ஒபாமா உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

-
காசா மீது அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ரத்தவெள்ளதில் உயிருக்கு போராடுபவர்களை நார்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் குழு ஒன்று இரவும் பகலும் பாராமல் முடிந்த அளவு காப்பாற்றி வருகின்றனர். அப்பணியில் தன்னை அப்பணித்திருக்கும் நார்வே மருத்துவர் கில்பர்ட், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் போரினால் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .... 
கண்ணீரை வரச்செய்யும் புகைப்படங்கள் பாரக்க இங்கே கிளிக்செய்க



அதன் விபரம் வருமாறு :``ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் காசா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் காசாவில் ஓர் இரவு இருந்துவிட்டு பாலஸ்தீன மக்களின் படுகொலையை தடுக்க முயற்சிக்காமல் இருக்க மாட்டார். ஆனால் இரக்கமற்ற இதயமற்றவர்கள் காசாவில் மற்றொரு படுகொலைக்கு திட்டமிடுகிறார்கள்.இரவு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. அவர்கள் தமது மரணத்தின் கூச்சலை இடுவதை என்னால் கேட்க முடிகிறது. உங்களால் முடியுமானதை தயவுசெய்து செய்யும். இதனை தொடர முடியாது’’ என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
கிறித்தவர்களிடம் ஒரு மூடநம்பிக்கை புரையோடிக் கிடக்கிறது; இது மூடநம்பிக்கையா, அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மூடநம்பிக்கையா எனத் தெரியவில்லை.
யூதர்களை எதிர்த்தால், கடவுள் தங்களைத் தண்டித்து விடுவார் என பல கிறித்தவர்கள் நம்புகிறார்கள். அதன் விளைவுதான் இது.

இதனால், எல்லா கிறித்தவ நாடுகளும் யூதர்களுக்குத்தான் ஆதரவாக செயல்படும்.
Anonymous said…
Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்