மோடியின் உண்மையான நோக்கம் என்ன?


மோடி பிரதமரானால் (ஓருவேளை) அதை செய்வார் இதைச்செய்வார் என்று அள்ளிவிடுகிறார்கள்.அவர் சொன்னபடி செய்யவிட்டால் கேட்கத்தான் முடிமா? அப்படியே கேட்டாலும் செய்யத்தான் போகிறார்களா? குஜராத்தில் தன் நடைபெற்ற ஊழல்களே அதிகம் இருக்க.. தன்னையே உழல்  ஒழிப்பு நாயகனாக நாடகம் நடத்துகிறார் மோடி.
“நான் புதிய ஊழல்களை தடுத்திட முயல்வதா அல்லது பழைய ஊழல் குப்பைகளை சுத்தப்படுத்துவதா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்”“புதிய ஊழல்களை தடுப்பதில்தான் நான் கவனம் செலுத்த வேண்டும் என எனது மனசாட்சி கூறுகிறது”இது திருவாளர் மோடி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி! ஊழல் ஒழிப்பு நாயகன் என தன்னை பீற்றிக்கொண்ட மோடியின் மனசாட்சி பழைய ஊழல்கள் பற்றி கண்டு கொள்ள வேண்டாம் எனக் கூறுகிறதாம்!அதாவது கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்த எந்த ஒரு ஊழலையும் மோடி கண்டுகொள்ள மாட்டார்.

2ஜி ஊழல்(ரூ.1,76,000 கோடி), நிலக்கரி ஊழல்(ரூ.1,86,000 கோடி), மு.ழு. ரிலையன்ஸ் ஊழல்(ரூ.1,00,000 கோடி),காமன்வெல்த் ஊழல்(ரூ.60,000 கோடி) போன்ற மெகா ஊழல்கள் மட்டுமல்ல; மாநிலங்களில் நடந்த ஆதர்ஷ் ஊழல், கர்நாடகா சுரங்க ஊழல், எடியூரப்பா ஊழல், கேரளாவின் சோலர் ஊழல், மே. வங்கத்தின் சாரதா சீட்டு ஊழல் போன்ற எதனையும் கண்டு கொள்ள வேண்டாம் என மோடி மனசாட்சி கூறுகிறதாம்!அது மட்டுமா? குஜராத்தில் நடைபெற்ற - அதானி ஊழல்- ரூ.11,347 கோடி - எஸ்ஸார் ஊழல்- ரூ.6228 கோடி - டாடா ஊழல்- ரூ.33,000 கோடி - சுஜலம் சுஃபலம் யோஜனா ஊழல்- ரூ.1700கோடி - குஜராத் அமைச்சர் புருசோத்தம் சோலநங்கியின் ரூ.500 கோடி ஊழல் - அமைச்சர் பாபு பொக்கிரியாவின் ரூ.50 கோடி ஊழல் என அனைத்தையும் கை கழுவி விடலாம் என்கிறதாம் மோடியின் மனசாட்சி!


மோடியின் உண்மையான நோக்கம் கார்ப்பரேட்களையும், தனது ஆதரவாளர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதுதான்! அதன் விளைவாக காங்கிரசையும், திரிணாமுல், தி.மு.க. போன்றவர்களின் ஊழலையும் கை கழுவ நேரிட்டால் பரவாயில்லை என எண்ணுகிறார் மோடி!

உண்மையில் இப்படி பேசுவது மோடியின் மனசாட்சி அல்ல! மாறாக இந்திய கார்ப்பரேட்களின் மனசாட்சி! மோடியும் கார்ப்பரேட்களும் பிரிக்க முடியாத சக்திகளாகிவிட்டன என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி! மோடியை பற்றி சிறிது மயக்கம் கொண்ட மக்கள் கூட இப்பொழுது புரிந்து கொள்வர் என்பதில் அய்யமில்லை!

தொகுப்பு
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
lol. funny thoughts and another crap article.
  • தமிழர் தோன்றியது எங்கே?
    03.07.2023 - 0 Comments
       அமேசானில் வெளிவந்துள்ள ஆற்புதமான நூல்.தமிழர் தோன்றியது எங்கே? என்ற இந்த நூல் தமிழர்களின்…
  • கண்ணா... லட்டு  நல்ல இருக்கு...
    16.01.2013 - 3 Comments
    உங்களுக்கு 40+ வயது இருக்குமானால் லட்டு படத்தை ஏற்கனவே பார்த்த மாதரி தோனும்... பாக்கியராஜின் இன்று போய்…
  • போராட்டம் இன்னும் முடியவில்லை...!  கேப்டன் லட்சுமி நேர்காணல்
    30.07.2012 - 0 Comments
    நீங்கள் ஒரு மருத்துவர். மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் உங்களுக்குப் பலவிதமான எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள்…
  • முதல் ''குடிமகனும்'' கடைசி ''குடிமகனும்''
    13.09.2012 - 4 Comments
    டாஸ்மாக் பார்ல கடைதிறக்க சரக்கு வாங்குற முதல்குடிமகன்,இரவு 10 மணிக்கு பார் அடைக்கும் போது கடைசியா சரக்கு…
  • 01.10.2021 - 0 Comments
     நம்மால நம்வே முடியாத ஆச்சர்யம் உங்க சுமார்டபோனை கையில எடுக்கமலேயே வீடியோ எடுக்கலாம்,போட்டோ எடுக்கலாம்…