பிரதான செய்திகள்

கமல்ஹாசன் மலையாளியா ??????

நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு  .....
பிரான்ஸ் நாட்டின்‘செவாலியே’ விருது,தமிழ்த் திரைப்படத்துறையில் சிவாஜிகணேசனுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. இதற்காக தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் திரை உலகமும்கமல்ஹாசனை கொண்டாடி வருகின்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட புகழ்பெற்ற பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கமல்ஹாசனுக்கு ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கேள்வி  எழுப்பி வருகின்றனர்.
இதே நேரத்தில்     கேரளமுதல்வர் பினராயி விஜயனும் தம்முடைய முகநூல்பக்கத்தில் கமலுக்குவாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ‘ உங்களுக்குத்தகுதியான விருது செவாலியே; இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சி நீங்கள்...’ என பினராயி புகழாரம் சூட்டியிருந்தார். இந்த பாராட்டிற்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார். அதில், ‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி!’ என்று கமல் கூறியுள்ளார்.

செவாலியே கமலுக்கு .....

கமல் = விருது... இது தான் சரியாக இருக்கும். சினிமா துரையில் கமல் வாங்காத விருதுகள் இல்லை. இந்தியாவுக்கு வெளியே இருந்தும் விருதுகள் வரத்தொடங்கி விட்டன. ஆஸ்கார் விருதுக்கு முன்னோட்டமாக செவாலியே விருது கிடைத்திருக்கிறது.
               ஒருதுறையில் சலிபில்லாமல் தொடர்ந்து புதுமை முயற்சிகளை செய்து கொண்டே இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கமல் சினிமா துறையில் தொடர்ந்து புதிதுபுதிதாய் சாதனைகளையும், சோதனை முயற்சிகளையும் செய்து கொண்டிருப்பவர்.சோதனை முயற்சிகள் அருக்கு சில சமங்களில் "சோதனையாக "அமைந்து விடுவதும் உண்டு. வெற்றி தோல்விகளை கணகிலெடுக்காமல் தனது பயணத்தை தொடரும் கமலுக்கும்,தமிழ் சினிமா உலகத்திற்கு கிடைத்திருக்கும் அங்கிகாரம் செவாலியே விருது.


              சினிமா துறையில் A TO Z  தெரிந்த கலைஞன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தூக்கி வளர்த்த பிள்ளை கமல். அவருக்கு வாழத்துக்களை சொல்வதோடு அவர் பற்றிய இன்றைய வானத்தில் வந்துள்ள  கமல் பற்றி பதிவுகளின் தொகுப்பு ....