31 ஆக., 2016

கமல்ஹாசன் மலையாளியா ??????

நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு  .....
பிரான்ஸ் நாட்டின்‘செவாலியே’ விருது,தமிழ்த் திரைப்படத்துறையில் சிவாஜிகணேசனுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. இதற்காக தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் திரை உலகமும்கமல்ஹாசனை கொண்டாடி வருகின்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட புகழ்பெற்ற பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கமல்ஹாசனுக்கு ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கேள்வி  எழுப்பி வருகின்றனர்.
இதே நேரத்தில்     கேரளமுதல்வர் பினராயி விஜயனும் தம்முடைய முகநூல்பக்கத்தில் கமலுக்குவாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ‘ உங்களுக்குத்தகுதியான விருது செவாலியே; இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சி நீங்கள்...’ என பினராயி புகழாரம் சூட்டியிருந்தார். இந்த பாராட்டிற்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார். அதில், ‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி!’ என்று கமல் கூறியுள்ளார்.

மேலும், ‘வேற்று மாநிலத்து (கேரள) முதல்வர்உங்கள் சாதனைகளை மனம் திறந்து உண்மையாகப் பாராட்டுவது எவ்வளவுஅழகு..?!’ என்று சிலர் தம்மிடம் சொல்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இதில் தனக்கு மாற்றுக் கருத்து உள்ளதாகவும்,
‘பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்தமுதல்வர்; நீங்கள் மலையாள சினிமா பார்க்கும்எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள்.. கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று?’ என, அவர்களுக்கு தான் பதில் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்வச் பாரதம் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து நாட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுமாறு கடந்த 2014ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு அன்போடு அழைப்ப விடுத்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரே இன்று கமல்ஹாசன் செவாலியர் விருது பெற்றதற்காக இதுவரை வாழ்த்தாது கமல் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
 மேலும்  விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டபோது, நாட்டைவிட்டே வெளியேறுவேன் என பிரகடனம் செய்தவர் கமல்ஹாசன்.. இப்போது மாநில முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை என்பதற்காக 'இனத்தையே' மாற்றிக் கொண்டு மலையாளியாகிவிட்டார் கமல்.
செல்வன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...