23 நவ., 2011

டின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை


சினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.


16 வயது இயக்குனர் ஸ்பீல்பெர்க்.....

யூதமதத்தை தீவிரமாக கடைபிடிக்கிற குடும்பத்தில் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் 1946ல் பிறந்தவர்.ஸ்பீல்பெர்கின் அம்மா லேத்ஆல்டர் பியானோ கலைஞர்.அப்பா அமோல்ட் ஸ்பீல்பெர்க் எலக்ட்ரிகல் இஞ்சினியர். பள்ளிக்கூட பாடங்களை விட சினிமா பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் சிறுவயதிலேயே அவருக்கு இருந்தது.அவரது அப்பா வாங்கிக்கொடுத்த 8எம்.எம். கேமராவில் தானே கதை எழுதி படம் பிடித்து அக்கம் பக்கம் சிறுவர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார்.படம் பார்க்க வந்தவர்களிடம் சினிமா டிக்கெட்க்கு 25 செண்ட பணமும் வசூலித்துள்ளார். அதிலும் அவர் தங்கை பாப்கான் விற்று சம்பாதித்தார் என்பது ஸ்பீல்பெர்கின் வியாபார புத்திக்கு எடுத்துக்காட்டு.
         13வயதில் ஸ்பீல்பெர்க் எடுத்த ஆப்பிரிக்க பின்னணிகொண்ட 40 நிமிடப் படம் பலரது பாராட்டைப் பெற்றது. அதன் பிறகு அவரது முழுநீளப்படமான firelight
 படம் 500 அமெரிக்க டாலரில் தயாரானது.1968ல் திரைப்படக்கல்வி முடித்த போது 28 நிமிட ambin(1968)
 என்ற குறும்படம் எடுத்தார்.இந்த குறும்படத்தை பார்த்த உலகின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான யூனிவர்சல், ஸ்பீல்பெர்குடன் நீண்ட சினிமா தயாரிப்புக்கான ஒப்பந்தத்தை போட்டு கொண்டது.அப்போது ஸ்பீல்பெர்க் வயது 16 தான். இந்த சாதனை இயக்குனர்களின் வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையாகும்.

ஸ்பீல்பெர்கின் சினிமா வெற்றிக்கு காரணம் என்ன?....

அவரது படங்கள் முழுவதும் சினிமா மொழியை மட்டுமே தாங்கி, வசனங்கள் குறைவாக கையாளப்பட்டு இருக்கும். மொழியை எப்படி கையாளுவது என்பதில் ஸ்பீல்பெர்க் ஆளுமை மிக்கவர். அவரது எல்லாப்படங்களிலும் நன்மைக்கும்,திமைக்கும் இடையிலான போராட்டமும் கடைசியில் நன்மை வெற்றி பெறுவதும் தான் மையக்கருத்தாகும். ஆனால் ரசிகர்களை கடைசிவரை சீட்டின் நுனியில் அமரவைப்பதுதான் அவரது அசகாய உத்தி.

அவரது படங்கள்...

.firelight
 ambin,
e.t.,
close encounters of the third kid ,
indiana jones,
scinler list,
jaws,
 jurassic park,
sugarland exprsess,
colour purple,
saving pravate ryan,
raider of the lost ark,
tintin

 ஸ்பீல்பெர்கின் வியாபார புத்தியும், கதைத் திருட்டும்....

ஸ்பீல்பெர்கிகன் அனைத்துப் படங்களும் அவருக்கு வசூல் ரீதியாக சாதனை எற்படுத்தியவை.ஜாஸ்படம் ஸ்பீல்பெர்கை அமெரிக்காவின் இளம் மில்லினியராக மாற்றியது. ஜூராசிக்பார்க் படம் அவருக்கு 914 மில்லியன்டாலர் வசூல் செய்து சாதனை செய்து இதற்கு மேல் ஒரு இயக்குனராக பணம் சம்பதிக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளியது.இதில் இ.டி,ஜாஸ்,க்லோஸ் என்கவுண்டர், போன்ற படங்கள் பல ஆஸ்கார் விருதுகளை பெற்றுதந்துள்ளது.இராண்டாம் உலப்போரில் 1100 யூதர்களின் உயிரை ஒரு ஜெர்மானிய வியாபாரி காப்பாற்றிய கதையை வைத்து எடுக்கப்பட்ட ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் ஸ்பீல்பெர்க்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை பெற்று தந்தது.
 ஸ்பில்பெர்க் ம¦து வைக்கப்பட்டும் விமர்சனம் அவர் ஒரு கதை திருடர் என்பது. இயக்குனர்களின் பிதாமகனாக பலராலும் கருத்தப்படும் ஆல்பிரட் ஹிட்சாக், ஒரு முறை தன்னை பார்க்க வந்த ஸ்பீல்பெர்கை கதை திருடன் என சொல்லி துரத்தியிருக்கிறார். சத்யஜித்ரே உருவாக்கிய கதையை சற்று மாற்றி தன்னுடை கதையாக போட்டுக் கொண்ட படம் க்ளோஸ் என்கிற விவாதம் நடந்தது. இது போன்ற சர்ச்சைகள் இருந்தாலும் ஸ்பீல்பெர்கின் வெற்றி அதை மறைத்து விட்டது.

டின்டின் படத்தின் கதை என்ன?......


டின்டின் படத்தை பற்றி ஒரேவரியில் சொல்ல வேண்டுமானால், 2 மணிநேரம் நீங்களும் குழந்தைகளாக மாற வேண்டுமா?. டின்டின் பாருங்கள்.டின்டின் உலகத்தில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வெறித்தனமாக ரசிக்கப்படுகிற கேரக்டர்.வாள்வீச்சு, குவிந்து கிடக்கும் தங்கக்காசுகள், சுனாமி போன்ற ஆக்ரோசமான கடலைகள் என அனைத்தையும் கண்முன் நிறுத்துகிற 3டி படமாக டின்டின் வெளிவந்திருக்கிறது.டின்டின் ஆபுர்வ செய்திகளுக்காக பல சாகசங்களை செய்கிற திறமையான துறுதுறு நிருபர்.400ஆண்டுகளுக்கு முன் கடலில் முழ்கிய கப்பலில் உள்ள புதையலை பற்றிய செய்தி டின்டின்க்கு கிடைக்கிறது.அந்த ப் புதையல் கேப்டன் ஹடாக் என்பவரின் மூதாதையருக்கு சொந்தமானது. அவரை வில்லன் சகாரின் தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.புதையலை மீட்டு ஹடாகிடம் ஒப்படைக்க சகாரின்,டின்டின் இடையில் நடைபெறும் மோதல்தான் கதை.
ஃப்ளைட், கார், பைக் என டின்டின் நிகழ்த்துகிற சகாசங்கள் பிரமிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வளவு திறமையான,புத்திசாலித்தனமான டின்டின் கேரக்டர் பால்வடியும் முகம் கொண்ட இளைஞனாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
- சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...