பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் கண்மாயில் 1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல் சரித்திர ஆய்வாளர்களை வியப்படையச் செய்துள்ளது.
ஆரம்ப காலத்தில் முத்துக்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டிய பாண்டிய மன்னர்கள் பின்னாளில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உற்பத்தியை பலமடங்கு பெருக்கினார்கள்.இதற்காக காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கியதுடன் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளையும்,கண்மாய்களையும் புதிதாக உருவாக்கி னார்கள்.அதில் ஒன்று தான் 9ம் நூற்றாண்டில் மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த பராந்தக பாண்டியன் வீரநாராயணன் உருவாக்கிய உரப்பனூர் கண்மாய் ஆகும்.இந்த உரப்பனூர் கண்மாயின் கீழ்புறத்தில் கீழஉரப்பனூரும்,மேல்புறத்தில் மேலஉரப்பனூரும், வடபகுதியில் ஊராண்டஉரப்பனூரும் அமைந்துள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கண்மாயில் 1100 ஆண்டுகள் பழமையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் மடைக்கல் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இந்த 12அடி உயர கல்லில் உள்ள அளவுகள் மூலமாக கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீரை அக்காலத்து மக்கள் கணக்கிட்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மிகவும் நேர்த்தியான கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மடைக்கல்லில் அதனை 9ம் நூற்றாண்டில் உருவாக்கிய முற்காலத்து பாண்டிய மன்னர் பராந்தக பாண்டியன் வீரநாராயணன் காலத்து கல்வெட்டு இன்றும் அழியாமல் காணப்படுகிறது.இந்த கல்வெட்டின் மேல்புறத்தில் வெண்கொற்றக் குடையுடன் இருபுறமும் சாமரங்கள் மற்றும் கீழே கலசத்துடன் விளக்கு கோட்டு உருவமாக செதுக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ் கிரந்த எழுத்துக்களும் பராந்தக பாண்டிய மன்னரின் மற்ற பெயர்களான கரிவரமல்லன்,வீரநாராயணன் ஆகிய பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த கல்வெட்டு குறித்து இன்றும் சரித்திர ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி அதன் ஸ்திரத்தன்மை குறித்து வியப்படைந்து செல்கின்றனர். அன்றைய தினம் ஆயிரம் ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்களுக்கு நீர்பாசனம் அளித்த இந்த கண்மாயில்உள்ள மடைக்கல் கடந்த 1100 ஆண்டுகளாக இயற்கையை வென்று இன்றும் நிமிர்ந்து நின்று பாண்டிய மன்னரின் புகழை பறைசாற்றி வருகிறது.


இருப்பினும் கால நிலை மாற்றம் மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக தற்போது உரப்பனூர் கண்மாயிலுள்ள இந்த மடைக்கல்லின் அடித்தளம் சற்றே ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.மடைக்கல்லின் கீழே போடப்பட்ட சுட்ட செங்கல் மற்றும் கற்களினால் சுண்ணாம்பு சாந்து வைத்து கட்டப்பட்ட அஸ்திவாரம் சிதைந்து செங்கற்கள் சிதைந்து சிதறிக் கிடக்கிறது.எனவே 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாண்டிய மன்னர் காலத்து பழைமமிகு உரப்பனூர் மடைக்கல்லினை பாதுகாத்திடும் வகையில் அதிகாரிகள் உரிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சரித்திர ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..
- தகவல் தினபூமி திருமங்கலம் நிருபர் செல்வராஜ்

மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள்


மதுரை மாவட்டத்தில் உள்ள திடியன் மலையின் உச்சியில் உள்ள குகையில் பல நூற்றாண்டுகளாக மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவிலான பக்தர்கள் பெளர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து மலை உச்சியில் உள்ள கைலாசநாதரை தரிசிக்க வருபவர்களின் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் சிந்துபட்டிக்கு  அருகே உள்ளதிடியன் மலையில் புகழ் பெற்ற கைலாசநாதர் 
திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட அருள்மிகு தட்சிணாமூர்த்தி 

