தனியொருவன் -அரவிந்த சாமியின் படம்..

நான் வார ம் ஒரு சினிமா பார்ப்பவன் . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல திரில்லர் படம் பார்த்த திருப்பதியான படமாக தனியொருவன்  அமைந்தது. படத்தின் ஹீரோவாக ஜெயம்ரவி இருந்தாலும் உண்மையில் தனியொருவன் அரவிந்த்சாமி தான் ஹீரோ.  ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு வில்லத்தனம். கடைசிவரை அலட்டக்கொள்ளமல் அவர் செய்யும் வில்லதனம் புதுசு. இப்படி ஒரு மிக அழகான வில்லன் இந்திய சினிமாவில் இல்லை எனலாம்.

இந்தியாவில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் பின்னணியில் நிகழும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், ஆள் கடத்தல்கள் என புதிய கோணத்தில் கொஞ்சம் விலாவாரியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். ஓர் அசலான புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி, மொத்த படத்தையும் சாதுரியமாக அரவிந்த் சாமி தோளில் வைத்திருக்கிறார்.
                                        எந்த இடத்திலும் தொய்வு இல்லாத கதை. தேவையற்ற காமடிகள் இல்லை. பாடல்கள் இருந்தாலும் திணிப்பாக இல்லாமல் இயல்பாக இருக்கின்றன.ஆதி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் படம் முழுக்க ‘தீமைதான் வெல்லும்’ பாடலையே பயன்படுத்தியிருக்கிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.   ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கிறது. சேசிங் காட்சிகளில் இவரது கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது.
 கதை சுருக்கமாக....
நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐ.பி.எஸ் பயிற்சி பெற்று வருகிறார் ஜெயம் ரவி. இவரை அதே பயிற்சியில் இருக்கும் நயன்தாரா, காதல் கொள்கிறார். ஆனால், ஜெயம் ரவியோ தனது லட்சியத்தில் தீவிரமாக இருப்பதால் நயன்தாராவின் காதலை ஏற்க மறுக்கிறார்.
ஐ.பி.எஸ். பயிற்சியில் ஜெயம்ரவியுடன், கணேஷ் வெங்கட் ராம், வம்சி கிருஷ்ணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று வெளியுலகத்தில் நடக்கும் தவறுகளை பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தல் செய்பவர்கள், வழிப்பறி திருடர்களை கண்டுபிடித்து கொடுக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் பிடித்துக் கொடுத்தவர்கள் எல்லாம் ஜெயிலில் இல்லாமல் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள். இந்த விஷயம் ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறுகிறார் ஜெயம் ரவி.
இந்த குற்றங்களுக்கு எல்லாம் தலைவனாக சமூகத்தில் பெரும் புள்ளியாக அரவிந்த் சாமி இருக்கிறார் என்று ஜெயம்ரவிக்கு தெரிய வருகிறது. இந்த இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தீமைக்கும், நன்மைக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகிறது. இந்த யுத்தத்தின் இறுதியில் யார் வென்றார்கள்? என்பதே தனி ஒருவன் படத்தின் மீதிக்கதை.

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
Thanks for ur good review
Anonymous said…
One of the best review thanks
  • புரியாத கவிதைகள்
    05.09.2011 - 3 Comments
    ஆரம்பிப்பதும் முடிப்பதுமாய் அல்லோலப்பட வேண்டியிருக்கிறது புரிதல்…
  • வடிவேலு?... கவுண்டர் மீண்டும் வருகிறார்...
    05.03.2013 - 2 Comments
    வடிவேலு கிட்டதட்ட சினிமா உலகத்திலிருந்தே வெளியேறிவிட்டார். அவரை நடிக்க வைக்க எந்த தயாரிப்பாளரு…
  • சாமிகளுக்கு சாவு உண்டா?...
    05.02.2014 - 4 Comments
    . உண்டு. கடவுள் நம்பிக்கையாளர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.கடவுள்கள் பிறக்கிற போது இறந்து போவதும்…
  • டேம்- 999  படத்தின் பொய்பிரச்சாரத்திற்கு பதிலடியாக குறும்படம் வெளியீடு.
    01.12.2011 - 3 Comments
    இந்தியா முழுவதும் இன்று விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது மூல்லைபெரியாறு பிரச்சனை. கேரளாவில் அணையை…
  •  பூமியில் எந்த இடத்திற்கு வெறும் 1 மணிநேத்தில்   போகலாம்???
    16.12.2021 - 0 Comments
     பூமியில் எந்த இடத்திற்கு வெறும் 1 மணிநேத்தில்   போகலாம்??? சீனாவை   எத்தனை…