“49 ஓ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், - கவுண்டமணி

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஒ - படத்தில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. செந்தில் - கவுண்டமணி காமடி மறக்க முடியாது. ஒருகட்டத்தில் இருவரும் தனிதனியாக பிரிந்து நடித்தவர்கள் ,பின் சினிமா துறையிலிருந்தே விலக்கி போனார்கள். கவுண்டமணி மீண்டும் 49ஒ மூலமாக திரும்பி யிருக்கிறார்.சென்னையில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற “49 ஓ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள  கவுண்டமணி பேசியதிலிருந்து....

விசாயம் இல்லேன்னா உலகம் ஏதடா? உயிர் ஏதடா? பல கட்டிடங்கள் உருவாக வயல்காட்டை அழிச்சாங்க. இதுதான் இந்த படத்தோட கதை. விவசாயம் நாட்டுல அவசியம் தேவை. விவசாயம் இல்லேன்னா நாம உயிரோடவே இருக்க முடியாது. விவசாயமும், விவசாயிங்களும் அழியக்கூடாது.
அப்படிங்கிற ஒரு புரட்சிகரமான கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.விவசாயிகளுக்கு அந்த மண்ணுதான் உடல், உயிர், மானம், கௌரவம், எல்லாமே.ஒரு வருசம் விளையல அதனால நிலத்தை வித்துட்டேன்னு சொல்லக் கூடாது. ஒரு வருசம் விளையலேன்னா அடுத்த வருசம் விளையும்.அரசியல்வாதி ரியல் எஸ்டேட் கார்ப்பரேட் கம்பெனி இவங்க விவசாயிகிட்ட தேடி வர்றாங்க எதுக்கு வர்றாங்க. அந்த நிலத்துல கால் ஏக்கராவது வாங்கிடலாமுன்னு வர்றாங்க. அந்த நேரத்துல தான் விவசாயிங்க ஏமாந்திடக்கூடாது. சிலர் காசுக்கு ஆசைப்பட்டு வித்திடுறாங்க.
அந்த இடத்துல பெரிய கட்டிடம் வந்திடுது. இப்படி ஒவ்வொரு விவசாயிங்களும் நிலத்தை விற்க கட்டிடங்களாக வந்துக்கிட்டே இருந்தாவிவசாயம் செய்ய எங்க நிலம் இருக்கும்? நாம எப்படிசாப்பிட முடியும். அதனால் விவசாயிகள் நிலத்தை விற்கக் கூடாது. விவசாயிகள் விவசாயிகளாகத்தான் இருக்கணும். அப்படின்னு சொல்ற படம்தான் இந்த 49 ஓ.இது நம்ம ஊர் விவசாயிங்களுக்கு மட்டும்சொல்ற கதை இல்லை. இங்கிலாந்து, அமெரிக்கா,ஆப்பிரிக்கா என எல்லா நாட்டு விவசாயிங்களுக்குமான படம். நம்ம ஊர் விவசாயி வேட்டி கட்டியிருக்கான். அமெரிக்காகாரன் பேண்ட் போட்டுக்கிட்டு வேலை செய்றான். இதுதான் வித்தியாசம். ஆனாவிசயம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். நெல்லோ,கொள்ளோ, கோதுமையோ உலகத்துல எந்த ஒரு மூலையில் ஒரு விவசாயி இருந்தாலும் அவன் நிலத்தை காப்பாத்தணும். அப்பத்தான் மக்கள் வயிறார சாப்பிட முடியும். - 


தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Unknown said…
விசயம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். நெல்லோ,கொள்ளோ, கோதுமையோ உலகத்துல எந்த ஒரு மூலையில் ஒரு விவசாயி இருந்தாலும் அவன் நிலத்தை காப்பாத்தணும். அப்பத்தான் மக்கள் வயிறார சாப்பிட முடியும். -
  • உலகைக் கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ்
    18.05.2017 - 0 Comments
    இன்றைய கணினி உலகைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர் ரான்சம்வேர். அதிரடியாகப் புகுந்து கடந்த…
  • சென்னை நகருக்கு வயது 375 ....
    22.08.2014 - 0 Comments
    சென்னை நகருக்கு இன்றோடு 375 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு…
  • நாம் அனைவரும் ஐந்தில் ஒருவரே - உயர்மொழி  இயக்குனர் பேட்டி
    06.09.2012 - 3 Comments
    ஜந்தில் நீங்கள் எந்த வகை ? நான்,நீங்கள் அனைவரும் ஆயிரத்தில் ஒருவனோ லட்சத்தில் ஒருவனோ கிடையாது, என்கிறார்…
  • ''கும்கி'' புதிய ஸ்டில்கள்
    25.08.2012 - 3 Comments
    ''கும்கி'' ரிலிசுக்காக காத்திருக்கிறது, அதன் இசை வெளியீட்டு விழாவே கமல்,ரஜினி கலந்து கொண்ட மிக பிரமாண்ட…
  • கமலின் பெர்சனல் முகம்
    28.09.2012 - 8 Comments
    உலகநாயகன்,ஆஸ்கார்நாயகன் என ரசிகர்களாலும், அவரின் நண்பர்களாலும் அன்போடு அழைக்கப்ட்ட கமல் தற்போது அதை…