17 ஜூலை, 2016

காபாலி தோல்வியடைய வேண்டும் ஏன் ?

 
காபாலிக்கு  படத்திற்கு உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்பார்ப்பை உருவாக்க முயற்சிக்கிறா ர்கள்.அவரது முந்தைய இரண்டு படங்கள் கோச்சடையான்,லிங்கா படுதோல்வியடைந்தது. அந்த படங்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு பல திரையரங்க உரிமையாளர்கள்  போராடினார்கள். ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. லிங்கா பட வினியோக உரிமையில் கூட சில நிறுவனங்கள்  தொடுத்த சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.
                    இப்படி ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியே அவரது பட வெற்றி என்பது இயக்குனர்களின் வெற்றியாக மட்டுமே இருக்கும். எந்திரன் படத்தின் வெற்றி சங்கரின் வெற்றி .ரஜினியின் இடத்தில் வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் கூட படம் வெற்றி உறுதி .மேலும் அந்தபடம் சன் பிக்சர் படம் .அவர்கள் செய்த விளம்பரம் வெற்றிக்கு முக்கிய காரணம்.


ரஜினி என்ன செய்தார்...

 ராகவா லாரனஸ் தன் வருமானத்தில் பாதியை நலதிட்டங்களுக்கு செலவிடுகிறார். அகரம் அமைப்பு மூலமாக சூர்யா குடும்பம் கல்விக்கான நிலத்திட்டங்களை செய்கிறாது. கமல் தன் ரசிகர் மன்றங்கள் மூலம் தன் பிறந்த நாளுக்கு சில உதவிகளை செய்கிறார். அவ்வளவு ஏன் நேற்று சினிமா உலகத்துக்கு வந்த நடிகை ஹன்சிகாமேட்வானி ஆனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். சமீபத்தில் கூட தெருவோர படுத்திருக்கும் மக்களுக்கு போர்வை,பாய் ,கம்பளி கொடுத்திருக்கிறார். இதே போல விஜய்,அஜித் ,பல நடிகர்,நடிகைகள் பல உதவிகளை செய்கிறார்கள். படத்தில் தன் சொத்துக்களை ஏழைகளுக்கு கொடுக்கும் ரஜினி நிஜத்தில்   என்ன செய்தார். முன்பெல்லாம் அரசியலுக்கு வருவதாக சொல்லி ஏமாற்றும் ரஜினி இப்போது வேறுவிதமாக ஏமாற்றுகிறார்.


ரஜினி பற்றி மேலும் சில பதிவுகள்....

1. ரஜினி .... வாழும் பென்னிகுக்கா?

2. ரஜினி வருவாரா, வர மாட்டாரா?

3. ரஜினி என்னும் வியாபாரி..


நதி இணைப்பு 1 கோடி என்னாச்சு....

               பல ஆண்டுகளுக்கு முன் நதி இணைப்பு பற்றிய பேச்சு வந்த போது நதிநீர் இணைப்புக்கு 1 கோடி தருவாத வாக்குறுதி அளித்தார் ரஜினி. சமீபத்தில்கூட அவரது அண்ணன் நதி இணைப்புக்கான பணம் உரிய நேரத்தில் ஒப்படைக்கபடும் என மீண்டும் அல்வா கொடுத்தார்.
               லிங்கா படபிடிப்பின் போது உடல் நல குறைவு எற்பட்டு மலேசியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டார் ரஜினி. அப்போது அவர் நலமாக திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும்,பொதுமக்களும் பிரார்தித்தார்கள் அப்போது  தன் செலவில் இலவச மருத்துவமனை கட்டித்தருவேன் என்றார் ரஜினி அது காற்றில் கரைந்த போனாது தான் மிச்சம்.

விலை குறிப்பிடாமல் 'கபாலி' டிக்கெட்....


காபாலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது. சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்தன.
மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சில திரையரங்குகளில் விலை என்ன என்பதை பிரின்ட் செய்யாமலேயே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் விலை இல்லை என்பதால் என்ன விலை வேண்டுமானாலும் விற்கலாம் என்பதுதான் இதற்கு காரணமாம்.
'கபாலி' படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு பலரும், என்ன இவ்வளவு விலையா என்று தங்களது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
               இப்போது சொல்லுங்கள் காபாலி தோல்வியடைய வேண்டுமா ?
இல்லையா?

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...