14 சித்தர்களுடன், நந்தி மீது
அமர்ந்த கோலத்தில், 
சுமார் மூன்றடி உயரத்தில் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார்.அசேர கலசங்களால் தோற்றுவிக்கப்பட்டு, மூன்று கோண வடிவில் கோயில் புதுமையாக அமைந்துள்ளது.
 ராவணன் உடனான யுத்தத்துக்குப் பின்பு ஸ்ரீராமபிரான் ஆட்சிப் பொறுப் பேற்றதும் முதல் வேலையாக அசுவமேதயாகம் செய்தார். அந்த யாகக் குதிரை செல்லும் வழியில் எங்கெல்லாம் ஓவு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒரு காசிலிங்கத்தை வைத்து ராமபிரான் பிரதிஷ்டை செய்துள்ளார். அவ்வாறாக இந்த திடியன்மலை அடிவாரத்தில் உள்ள பொற்றாமரைக் குளக்கரையில் யகக்கு திரை ஓவெடுக்க அங்கே ஒரு காசிலிங்கம் ராமபிராானால் பிரதிஷ்டை செயப்பட்டது. நாளடைவில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் இங்கே ஒரு கோயிலை எழுப்பி வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

இப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக இறப்பின்றி வாழ்ந்து வரும் சித்தர்கள் ஏராளமானோர் அவர்களது வயது முதிர்வு காரணமாக கட்டைவிரல் அளவுக்குக் குறுகி விட்டதாக கூறப்படுகிறது. மரணத்தை வென்று என்றும் 16 மார்க்கண்டேயர்கள் போல் காணப்படும் இவர்கள் கட்டை விரல்  சித்தர்கள் என்றும் இவர்களுக்கு உதவி வரும் குள்ள மனிதர்கள் கட்டையர்கள் என்றும்  அழைக்கப்படுகின்றனர். இவர்கள் திடியன் மலைைப் பகுதி களில் அதிகளவில் இருந்துள்ளனர்.திடியன் மலையின் மேல்புறம் மையப்பகுதியில் மிகக் குறுகிய குகை ஒன்று உள்ளது. இங்கு தினமும் கட்டை விரல் சித்தர்கள் வந்து போவதாக பக்தர்கள் கூறுகின்றனர். 


திருவண்ணாமலை, 
சதுரகிரி,கொல்லிமலை, சித்தர்வாழ் மலை போன்ற தலங்களில் சற்குரு மூலமாக மட்டுமே காணவல்ல அரிய ஜோதி விருட்சங்கள் உள்ளன. இந்த ஜோதி பிரகாசத்தைக் கொண்டுதான் விண்ணில் இருந்து வரும் தேவாதி தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் நம்முடைய பூமி மண்டலத்தை எளிதில் கண்டறிந்து வருகை தருகின்றனர். இவற்றுள் திண்டீர தைல ஜோதி வகையைச் சேர்ந்த நெக்கொட்டா மரம் இக்கோயில் தல விருட்சமாக உள்ளது.இந்த விருட்சத்தின் கீழ் மணல் பரப்பி, அதன் மீது வலது மோதிர விரலால், ‘தியான பூமி பீடம்’ என்று எழுத வேண்டும். பின்னர் கம்பளி, பா, மெல்லிய பருத்தி துணி, மரப் பலகை இவற்றில் எவையேனும் ஒன்றின் மேல் பத்மாசனம், சுகாசனத்தில் அமர வேண்டும். முதலில் ஸ்ரீ கணபதியைச் சங்கல்பித்து வேண்டி, நெக் கொட்டாவிருட்ச தேவமூர்த்திக்கு நன்றி செலுத்தி, தியானத்தைத் தொடங்க வேண்டும். இதனால், நமது வேண்டுதல்கள் நிறைவேறி, மனம் அமைதி பெறுவது நிச்சயம்.


மேலும் திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி, கைலாசநாதரை வணங்கி மலை உச்சியை வலம் வந்தால் நாளடைவில் அது குணமாகும். பௌர்ணமி நாட்களில் மலையை கிரிவலம் வந்து வணங்கினால் மரணத்தை வென்ற கட்டை விரல் சித்தர்களையும் அவர்களுக்கு உதவி செய்திடும் கட்டைய மனிதர்களையும் காணும் பாக்கியம் கிடைத்திடும் என்பது பக்த கோடி பெரு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. 

தகவல்
செல்வராஜ் - திருமங்கலம்

கீிற்று