உங்கள் மரண தேதி தெரிந்து கொள்ள...


மனிதர்களின் மரண தேதியை சில நொடிகளில் கணித்து சொல்லிவிடும் அதிபயங்கர திகில் வெப்சைட் இன்டர்நெட் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
          பிறப்பின் போதே நிச்சயிக்கப்படுவது மரணம் தான். இந்த மரணத்தை வெல்வதோ, தள்ளிப்போடுவதோ அல்லது மரணநாளை தெரிந்து கொள்வதோ முடியாத ஒன்றாகும். மதம் சார்ந்த நம்பிக்கையில் இறைநியமத்தின் படி  மனிதர்களுக்கு நிச்சயிக்கப்படும் மரண தினத்தை இன்றுவரை யாரும் அறிந்தது கிடையாது. அவரவர்கள் பலாபலன்களுக்கு ஏற்ப இயற்கை அல்லது அகால மரணங்கள் நடை பெற்று வருகின்றன.                    இதனிடையே எவராலும் கணிக்க முடியாத மரணநாளை சிலநொடிகளில் கணித்து கூறிடும் டெத்டேட்(deathdate ) எனும் வெப்சைட் இன்டர்நெட்டில் அதிபயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மண்டை ஓடு படத்துடன் கோரமாக காட்சியளிக்கும் இந்த வெப்சைட்டில் மரணநாளை தெரிந்து கொள்ள ஆவலுடன் நுழைவோருக்கு முதலில் மரண விண்ணப்ப படிவம் கொடுக்கப்படுகிறது.

அதில் பெயர், பிறந்த தேதி,நாள், பாலினம் உயரம், எடை மற்றும் சிகரெட்,மது,போதை பொருள் பழக்கம் குறித்த விபரங்கள் கேட்கப்படுகிறது. இதனை முறையாக நிரப்பி டெத்டேட் இணையதளத்தில் சமர்ப்பிப்பவர்களுக்கு அவர்களின் மரணநாள் திரையில் தெரிகிறது. அத்துடன் விண்ணப்பிப்பவர்களின் வாழ்நாளை மதிப்பிட்டு கவுண்ட்டவுன் டெத்கிளாக் ஓடத்தொடங்கிவிடுகிறது.


மரணத்தை கணித்து கூறம் டெத்டேட் வெப்சைட் 


டெத்டேட் வெப்சைட்டில்  தரப்படும்  மரணவிண்ணப்பம்


நிச்சயிக்கப்பட்ட மரண தேதி பகுதி
                         
                   முற்றிலும் புதுமையாக மனிதர்களின் மரணதேதியை இந்த டெத்டேட் வெப்சைட் கணித்து  கூறிவருவது இன்டர்நெட் பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையவைத்து விடுகிறது. மரண தேதி குறைந்த நாளில் வந்துவிடுகிறது என்றால் மனஉளைச்சலும், மரணம் நீண்ட காலத்திற்கு பிறகு வருகிறதென்றால் வாழ்விலே சலிப்பும் உண்டாவதாக பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

டெத்டேட் வெப்சைட் முகவரி -  http:// deathdate.info/


மரண தேதியை எவ்வாறு இந்த இணையதளம் கணக்கிடுகிறது. இதை யார் இயக்குகிறார்கள் என தேடிச்சென்றால் நாங்கள் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும் உங்களுக்காக இந்த வெப்சைட்டை மேலிருந்து இயக்குகிறோம் என பீதியை கிளப்பும் தகவல் வருகிறது. எனவே மரண நாளை முன்கூட்டியே கணித்து சொல்லும் டெத்டேட் வெப்சைட்டை பார்ப்பவர்கள் அதில் வரும் தகவல்கள் குறித்து யோசித்து கொண்டிருப்பது தேவையற்றது.

-செல்வராஜ்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

வலைஞன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த தளம் சில வருசங்களாகவே இருக்கே!

இதன் படி நான் செத்தே பலவருசமாச்சு.

இப்போ ஆவியா இருக்கேன்:-))))