ஃபிலிம் பேர் விருதுகள் -2012 ஏ.ஆர்.ரஹ்மான் விதியாபாலனுக்கு விருது


ஹிந்தி திரைப்பட உலகின் 57வது ஃபிலிம் பேர் விருதுகள் வழங்கும் விழா,  ஞாயிற்றுக்கிழமை (29.1.2012 ) மும்பை யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம், சிறந்த வசனம், சிறந்த துணை நடிகர், சிறந்த விமர்சனத்துக்குள்ளான திரைப்படம், சிறந்த சினிமாடோகிராபி மற்றும் சிறந்த நடன அமைப்பு ஆகியவற்றுக்கு அத்திரைப்படம் தேர்வானது.
சிறந்த நடிகராக 'ராக்ஸ்டார்' திரைப்படத்தில் நடித்த ரன்பீர் கபூரும், சிறந்த நடிகையாக 'தி டேர்டி பிக்ஸர்ஸ்' திரைப்படத்தில் நடித்த விதியா பாலனும் தெரிவித்தனர். ஹிருத்திக் ரோஷன், ஃபர்ஹான் நடிப்பில் உருவான 'Zindagi Na Milegi Dobara' திரைப்படம் 7 ஃபிலிம்பேர் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்தது.

ரன்பீர் கபூரின் ராக்ஸ்டார் திரைப்படம், 5 ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றுக்கொண்டது. இதில் சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.

விருதினை பெற்றுக்கொண்ட ரன்பீர் கபூர் கருத்து தெரிவிக்கையில், இது எனக்கு நான்காவது விருது, ஒவ்வொரு கனவும் நனவாகி வருகிறது. மிக உன்னதமாக உணர்கிறேன். நன்றி இம்தியாஸ் (ராக்ஸ்டார் இயக்குனர்). என் மீது நம்பிக்கை வைத்து ராக்ஸ்டாரை என் கையில் ஒப்படைத்தற்கு. நான் உங்களை (ரசிகர்களை) தொடர்ந்து திரைப்படங்களிலேயே சந்திக்கிறேன் என்றார்.
தென்னிந்திய பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் உண்மையான வாழ்க்கை பின்னணியை மையமாக வைத்து உருவான 'தி டேர்டி பிக்ஸர்ஸில்', சில்க் சிமிதாவின் கதாபாத்திரத்தில் நடித்த வித்தியா பாலன், சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில், இவ்விருதை ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். பெண்களை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு காண்பித்த இரவு இது என்றார்.

-சத்யஜித்ரே
மேலும் சில சினிமா செய்திகள்




ஸ்டில் கேமராவில் எடு்க்கப்படும் மெரினா- வழக்கு எண் 18/9’

டின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை



உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்



Comments

விருது பெறுபவர்களுக்கு எமது வாழ்த்துகள்