பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

அப்பா நடிகரின் அவஸ்தை


ப்பா வேடம் என்றால் ரங்காராவ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன் என அந்த காதாபாத்திரத்திற்கே அழகு சேர்கிற நடிகர் அந்த காலத்தில் இரு ந்தார்கள்.அவர்களில் மேஜருக்கு தனி இடம் உண்டு. தமிழ் சினிமாவில் மா றாத வழக்கம்,ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமாகும் போது, ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் தொடர்ந்து அருவருக்கு அம்மாதரி யான வேடங்களையே கொடுப்பார்கள்.
 இளம் வயதிலேயே அப்பா வேடத்தில் அறிமுகமாகி கடைசிக்காலம் வரை ''அப்பா'' என்னும் வயதான வேடங்களிலேயே நடித்து மறைந்த நடிகர் மேஜர் சுந்தரராஜன். அப்பா வேடத்தால் அவர்பட்ட அவஸ்தைகளை 1967 ல் சொல்லி இருக்கிறார்.

நண்பர்களே நம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து....


“நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று: ரசிக்கும்படியாக இருக்கிறதென்றால், நம் முடைய நண்பர்களுக்கு அனுப்புகிறோம்”

“ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எரிச்சலூட்டினால், உடனே ஒரு பேஸ்புக் நிலைத்தகவல் போடுகிறோம்.”

“ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட தலைப் பில் விவாதங்களை துவக்குகிறோம்”

இவற்றையெல்லாம் எவ்விதக்கட்டுப் பாடுமின்றி செய்துகொண்டிருக்கிற நம்மை ‘இனி இவையெல்லாம் தணிக் கைக்கு உட்படும்’ என்றும், நம்முடைய நட வடிக்கைகள் அனைத்தையும் பலரும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்க ளென்றும், கண்காணிப்பாளர்களுக்கு பிடித்தவற்றை மட்டுமே நாம் பேசவேண் டுமென்றும் சொன்னால் என்னவாகும்?

விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்...


மல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.
இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?

facebook அரசியல் நகைச்சுவைகள்


இந்திய ஜனதிபதி தேர்தலில் நடக்கும் அரசியல் பேரம், ஒருநாளைக்கு ரூ.32 இருந்தாலே வறுமைக்கோட்டை தாண்டியவர் என்ற கூறும் இந்திய திட்டக்கமிஷன் தலைவர் மன்டேகு சிங் அனுவாலியா, போலிசாமியர்களிடம் சரணடையும் அரசியல் தலைவர்கள், அரசியல் அத்தியாயம் முடிந்த  போன பாட்டாளி மக்கள் கட்சி தலைவரின் வீண் நம்பிக்கைகள்,விமானிகளின் ஊதிய உயர்வை கண்டுகொள்ளாத ஏர்இந்தியா அமைச்சரின் மனைவியின் ஓவியத்தை மட்டும் வாங்குவது எப்படி?

அமீர்கானின் கனவு நிறைவேறுமா ?


இந்தி நடிகர் அமீர்கான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஸ்டார் தொலைக் காட் சியில் சமூகப் பிரச்சனைகளில் சிலவற்றை எடுத்து அதன்மீது தன் கருத்தை வழங்கு கிறார். அது விஜய் தொலைக்காட்சியிலும் தமிழில் மொழி பெயர்த்துக் காட்டப்படுகிறது. அதையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒவ் வொரு திங்கட் கிழமையும் “இந்து” நாளிதழ் வெளியிடுகிறது.

புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகள், சில கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மக்களிடம் அதிகப் பிரபல்யம் ஆகிவிடுகிறார்கள். அந்த மக்களின் செல்வாக்கை வணிக நோக்கத் தோடு பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மூலமாக நுகர்வுப் பொருள்களை விளம்பரம் செய்து கோடிக் கணக்கில் லாபம் குவிக்கப்படுகின்றன.

21 ஆண்டுகளுக்குப் பின் நோபல் விருதைப் பெற்ற சூ கி



1991ம் ஆண்டில் வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசை மியான்மர் எதிர்க் கட்சி தலைவர் ஆங் சான் சூ கி 21 ஆண்டுகள் கழித்து நேரில் பெற்றுக் கொண் டார்.

திரையுலகில் மரியாதையின் அளவுகோல் என்ன? இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்


திரையுலகத்தை பொறுத்தவரை முகத்துக்கு முன்னால் சிரிப்பதும்,  முதுகில் குத்துவதும், காலைவாரி விடுவதும் மிகச் சாதாரணமாக நடக்கும். நம்மை போன்றவர்களின் வாழ்க்கை முறைக்கும்,சினிமாக் காரர்களின் வாழ்க்கை முறைக்கும் மலைக்கும் மடுவுக்கு உள்ள வித்தியாசம் இருக்கும். பணம், பெயர்,பதவி, அந்தஸ்து கிடைக்கின்ற துறை,அதனால் அவற்றை அடைவதற்கு என்ன வேண்டு மானலும் செய்வார்கள் சினிமாக்காரர்கள்.
       திரையுலகில் இயக்குனர் சிகரம் என போற்றப்படுகிற கே.பாலச்சந்தர், திரையுலகில் மரியாதைக்கான அளவுகோலை தனது அனுபவத்திலிருந்து சொல்கிறார்.
இரண்டு சினிமாக்காரர்கள் சந்தித்துக்கொண்டாலோ, அல்லது சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது மரியாதை எப்படி கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

நேருவின் ‘ஆதிவாசி மனைவி’


பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன்னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண்ணான புத்னி மெஜான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். ஆதிவாசிப்பெண்களின் பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன், வரவேற்பு நிகழ்ச்சியில் பஙகேற்ற அவரிடம் நேருவுக்கு மாலையணிவித்து வரவேற்கும் கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அவரை, நேரு விழா
மேடைக்கு அழைத்துச்சென்றார்.கட்டுமானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத்தானை அழுத்தி அணையைத் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க புத்னியே பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தார்.

