உங்கள் வாழ்நாளை குறைக்கும் சாலையோரக்கடைகள் .....


சாலையோரக்கடைகளில் விற் பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் சூடான பஜ்ஜி வகைகள், பகட்டான பேக்கரி களில் விற்கப்படும் பிஸ்ஸா, சாக்னா கடைகளில் விற்கப்படும் புரோட்டாக் கள் ஆகியவை நமக்கு நேரத்தையும் சிர மத்தையும் குறைக்கும் என்பதில் எவ் வித கருத்து வேறுபாடும் இருக்க முடி யாது. ஆனால் அவை ஒரு மனிதனின் வாழ்நாளைக் குறைப்பதில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறிந் திராத உண்மையாகும். இந்தியாவில் அதிக ரத்த அழுத்தம் உள்ள இளைஞர்கள் ஏராளமாக உள்ள னர். நகர்ப்புற இளைஞர்களில் 20 முதல் 40 விழுக்காட்டினரும், கிராமப்புற இளை ஞர்களில் 12 முதல் 17 விழுக்காட்டின ரும் ரத்த அழுத்த வியாதிக்கு ஆளாகி யுள்ளனர். இந்திய உணவு பழக்கங் களும், சோம்பலான வாழ்க்கை முறை யுமே இதற்கு காரணம் என்று மருத்து வர்கள் கூறுகின்றனர்.
சோம்பலான வாழ்க்கை எந்த அளவுக்கு அதிகரித்தி ருக்கிறது என்றால் தங்களுக்கு தேவை யான உணவுகளை ஆரோக்கியத்துடன் பாரம்பரிய முறையில் தயாரிப்பதற்கு கூட முடியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது.நம்மில் பெரும்பாலானோர் உணவு வேளைக்கு இடைப்பட்ட வேளை களில் நொறுக்கு தீனிகளையும், சமோ சாக்களயும் கொறித்து பொழுதைக் கழிக்கிறோம். பெரும்பாலான பொழுதை தொலைக்காட்சி பெட்டி முன் வீணாக் குகிறோம் .

உடலை வருத்தி உழைப்ப தற்கோ, உடற்பயிற்சிகளுக்கோ நாம் தயாராக இல்லை என்று மெடாண்டா தி மெடிசிட்டி இருதய ஆலோசகர் ரவி காஸ்லிவால் குற்றம் சாட்டுகிறார். 120 கோடி மக்கள் தொகையுடைய இந்தியா வும், அதன் அதிகரித்து வரும் நடுத்தர வர்க்கமும் தன்னுடைய துரித உணவு களை விற்பதற்கு பொருத்தமான சந்தை என மக்டொனால்ட் கருதுவதில் வியப்பில்லை.பக்கவிளைவுகள்துரித உணவுகளால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இருதய நோய், ஈரல் நோய்கள், உடல் எடை கூடுதல் ஆகியவை அதிகரிக்கும் வாய்ப் புகள் ஏராளம் என்று மருத்துவர்கள் எச் சரிக்கின்றனர். உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்கவும், தங்களு டைய உடல்திறனை தேவையான அள வுக்கு தக்கவைத்துக் கொள்ளவும் துரித உணவுகளை தவிர்ப்பது சாலச் சிறந் தது என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். நொறுக்குத் தீனிகளில் ஏராளமான சர்க்கரையும் கொழுப்பும் உள்ளது என் பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு சிகப்பாக ,


முறு கலாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் சர்க்கரையும் கொழுப்பும் மிகுந் திருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரையும் கொழுப்பும் அதிகரிப்பதால் சுரக்கும் ஸீரமும், இன்சுலினும் உடலின் மற்ற அங்கங்களில் எரிச்சலை உருவாக்கும். ஹார்மோன்களின் சமநிலையை பாதிக் கும். துரித உணவுகள் தொப்பையை உரு வாக்கும், அதிகரிக்க வைக்கும்.அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்திய உணவகத்தில் தயாரிக்கப்பட்ட கரித்துண்டுகளில் பொறிக்கப்பட்ட தந்தூரி கோழியில் 1192 கலோரி இருப்பது தெரியவந்தது. மற்ற உணவகங்களில் தயாரிக்கப்பட்ட தந் தூரி கோழியில் 2921 கலோரி இருப்பது அறியப்பட்டது. எண்ணெயில் ஊற வைக்கப்பட்ட கோழியில் இருக்கும் கலோரிகள் தயிரில் ஊற வைக்கப்பட்ட கோழியில் இருக்கும் கலோரிகளை விட அதிகமாகும் என்று கண்டறியப்பட்டுள் ளது.

துரித உணவுகளில் கிடைக்கும் கலோரிகளை எரிக்க முடியாத மனித உடல் அவற்றை கொழுப்புகளாக மாற்றி உடலில் சேமித்து வைக்கின்றது. அவை பின்னர் உயிருக்கு எமனாக மாறுகிறது.துரித உணவுகளில் சுவைக்காக சேர்க் கப்படும் அஜினோமோட்டோ என்ற மசாலாவில் சோடியம் ஏராளமாக உள் ளது. இது ஒரு சீன மசாலாவாகும். சீனா வில் சோடியம் ஒரு பற்றாக்குறையான பொருளாகும். அங்கு உற்பத்தியாகும் தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இயற்கை தரும் சோடியம் குறைவான தாகும்.
சீனாவில் தயாராகும் உப்பில் கூட சோடியத்தின் அளவு இந்திய உப் பில் உள்ளதை விட குறைவாகும். இதை ஈடுகட்ட அஜினோமோட்டோவில் கூடு தலாக சோடியம் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக சோடியம் சேர்த்துக் கொள்வதால் இருதயம் பாதிப்புக்குள் ளாகிறது. சோடியத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. சிறுநீரகத்தின் வேலை கடினமாகிறது. ரத்த அழுத்தம் அதி கரிப்பதால், பக்கவாதம், மாரடைப்பு, இருதய செயலிழப்பு, சிறுநீரகக் கோளாறு கள் போன்ற வியாதிகள் அதிகரிக்கும். ஒரு நபர் நாளொன்றுக்கு 2300 மில்லி கிராமுக்கு குறைவாகவே அதாவது ஒரு தேக்கரண்டிக்கும் குறைவான சோடி யத்தை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின் றனர். இருதய நோய், உயர் ரத்த அழுத் தம் உடையவர்கள் 1500 மில்லி கிரா முக்கும் குறைவான சோடியத்தை உட் கொள்ள வேண்டும் என்றும் சொல்கின் றனர். ஆண்டொன்றுக்கு சோடியம் கார ணமாக ஆண்டு தோறும் 23லட்சம் பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என விரும்புவோர் தங்கள் உணவைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதை விட தங்கள் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும், வீடுகளில் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவு களை உண்ணுவதை கட்டாயமாக கொள்ள வேண்டும். அபாயமான விளை வுகளை உருவாக்கக்கூடிய நொறுக்கு தீனிகளை பிரபலப்படுத்தும் விளம்பரங் களுக்கு ஊடகங்களில் தடை விதிக்க வேண்டும்.

 -தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை தான்... வாயைக் கட்டுப்படுத்த வேண்டும்... பேச்சிலும் கூட...!
Jayadev Das இவ்வாறு கூறியுள்ளார்…
thanks.
Aasai இவ்வாறு கூறியுள்ளார்…
``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.