திரையுலகில் மரியாதையின் அளவுகோல் என்ன? இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்


திரையுலகத்தை பொறுத்தவரை முகத்துக்கு முன்னால் சிரிப்பதும்,  முதுகில் குத்துவதும், காலைவாரி விடுவதும் மிகச் சாதாரணமாக நடக்கும். நம்மை போன்றவர்களின் வாழ்க்கை முறைக்கும்,சினிமாக் காரர்களின் வாழ்க்கை முறைக்கும் மலைக்கும் மடுவுக்கு உள்ள வித்தியாசம் இருக்கும். பணம், பெயர்,பதவி, அந்தஸ்து கிடைக்கின்ற துறை,அதனால் அவற்றை அடைவதற்கு என்ன வேண்டு மானலும் செய்வார்கள் சினிமாக்காரர்கள்.
       திரையுலகில் இயக்குனர் சிகரம் என போற்றப்படுகிற கே.பாலச்சந்தர், திரையுலகில் மரியாதைக்கான அளவுகோலை தனது அனுபவத்திலிருந்து சொல்கிறார்.
இரண்டு சினிமாக்காரர்கள் சந்தித்துக்கொண்டாலோ, அல்லது சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது மரியாதை எப்படி கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

''ஹை'' என்றால் இருவரும் சமம்.
''குட்மார்னிங்'' என்றால் அடுத்தகட்டம்.
''இரண்டு கைகளையும் சேர்த்து வணக்கம்'' என்றால் அதற்கடுத்த கட்ட மரியாதை


''இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டு முகத்துக்கு மேலே தூக்கிவிட்டால்'' அது எல்லாவற்றையும் விட உயர்ந்த கட்டம்.
நாம் உள்ளே நுழையும் போது அத்தனை பேரும் ''ஒரே நேரத்தில் ஷாக் அடித்தவர்கள்''  போல் எழுந்து நின்றால் சமீபத்தில் வெளியான நமது படம் சூப்பர்ஹிட் என்று பொருள்.
எழுந்திருக்காதது மட்டுமல்லாமல் முகத்தை வேண்டும் என்றே இன்னொரு பக்கம் திருப்பிக்கொண்டார்களானால் படம் சூப்பர் ஃப்ளாப் என்று பொருள். ஆக வெற்றியை வைத்துதான் சினிமாவில் மரியாதை எனப் புரிய வைக்கிறார் இயக்குனர் சிகரம்.சிகரத்துகே இந்த அனுபவம்னா மற்றவங்களோட கதி!!!!!-

-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

rajamelaiyur said…
மரியாதையில் இவ்வளவு வகைகளா ?
  •  இந்தியாவை அவமதிக்கும்  மோடியின் பேச்சு - ட்விட்டரில் கொந்தளிப்பு
    20.05.2015 - 1 Comments
    வெளிநாடு வாழ் இந்தியரே வருக வருக ன்னு யாருக்கு போர்ட் வச்சிருக்கீங்க.. நம்ம் பிரதமர் மோடிக்கு தான்... வார…
  • சொத்துக்குவிப்பு வழக்கும் முதல்வர்களும்...
    29.09.2014 - 2 Comments
    18 ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு (முன்னாள்)முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு…
  • அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம்  இல்லை- உதயநிதி ஸ்டாலின்  பேட்டி
    01.06.2012 - 0 Comments
    சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள்…
  • திருப்பதி ஏழுமலையானுக்கு லஞ்சம் கொடுத்த அமைச்சர்
    16.11.2011 - 0 Comments
    கடவுளிடம் நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக்கேட்கலாம், பரிகாரம் செய்யலாம்.நாம் செய்த பாவத்தையே பங்கு போட்டு…
  • மாற்றான் - சமூக அக்கறை உள்ளவன்
    14.10.2012 - 3 Comments
    4பாட்டு,4பைட் என்று மட்டும் படம் இல்லாமல் பொழுபோக்கு அம்சத்துடன் சமூக அக்கறையாக எடுக்கப்பட்டுள்ள படம்…