19 அக்., 2012

தமிழ்சினிமாவில்முதன்முதலாக ஒரு கோடி சம்பளமாக பெற்ற நடிகர்


தமிழ்சினிமாவில்முதன்முதலாக ஒரு கோடியை சம்பளமாக பெற்ற நடிகர் இவர்தான். நடிகை மீனாவை, சங்கீதாவை, கதாநாயகிகளாக அறிமுகப்படுத்தியவர். வைகை புயல் வடிவேலுவை சினிமாவுக்கு கொண்டுவந்தவர் ராஜ்கிரண் ராமநாதபுரத்து க்காரரானராஜ்கிரண் கிரசன்ட் மூவீஸ் நிறுவனத்தில் பிலிம் ரெபரசன்டிவ்வாக - அதாவது ஊர் ஊராக படப்பெட்டி எடுத்துச் சென்று கொடுப்பது, எத்தனை நாள் எத்தனை காட்சிகள் படம் ஓடியது, அதன் வசூல் எவ்வளவு போன்றவை பார்த்து வாங்கிவரும் வேலையில் சுமார் ஐந்துவருடங்கள் உழைத்து சினிமைவை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்கிற பல்ஸ் தெரிந்தவர்.அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய போது அவர் கையில் ஆறாயிரம் கொடுத்து அனுப்பியது. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டும் நம்பிக்கையுடன் திரைப்பட விநியோகஸ்தர் தொழிலை மேற்கொண்டஅதில் சம்பாதித்த பணத்தில் ராமராஜனை வைத்து இரண்டு படங்களை தயாரித்தார்.
படங்கள் நன்றாக போனது.என் ராஜாவின் மனசிலே படத்தின் கதையை ரெடி செய்து பல முன்னணி நடிகர்களிடம் சொல்லி பார்த்தேன், யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன் விரலே நானே நடித்தேன், நான் கதாநாயகனானது இப்படிதான். என் ராசாவின் மனசிலே, எல்லாமே என் ராசாதான், அரண்மனை கிளி என்று 3 படங்களில் கதாநாயகனாக நடித்து, தயாரித்தேன். மூன்றும் சூப்பர் ஹிட், எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளி போன்ற படங்களில் நானே இயக்குநரானேன்.

ராஜ்கிரண் அறிமுகத்தில் இருந்தபோது பிற நிறுவனத்தில் மாணிக்கம், பாசமுள்ள பாண்டியர் போன்ற படங்களில் நடித்தார்.மாணிக்கம் காலைவாரிவிட்டது. வாழ்க்கையில் சில சோதனைகள் என்று ராஜ்கிரண் முன்னணியிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டார்.குணச்சித்திர நடிகராக அவர் மறுபடியும் நடிப்பைத் தொடர்ந்தார். பாலாவின் இயக்கத்தில் நந்தா, அஜீத்துடன் கிரீடம், விஜய்யுடன் காவலன், விஷாலுடன் சண்டக்கோழி, சேரனுடன் தவமாய் தவமிருந்து, சேரன் இயக்கத்தில் பாண்டவர் பூமி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில்முனிஎனதனதுபயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.ராஜ்கிரணுக்கு திப்பு சுல்தான் என்ற மகன் இருக்கிறான். தற்போது தினமும் ஐந்து வேளை தொழுகிறார். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த சண்டக்கோழி, முனி இரு படங்களும் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டதால், தெலுங்கிலும் இவருக்கு மார்க்கெட் இருக்கிறது. இவரைத் தேடி தெலுங்கு படங்களும் வருகின்றன.தற்போது ராஜ்கிரண் 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சண்டைக்கோழி, இரண்டாம் பாகத்திலும் முனு மூன்றாம் பாகத்திலும், திருமங்கலத்து யானை என தமிழில் 3 படங்களும் தெலுங்கில் இரண்டு படங்களும் பண்றார். ஒரு படத்தை தயாரித்து இயக்கும் முயற்சிலும் இருக்கிறார்.இளையராஜாவின் ரசிகரான ராஜ்கிரண், அவ்வப்போது ராஜாவை சந்தித்தால் வணக்கம் அண்ணே என்று மரியாதையாக சற்று நேரம் நின்று பேசிவிட்டு வருவார்.

சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...