கொரோனா கவிதை




கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தன் ஆட்டைத்தை அதிகரித்தபடி செல்கிறது.பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் மரம்,பறவைகள்,செடிகள் நம்மைபார்த்து நீங்கள் அவ்வளவு தானா என கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் அதுதான் கவிதை.
--------------------------------------------------------------
மனிதர்களே நீங்கள் அவ்வளவுதானா
விமானம் ,ராக்கெட்
கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவுதானா?
என பறவை கேட்டது...
உலகை பல முறை அழிக்கும்
அணுகுண்டு கண்டுபிடித்தீர்களே
நீங்கள் அவ்வளவு தானா ?
என மரம் கேட்டது...
எங்களை மரபணு மாற்றம்
செய்தீர்களே நீங்கள்
அவ்வளவு தானா ?
என காய்கறிகள் கேட்டது...
நான் உயர்ந்தசாதிக்காரன்,
நான் பெரிய பணக்காரன்
என பீற்றிக்கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என காற்று கேட்டது...
உலகை அளப்பிறந்தவர்கள்
நாங்கள் அழிவற்றவர்கள்
என தலைகனம் கொண்டீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என டைனோசர் கேட்டது....
இந்த பிரபஞ்சத்தில் எங்கும்
இல்லாத பரிணாமம்
நாங்கள் என்றீர்களே
நீங்கள் அவ்வளவு தானா?
என பூமி கேட்டது...
இந்த பூமிக்கு
நீங்கள் வந்து செல்லும்
விருந்தினர்கள் மட்டும்
நீங்கள் அவ்வளவுதான்
என்றது இயற்கை
 அ.தமிழ்ச்செல்வன்
திருமங்கலம் -மதுரை

Comments

Yarlpavanan said…
அருமையான வரிகள்

http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html
உண்மை தான்... பலவற்றை சொல்லிக் கொடுக்கிறது... மனிதம் தழைக்க வேண்டும்...
  • எனது ஊரில் துப்பாக்கி படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
    16.11.2012 - 6 Comments
    நேற்று எனது ஊரில் ( மதுரை மாவட்டம் திருமங்கலம்) துப்பாக்கி படம் இரவு காட்சி ஓடிக்கொண்டிருந்த…
  •  அழியும்  நிலையில் 800 ஆண்டு பழமையான  நாராயணன் லட்சுமி   கற்சிற்பம்.
    24.09.2023 - 0 Comments
     நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் அழிவு நிலையில்…தலைப்பகுதி உடைந்த நிலையில்  நாராயணன் லட்சுமி…
  • நீங்கள் முதன் முதலில் கேட்ட கதை எது?  எஸ்.ராமகிருஷ்ணன்
    24.10.2013 - 2 Comments
    நீங்கள் எப்போது யாரிடம் கதை கேட்டீர்கள், நீங்கள் எப்போது யாருக்குக் கதை சொல்லியிருக்கிறீர்கள் ? நீங்கள்…
  • காங்கிரஸ்- பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
    25.10.2012 - 2 Comments
    ஊழல் என்ற குட்டையில் ஊறி மொதித்த மட்டைகள்தான் காங்கிரசும் பாஜகவும். ஊழல் என்னும் ஓட்டப்பந்தயத்தில் போட்டி…
  • உலக குற்றங்களின் தலைவன் அமெரிக்கா
    23.04.2012 - 1 Comments
    அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக திகழ்கிறது என்ற பயங்கரவாதி பின்லேடன் கூறிய…