தெனாலிராமன் ..... பார்க்கலாமே

வழக்கத்தை விட எங்கள்  ஊர் தியோட்டரில் கூடுதல் கூட்டம். பெண்கள் ,குழந்தைகளை பார்க்க முடிந்தது.ரெம்ப நாளா பார்க்க முடியாத வடிவேலுவை பார்க்க வந்திருப்பாங்க ... வடிவேலு சிரிக்க வைப்பார் என்ற  எதிப்பார்ப் போடு... எதிப்பார் த்த அளவு இல்லா விட்டா லும் பரவாயில்லை.  வடிவேலுவும்,அவருக்கு ஜோடியாக வரும் மீனாட் சிதிக்ஷித்தும் பொருந்தவேயில்லை....படம் பிரமாணடமாக சீன தேசத்திலிருந்து துவங்குகிறது. சீனர்கள் , வியாபார ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிப்பதாக கதை செல்கிறது. ஏன் கோகோகோலா,பெப்சி,லேஸ் சிப்ஸ்,கோல்கேட்.... இப்படி சீனாவைவிட அமெரிக்க பொருட்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பது குறித்து வடிவேலுவுக்கு தெரியாது போலிருக்கிறது.

ஓகே கதைசுருக்கம்..
விகட நகரத்தை ஆட்சி செய்து வருகிறார் வடிவேலு. இவரது அரசவையில் நவரத்தின மந்திரிகளாக 9 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். குறுநீல மன்னரான ராதாரவி சீன அரசிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர் ஆட்சி செய்யும் நாட்டிற்கு சீன வணிகத்தை கொண்டு வருகிறார். இதேபோல் விகட நகரத்திலும் சீன வணிகத்தை புகுத்த நவரத்தின மந்திரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு திட்டம் தீட்டுகிறார்.
இவர்களின் திட்டத்திற்கு ஒரே ஒரு மந்திரி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எதிர்ப்பு தெரிவிக்கும் மந்திரி கொல்லப்படுகிறார். விகட நகரத்தின் அரசவையில் நவரத்தின மந்திரிகளில் ஒருவர் இல்லாததால், அந்தப் பதவிக்கு தெனாலிராமனான மற்றொரு வடிவேலு வருகிறார். தெனாலிராமனை எப்படியாவது கைக்குள் போட்டுக் கொண்டு சீன வணிகத்தை விகட நகரத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மந்திரிகள் திட்டம் தீட்டுகின்றனர்.

                          தொனாலி ராமன் புகைப்படங்கள் பார்க்க....

ந்தா வந்துட்டாருய்யா ஜகஜ்ஜால புஜபல வடிவேலு..+ படங்கள்


தெனாலிராமனோ, மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாத அரசன் வடிவேலுவை கொல்வதற்காகவே அரசவையில் இடம்பிடித்துள்ளான். ஆனால் இங்கு வந்து பார்த்தபிறகுதான் அரசன் ஒரு அப்பாவி, அவர் தீட்டும் நல்லத்திட்டங்களை மந்திரிகள்தான் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்துக் கொள்கிறான். இதனால் மந்திரிகள் போடும் திட்டத்திற்கு தெனாலிராமன் முட்டுக்கட்டையாக இருக்கிறான். அவர்களை பழிதீர்க்கவும் முடிவு செய்கிறான்.
இறுதியில் மந்திரிகளின் சதி திட்டத்தை தெனாலிராமன் முறியடித்தாரா? தங்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தெனாலிராமனை மந்திரிகள் பழிவாங்கினார்களா? என்பதை வெண்திரையில்(திருட்டு சி.டி வேண்டாம்)காண்க...
பழையவடிவேலு இப்படத்தில் இல்லை. மீனாட்சிதிக்ஷித் அழகு.படத்தில் ராதாரவி, மனோபாலா, தேவதர்ஷினி, நமோ நாராயணன், சண்முக ராஜ்  என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.அரண்மனை காட்சி களும்,டி.இமான் இசையில் ‘ஆணழகு’ பாடல் ரசிக்க தூண்டுகிறது. பார்க்கலாம்..

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
flop
Unknown said…
வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்
  • உத்தமவில்லன் -கமலின் வாழ்க்கை...
    03.05.2015 - 1 Comments
    மே.1 எதிர்பார்த்து ஏமாந்து, மே.2 காலை காட்சியும் ரத்து ... பெருத்த ஏமாற்றம்.. கமல் படன்னாலே இப்படிதான்…
  • இந்த ஆண்டு டிசம்பர் 12ல் உலகம் அழியுமா? அறிவியல்பூர்வமாக கணித்து சொல்லும் தளம்
    24.02.2012 - 0 Comments
    இந்த ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவருக்கும்…
  •  ஆபிஸில் தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம்
    13.11.2021 - 0 Comments
     முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் உறங்குவதாக திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம்…
  • ஆக்டோபஸ் அதிசயங்கள் : 3 இதயம், 9 மூளை, நீல ரத்தம்
    22.11.2021 - 0 Comments
     ஆக்டோபஸ் என்ற  கடல்வாழ்  உயிரனத்தை நாம் அறிவோம்.  5  அல்லது 6 கைகள், தலை…
  • பாண்ட்...ஜேம்ஸ்பாண்ட்!
    23.01.2012 - 0 Comments
     உலகம் அழியப்போகிறது!  பூமிக்கு நேர் மேலே, விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளை தன்…