9 மே, 2014

தலைமுறைகள் படத்தின்கிளைமாக்ஸ் நிஜமானது - சசிகுமார்


ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது’ என்றுஇயக்குநர் சசிகுமார் தெரிவித்தார்.நடிகர் சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய ‘தலைமுறைகள்’, சென்ற ஆண்டிற்கான தேசிய விருதுகளில் ‘சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்படம்‘ என்ற விருதினை வென்றது.இயக்குநர் பாலு மகேந்திரா காலமானதால், புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குநர் பாலுமகேந்திரா சார்பில் அவருடைய பேரன் ஷ்ரேயான் ஆகியோர் அந்த விருதைப் பெற்றனர்.
இதையடுத்து அந்தப் படக் குழுவினர் புதனன்று சென்னை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரான சசிகுமாருடன் நடிகர் சசி, ரயில் ரவி, வினோதினி, ரம்யா உட்படபடக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பாலுமகேந்திரா படத்தின் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சசிகுமார், இந்தப்படத்தை நான் தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுறேன். இந்தப் படத்துக்கு நிச்சயமாக விருது கிடைக்கும் என்று பாலுமகேந்திரா சார் சொன்னார்.அவர் வாக்கு பலித்துவிட்டது.“தலைமுறைகள் படத்துக்கு தேசிய விருது கிடைச்சதுல எவ்வளவு சந்தோஷம் இருக்கோ, அதே அளவுக்குவருத்தமும் இருக்கு. ஏன்னா இந்த ‘தலைமுறைகள்’ படத்தைஅவ்வளவு தூரத்துக்கு நேசிச்சி இயக்கின பாலுமகேந்திரா சார் இப்ப இல்லையேங்கிற வருத்தம் இருக்கு.நாம பாலுமகேந்திரா மாதிரியான நல்ல கிரியேட்டர்களை வயசாகிப் போச்சுன்னு ஒதுக்கி வச்சிடுறோம். ஆனா ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது, அவங்க எப்போ வேணாலும் படம் எடுக்கலாம், எந்த வயசிலேயும் படம்எடுக்கலாம்ங்கிறதை நிரூபிச்சிட்டுப் போனவர் பாலுமகேந்திரா சார்.அதனால் தான் நான் சொல்றேன், இப்ப இருக்கிற தலைமுறை போன தலைமுறையை கவுரவிக்கணும். நம்ம கூட அப்படிப்பட்டவங்க இன்னும் நெறைய பேர் இருக்காங்க. அதையெல்லாம் நாம சேர்ந்து செய்யணும்.இந்த விருதை அவர் சார்பா நானும், அவரோட பேரனும் சேர்ந்து மேடையில வாங்கினோம்.

விருதை வாங்கும் போது ஒரே ஒரு விஷயம் தான் என் மனசுக்குள்ள திரும்ப திரும்ப வந்துட்டுப் போச்சு.அது என்னன்னா, படத்தோட கிளைமாக்ஸ்ல அவர் இறந்து போன பிறகு அவரோட பேரன் தான் அவர் சார்பா விருதை மேடையில வாங்குவான். அதேமாதிரி அவரோட நிஜ வாழ்க்கையிலும் இந்த தேசிய விருதை அவரோட பேரன் தான் மேடையில வாங்கினார். அதுவும் ஒரு நெகிழ்வான விஷயமா எனக்குள்ள இருந்துச்சு.இந்த விருதை அவர் எனக்கு பரிசாக் குடுத்துட்டு போனது மட்டுமில்லாம தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சமர்ப்பணம் பண்ணிட்டு போயிருக்காரு. அதனால் அவருக்கு என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன்” என்று கூறினார்.


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...