தெனாலிராமன் ..... பார்க்கலாமே

வழக்கத்தை விட எங்கள்  ஊர் தியோட்டரில் கூடுதல் கூட்டம். பெண்கள் ,குழந்தைகளை பார்க்க முடிந்தது.ரெம்ப நாளா பார்க்க முடியாத வடிவேலுவை பார்க்க வந்திருப்பாங்க ... வடிவேலு சிரிக்க வைப்பார் என்ற  எதிப்பார்ப் போடு... எதிப்பார் த்த அளவு இல்லா விட்டா லும் பரவாயில்லை.  வடிவேலுவும்,அவருக்கு ஜோடியாக வரும் மீனாட் சிதிக்ஷித்தும் பொருந்தவேயில்லை....படம் பிரமாணடமாக சீன தேசத்திலிருந்து துவங்குகிறது. சீனர்கள் , வியாபார ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிப்பதாக கதை செல்கிறது. ஏன் கோகோகோலா,பெப்சி,லேஸ் சிப்ஸ்,கோல்கேட்.... இப்படி சீனாவைவிட அமெரிக்க பொருட்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பது குறித்து வடிவேலுவுக்கு தெரியாது போலிருக்கிறது.

ஓகே கதைசுருக்கம்..
விகட நகரத்தை ஆட்சி செய்து வருகிறார் வடிவேலு. இவரது அரசவையில் நவரத்தின மந்திரிகளாக 9 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். குறுநீல மன்னரான ராதாரவி சீன அரசிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர் ஆட்சி செய்யும் நாட்டிற்கு சீன வணிகத்தை கொண்டு வருகிறார். இதேபோல் விகட நகரத்திலும் சீன வணிகத்தை புகுத்த நவரத்தின மந்திரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு திட்டம் தீட்டுகிறார்.
இவர்களின் திட்டத்திற்கு ஒரே ஒரு மந்திரி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எதிர்ப்பு தெரிவிக்கும் மந்திரி கொல்லப்படுகிறார். விகட நகரத்தின் அரசவையில் நவரத்தின மந்திரிகளில் ஒருவர் இல்லாததால், அந்தப் பதவிக்கு தெனாலிராமனான மற்றொரு வடிவேலு வருகிறார். தெனாலிராமனை எப்படியாவது கைக்குள் போட்டுக் கொண்டு சீன வணிகத்தை விகட நகரத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மந்திரிகள் திட்டம் தீட்டுகின்றனர்.

                          தொனாலி ராமன் புகைப்படங்கள் பார்க்க....

ந்தா வந்துட்டாருய்யா ஜகஜ்ஜால புஜபல வடிவேலு..+ படங்கள்


தெனாலிராமனோ, மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாத அரசன் வடிவேலுவை கொல்வதற்காகவே அரசவையில் இடம்பிடித்துள்ளான். ஆனால் இங்கு வந்து பார்த்தபிறகுதான் அரசன் ஒரு அப்பாவி, அவர் தீட்டும் நல்லத்திட்டங்களை மந்திரிகள்தான் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்துக் கொள்கிறான். இதனால் மந்திரிகள் போடும் திட்டத்திற்கு தெனாலிராமன் முட்டுக்கட்டையாக இருக்கிறான். அவர்களை பழிதீர்க்கவும் முடிவு செய்கிறான்.
இறுதியில் மந்திரிகளின் சதி திட்டத்தை தெனாலிராமன் முறியடித்தாரா? தங்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தெனாலிராமனை மந்திரிகள் பழிவாங்கினார்களா? என்பதை வெண்திரையில்(திருட்டு சி.டி வேண்டாம்)காண்க...
பழையவடிவேலு இப்படத்தில் இல்லை. மீனாட்சிதிக்ஷித் அழகு.படத்தில் ராதாரவி, மனோபாலா, தேவதர்ஷினி, நமோ நாராயணன், சண்முக ராஜ்  என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.அரண்மனை காட்சி களும்,டி.இமான் இசையில் ‘ஆணழகு’ பாடல் ரசிக்க தூண்டுகிறது. பார்க்கலாம்..

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
flop
Unknown said…
வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்
  • கற்பழிப்பு சம்பவங்களும் சொரணைகெட்ட தமிழனும்
    30.12.2012 - 3 Comments
    650 கற்பழிப்புகள் இந்திய தலைநகரான டில்லியில் 2012ம் ஆண்டு மட்டும்.2011ல் 522, கடந்த 1953 -…
  • நாம் அனைவரும் ஐந்தில் ஒருவரே - உயர்மொழி  இயக்குனர் பேட்டி
    06.09.2012 - 3 Comments
    ஜந்தில் நீங்கள் எந்த வகை ? நான்,நீங்கள் அனைவரும் ஆயிரத்தில் ஒருவனோ லட்சத்தில் ஒருவனோ கிடையாது, என்கிறார்…
  • 21ம் நூற்றான்டின் முக்கிய நோய் மனஅழுத்தம் அதிர்ச்சி தகவல்.....
    26.02.2012 - 1 Comments
    21ம் நூற்றான்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம்…
  • பிப். 24 ல் 100 வயதை கடக்கும் பாம்பன்பாலத்திலிந்து....... + வீடியோ
    19.02.2014 - 2 Comments
    வருகிற பிப். 24 தேதி 100 வது பிறந்த தினத்தை கொண்டாட இருக்கிறது பாம்பன் பாலம். 1913 ஆம் ஆண்டில் துவங்கி…
  • அரவான் கதைவசனகர்த்தா சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதெமி விருது
    22.12.2011 - 1 Comments
    சு.வெங்கடேசன் மதுரை - திருப்பறங்குன்றம் பகுதியில் உள்ள ஹார்விபட்டியை சேர்ந்த வர். தமிழ்நாடு முற்போக்கு…