பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

மதுவின் பயணமும்... அதன் பின்னான அரசியலும்



















ஓரு மூட்ட அரிசியை  ஒருகையாள தூக்கி போட்ட மனுசன் ... இப்ப நடக்க மாட்டாமா இருக்காறே? எல்லாம் குடி...குடிச்சு உடம்பும் போச்சு குடும்பமும் போச்சு..  எனது மாமா ஒருவரை பற்றி சிறுவயதில் பேச கேட்டிருக்கிறேன். கிராமத்தில் அப்போது குடிப்பவர்கள்  விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருப்பார்கள்.( இப்போது தலைகீழ் குடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்) அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் தப்பித்தவறி அவர்களோடு பேசினால் அடி விழுகும்.குடிகாரப்பயலோட  உனக்கென்ன பேச்சு என்று திட்டுவார்கள். குடிப்பவர்களும் ... ஊர்பெரியவர்கள்,படித்து பெரிய உத்யோகத்தில் இருப்பவர்களை பார்த்தால் மிகப்பெரிய குற்றம் செய்தவர்களை போல தலைகுனிந்து படியே சென்றுவிடுவார்கள்.