13 செப்., 2012

முதல் ''குடிமகனும்'' கடைசி ''குடிமகனும்''


டாஸ்மாக் பார்ல கடைதிறக்க சரக்கு வாங்குற முதல்குடிமகன்,இரவு 10 மணிக்கு பார் அடைக்கும் போது கடைசியா சரக்கு வாங்குற கடைசி குடிமகனை பற்றிய பதிவு அல்ல...

இந்தியாவின் முதல்குடிமகன் அதாங்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, அன்றாடங்காட்சியா இருக்கிற ஏழை குடிமகனை பற்றிய பதிவு.
 முதல்குடிமகனான ஜனாதிபதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட மாளிகை, எத்தனை மணிநேரமும் பேசிக்கொள்ளும் வசதியுடன் தொலைபேசி, மாதத்திற்கு நூறு கேஸ்சிலிண்டர்கள்,எந்த நேரத்திலும் தனது குடும்பம், சொந்தபந்தங்களை அழைத்துச்செல்ல இலவச விமான டிக்கெட்.... (முன்னால் ஜனாதிபதி பிரதிபா பாட¢டேல் தான் இதுவரை இருந்த ஜனாதிபதிகளிலேயே அதிகமாக வெள்நாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டவர் ) என இன்னும் பல இலவச வசதிகள் உண்டு.

            இதுவரை இருந்த ஜனாதிபதிகள் குண்டு துளைக்காத வெள்ளை நிற அம்பாசிடர் காரில் தான் பயணித்தார்கள்.தற்போது அமெரிக்க அதிபருக்கு இணையாக இந்திய ஜனாதிபதிக்கும் கார் ரெடி, இந்த காரின் ஸ்பெஷல் விஷயங்கள் ...

 • மெர்சிட்ஸ்பென்ஸ் எஸ்.600 ரகத்தை சேர்ந்த இந¢த கருப்பு காரின் விலை ரூ.6 கோடி, இதை கார் என்பதை விட நகரும் ஆபீஸ் எனலாம்.
 • ஆறுபேர் இதில் அமரலாம், டிரைவரும் அவர் பக்கத்தில் ஜனதிபதியின் உதவியாளரும் அமரும் முன்புறம்,சவுண்ட்புரூப் கண்ணாடித்தடுப்பால் பிரிக்கப்பட்டிருக்கும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் பேசுவது எதுவும் இவர்களுக்கு கேட்காது.
 • பின்புற இருக்கைகளில் வழக்கமான காரைப்போல முதுகைப்பார்த்துக் கொண்டு அமரவேண்டியதில்லை. நான்குபேர் எதிரேதிரே பார்த்தபடி அமரலாம். உயர்ரக மரத்தாலும் ஒரிஜினல் லெதராலும் வடிவமைக்கப்பட்ட உட்புறம்.
 • அதிநவீன ஃபிரிட்ஜ் உள்ளே உண்டு.ஜில்லென்று தண்ணியடிக்கலாம்.
கார்வசதிகள் வீடியோ
  • எவ்வளவு வெயில் அடித்தாலும் உள்ளே ஏ.சி போதுமான அளவு இருக்கும். ஏ.சி. இயந்திரத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் தானாகவே வெளிகாற்று உள்ளே வந்துவிடும். உள்ளே தீப்பிடித்தால் தீயணைப்புக்கருவி தானகவே இயங்கி தீயை அணைத்துவிடும்.
  • பின்புறம் வரும் வாகனங்களை கண்காணிக்க கேமரா இருக்கிறது.துப்பாக்கி புல்லட் , கையேறி குண்டுகள் எதுவும் காரைத்துளைக்காது.காரின் டயர் கூட புல்லட்புரூப், ஒருவேளை ஏதாவது விபரீதம் நிகழ்ந்து பங்ச்சர் ஆனால் அந்த நிலையிலும் மணிக்கு 30 கிமீ வேகத்தில் காரை ஓட்டலாம்
  • செயற்கைக்கோள் தொடர்பு, இன்டர்நெட்தொடர்பு,ஜி.பி.எஸ் தொடர்பு எல்லாம் கிடைக்கும்.
  • எதாவது விபத்தில் சிக்க நேர்ந்தால் உள்ளே இருக்கும் போன் தானாகவே இயங்கி எமர்ஜென்சி உதவியை அழைக்கும்.
  கோடிகோடியாய் குவிக்கும் இந்தியர்கள்..

  காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜின்டால் நிறுவனத்தின் தலை வருமான நவீன் ஜின்டாலின் ஆண்டு வருமானம் ரூ.69.76 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.18 லட்சத்து 90 ஆயிரம்.

  சன் தொலைக்காட்சி குழும நிறுவனர் கலாநிதிமாறனின் ஆண்டு வருமானம் 37.08 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம்.

  அவரது மனைவி காவேரி மாறனின் ஆண்டு வருமானம் ரூ.37.08கோடி. நாளொன்றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம்.

  கடைசிகுடிமகன்......
   நீங்கள் கிராமத்தில் வசித்தால் தினசரி ரூ.25ம், நகரத்தில் வசித்தால் ரூ32ம் வருமானம் கிடைத்தால் நீங்கள்தான் பணக்காரர் என்கிறது இந்தியதிட்ட கமிஷன் புள்ளி விவரம். உங்களுக்கு ரேசன் பொருட்கள் கூட கொடுக்க தேவையில்லை என்கிறது. ஆதாவது கிராமத்தில் வாழ்பவராக இருந்தால் நபர் அடிப்படையில் மாத வரு மானம் ரூ.781-ம், நகரத்தில் வசிப்பவராக இருந்தால் ரூ. 965ம் பெறுபவராக இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளனர். இதை வைத்துக் கொண்டு உணவு, கல்வி, மருத்துவச் செலவு ஆகியவற்றை சமாளித்துவிடலாம் என்று அவர்கள் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.கடந்த 2001 முதல் 2010 வரை இந்தியாவில் கடன்பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் என்ணிக்கை 1லட்சம் பேர்.தினமும் 2 வேளை உணவு கூட இல்லாமல் இரவு தூங்க செல்பவர்கள் 40 சதம்பேர்,இப்படிபட்ட நாட்டில் ஜனாதிபதிக்கு மக்கள் வரிபணத்தில் இவ்வளவு வசதிகள் இலவசங்கள் தேவைதானா?
  - செல்வன்
  உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
  Related Posts Plugin for WordPress, Blogger...