நீங்கள் தேசவிரோதியா?

தமிழகத்தில் தேர்தல் வேலைகள் துவங்கி விட்டது. யார் யாரோடு கூட்டணி,எந்த கட்சி ஜெயிக்கும் என்ற கவலையில் வட இந்தியாவில் நடந்துவரும் பிரச்சனைகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை...
             இந்தியாவில் புகழ் பெற்ற ஜவர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சிலரை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தூண்டுதலால் தேச தூரோகிகளாக குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.இதற்கு எதிராக போராடிய மாணவர்களை  போலிஸ் மற்றும் காவிக்கூட்டமும் கண்முடித்தனமாக தாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு  ஆதரவாக ராகுல்காந்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் போராட்டத்தில் கலந்து கொணாடார்கள்.

                போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ராகுல்காந்தியை தேசதுரோகி என்கிறார் அமித்ஷா. சிபிஎம் கட்சியின் அலுவலகத்தை பாஜக வின் எபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிபிஎம் மத்தியக் குழு அலுவலக பெயர் பலகை தார்பூசி  சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராமுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது  மதவெறி அமைப்பு.
மாணவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக போராடுபர்களையும் தேசதுரோக குற்றம் சாட்டும் பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் இந்திய சுதந்திர போட்டாரத்தில் அவை எப்படி நடந்து கொண்டன...



1.ஆங்கிலேயர்களை விமர்சித்து எழுதியது - ஜீரோ
2. ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதியது - 16 முறை
3. ஆங்கிலேய எதிர்ப்புச் சின்னமான வந்தே மாதரம் பாடியது - ஜீரோ
4. விடுதலைப் போராட்டத்தை அவதூறு செய்து எழுதியது - 16 முறை5. விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
6. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டுமென எழுதியது - ஜீரோ
7. ஜாலியன் வாலாபாக், ககோரி குண்டு வழக்கு, கதார் இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு - ஜீரோ
8. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தங்களின் உயிரை அர்ப்பணித்தவர்களைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
9. தியாகிகளின் தியாகத்தை கேவலப்படுத்தி எழுதியது - 10 முறை
10. சுதேசியைப் பாராட்டிய குறிப்புகள் - ஜீரோ-இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.
11.1947 -இந்தியா விடுதலை பெற்ற போது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக் கொடியை ஏற்றியவர்கள்.
 12.தேசத் தந்தையை படுகொலை செய்ததுடன், இனிப்புவழங்கி கொண்டாடி யவர்கள்.
13.தலித் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசி வருபவர்கள்
14.1992-ல் பாபர் மசூதியை இடித் தவர்கள். இந்து முஸ்லீம் பகைமைத்தீயை நாடு முழுவதும் எரியவிட்ட வர்கள்.
15.2015-ல் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, நரேந்திர தபோல்கர் என புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர்களை படுகொலை செய்தவர்கள்.

கூலிகேட்டால், குடிநீர் கேட்டால், குடியிருப்புக் கேட்டால், விலை உயர்வுக்குஎதிராகப் நீங்கள் போராடினால், ஜனநாயக உரிமை கேட்டால் இனி மேல்தேசவிரோத முத்திரை குத்தப்படும். இதுதான் இன்றைய பாஜக ஆட்சியாளர்களின் நியதி.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

tipu said…
soodu soranai arravanaga iruppadhai vida desa drogiyaga iruppadhu evvalavo mel.
Unknown said…
நீங்கள் தேச துரோகிகள்தான்