமா ?

ரஜினிக்கு எதிராக எடுக்கபட்ட படமாகவே அட்ரா மச்சான் விசிலு படம் தெரிகிறது.சூப்பர் ஸ்டார் என்பதற்கு பதிலாக பவர் ஸ்டார் என மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி நேரடியாகவே ரஜினியை மையமாக வைத்து எடுக்கபட்ட படம். ரஜினியின் பல படங்கள் ப்ளாப் ஆன போது நஷ்ட ஈடுகேட்டு வினோகஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள் பலர் ரஜினி எதிராக திரண்டார்கள். இப்போதுகூட கோச்சடையான் விவகாரம் காரணமாக லதா ரஜினி காந்த மீது ஒரு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. இவற்றை மையப்படுத்த்தி எடுக்கபட்ட படம். சினிமா நடிகர்கள் மீது பைத்தியமாக அலையும் இளைஞகர்களை பற்றிய படம்.

கதைசுருக்கம்...
மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் சிவாவும் நாயகி நைனா சர்வாரும் காதலித்து வருகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாத சிவாவுக்கு அவ்வப்போது பண உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், அப்புக்குட்டி ரசிகர்களுக்கும், பவர் ஸ்டாரின் ரசிகர்களான நண்பர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதை, அவ்வப்போது போலீஸ் அதிகாரியான ராஜ்கபூர் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கிறார்.

ஒருமுறை ராஜ்கபூர், சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு உங்களை வைத்து உங்கள் தலைவர் பெரிய நிலைக்கு ஆளாகிவிட்டார். அவரை வைத்து நீங்கள் ஏன் பெரிய நிலைக்கு வரக்கூடாது. அவருடைய படங்களை வாங்கி, மதுரை ஏரியாவில் விநியோகம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். நண்பர்களும் அவரது அறிவுரையை ஏற்று, பணத்தை திரட்டி பவர் ஸ்டாரின் மேனேஜரான சிங்கமுத்துவிடம் ஒப்படைக்கிறார்கள்.

 இந்த படம் குறித்து விகடனில் வந்த தகவல்.....
தலைப்பை கிளிக் செய்க....

அட்ரா மச்சான் விசிலு ரஜினியை அவமதிக்கும் படம்?


சிங்கமுத்துவும் மதுரை ஏரியா விநியோகஸ்தர் உரிமையை சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு கொடுக்கிறார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் நண்பர்கள் நஷ்டமடைகிறார்கள். இழந்த பணத்தை திருப்பி கேட்பதற்காக பவர் ஸ்டாரை நேரில் சந்திக்கிறார்கள். ஆனால், பவர் ஸ்டாரோ பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என கூறி இவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார்.
இதனால் மனமுடைந்த நண்பர்கள் தங்கள் பணத்தை பவர் ஸ்டாரிடமிருந்து மீட்டு அவருக்கு நல்ல பாடம் புகட்ட எண்ணுகிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
கதை இது தான் உண்மையில் இது ரஜினி எதிரான படமா?இல்லையா ?என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments