கொரோனா கவிதை




கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தன் ஆட்டைத்தை அதிகரித்தபடி செல்கிறது.பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் மரம்,பறவைகள்,செடிகள் நம்மைபார்த்து நீங்கள் அவ்வளவு தானா என கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் அதுதான் கவிதை.
--------------------------------------------------------------
மனிதர்களே நீங்கள் அவ்வளவுதானா
விமானம் ,ராக்கெட்
கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவுதானா?
என பறவை கேட்டது...
உலகை பல முறை அழிக்கும்
அணுகுண்டு கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவு தானா ?
என மரம் கேட்டது...
எங்களை மரபணு மாற்றம்
செய்தீர்களே நீங்கள்
அவ்வளவு தானா ?
என காய்கறிகள் கேட்டது...
நான் உயர்ந்தசாதிக்காரன்,
நான் பெரிய பணக்காரன்
என பீற்றிக்கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என காற்று கேட்டது...
உலகை அளப்பிறந்தவர்கள்
நாங்கள் அழிவற்றவர்கள்
என தலைகனம் கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என டைனோசர் கேட்டது....
இந்த பிரபஞ்சத்தில் எங்கும்
இல்லாத பரிணாமம்
நாங்கள் என்றீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என பூமி கேட்டது...
இந்த பூமிக்கு
நீங்கள் வந்து செல்லும்
விருந்தினர்கள் மட்டும்
நீங்கள் அவ்வளவுதான்
என்றது இயற்கை
 அ.தமிழ்ச்செல்வன்
திருமங்கலம் -மதுரை

Comments

Yarlpavanan said…
அருமையான வரிகள்

http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html
உண்மை தான்... பலவற்றை சொல்லிக் கொடுக்கிறது... மனிதம் தழைக்க வேண்டும்...
  • தென் இந்தியாவின் ஸ்பா குற்றாலம் !!
    23.07.2019 - 0 Comments
    தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின்…
  • மாணவர்களே ராஜபக்சேவுக்கு எதிரான உண்ணாவிரத்தை உடனே நிறுத்துங்கள் ...
    12.03.2013 - 4 Comments
    ராஜபக்சேவுக்கு எதிரா நம்மால ஓன்னும் பண்ணு முடியாது?. உண்ணாவிரதம் இருக்குறது வெட்டிவேலை... நல்ல படிச்சமா?…
  • காமராஜரும் மோடியும் ஒரே சிந்தனை உடையவர்களாம்-  வெங்கய்யா நாயுடு
    16.07.2015 - 1 Comments
    காமராஜரின் 113 வதுபிறந்த தின விழா விருதுநகரில் கொண்டாடப்பட் டது. ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பினர்,…
  • 115 வயது 'ஜப்பான் பாட்டி'யும் - குழந்தை ரோபோவும்
    13.01.2013 - 0 Comments
    உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி (115 வயது).…
  • தமிழ்நாவல் எழுதிய கன்னடருக்கு சாகித்ய அகாடமி விருது..
    27.03.2014 - 2 Comments
    தேர்தல் நேரத்தில் 10தோடு 11 ஆக போன முக்கிய தகவல் இது.கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட இறையடியான் கன்னட நாவலை…