சிங்கப்பூரில் வீஸ்வரூபம் டிரைலர் வெளியீட்டு காட்சிகள்


சிங்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விஸ்வரூபம் டிரைலர் வெளியிடப்பட்டது.
 சிங்கப்பூர் லயன்சிட்டியில் நடைபெற்ற விழாவில் உலக அளவில் நடிகர்கள், இயக்குனர்கள்,இந்திய நடிகர்கள் சப்னாஅஸ்மி ,ராதிகா, ஷ்ரேயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கமல், விஸ்வரூபம் கதாநாயகிகள் ஆண்டிரீயா,பூஜாகுமார் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் திரைப்பட விழா காட்சிகளிலிருந்து .....

விஸ்வரூபம் புதிய புகைப்படங்கள்

100 சதவீதம் அக்மார்க் கமல் பாணி படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன் தவிர பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின் முதல் வெள்ளோட்டம் (டிரைலர்)  சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். முதல் வெள்ளோட்டத்தில் கமலஹாசன் மாறுபட்ட நடிப்பு, உடல் மொழியை வெளிப்படுத்திய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனந்தவிகடன் - என்விகடனில் ''இன்றையவானம்''


சந்தோசமான தகவலை உங்களோடு பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.துவங்கிய 10 மாதங்களிலேயே விகடன் மூலமாக அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. கல்லூரிகாலங்களில் 40 பக்க நோட்டில் ராகம் என்ற பெயரில் நண்பர் துவக்கிய சிற்றிதழில் எழுதத்துவங்கி, ரோனியோ, ஜெராக்ஸ், கையில் பணம் அதிகமாக இருந்தால் அச்சு பிரதி என சிறை என்ற சிற்றிதழை  5ஆண்டுகள் நண்பர்களோடு நடத்தியிருக்கிறேன். அதிகபட்டமாக 200 லிருந்து 250 பிரதிகள் மட்டுமே வெளிவரும் சிறை இதழ் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பரவலான வரவேற்பைபெற்றது, அமெரிக்க தமிழ்ச்சங்கத்திருந்து சந்தா அனுப்பினார்கள், பின்னர் பல்வேறு காரணங்களால் சிறை சிற்றிதழ் நின்று போனது. இணையம் குறித்து குறைந்த பட்ச அறிவுகூட இல்லாமல் இரண்டு முறை வலைப்பூ துவங்கும் முயற்சி தோல்வியடைந்தது.

நாளை தவறவிடதீர்கள் ... தவறினால் 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் + வீடியோ இணைப்பு



ம் நண்பர்களே... நாம் வாழும் தற்போதைய காலத்தில் வானில் ஒரு அற்புதம் நிகழவிருக்கிறது.பார்க்க தவறவிட்டால் உங்கள் பேரன் அல்லது அவனது மகனுக்கோ வாய்ப்பு கிடைக்கும்.வருகிற ஜூன் 6ல் சூரிய மண்டலத்தின் இரண்டாவது கிரகமான வெள்ளி கிரகணம் சூரியனை இடைநகர்வு செய்கிறது.

கோள்களின் இடைநகர்வு என்றால் என்ன?. 

சூரியன் சந்திர இடைநகர்வை கிரகணம் என்கிறோம் முழுகிரகணம், பகுதி கிரகணம் என்று நாம் அந்த அற்புதங்களை பார்த்திருப்போம். வெகு தொலைவில் உள்ள சூரியனின் அளவும்,

இளையராஜாவின் பிறந்த நாள்- நீதானே பொன்வசந்தம் படதின் பாடல் - வீடியோ



ளையராஜா கடந்த 2ம் தேதியுடன் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி முடித்திருக்கிறார்.
 அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர்சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். .

சுதந்திர இந்தியாவின் அரசு தடை செய்த முதல் திரைப்படம்

இந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள் சென் தனது திரைப்படங்களின் மூலம் பல புதுமையான சமூக கருத்துக்களை விதைத்ததுடன், மத்திய தரவர்க்கத் தின்வாழ் க்கைமுறையையதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங் கியவர். இவர் இயக்கிய ஏக் தின் ப்ரதி தின், புவன் ஷோம், காந்தர் உள்ளிட்ட படங் கள் பலதரப்பட்ட வர்களின் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களா கும். இவரது இயக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத் தின்போது இந்திய பெண்ணுக்கும், புலம் பெயர்ந்த சீன நாட்டைச் சேர்ந்தவருக்கும் இடையிலான அன்பை அரசியல் பின்னணி யுடன் சொல்லும் வகையில் சித்தரிக்கப்ப ட்டது ‘நீல் ஆகாஷெர் நீச்சே‘ என்ற திரைப் படம். இப்படத்தை இந்திய அரசு அப் போது தடை செய்து உத்தரவிட்டது. சுதந்திர இந்தியா வின் அரசு தடை செய்த முதல் திரைப்படம் இப்படமாகும்.

அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேட்டி


சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள் விழாவில் பங்கேற்றார். தஞ்சை, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
மேலும் தமிழில் முதல் இடத்தை பிடித்த 6 மாணவ - மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-