லோகத்துலேயே’ ரொம்ப பெரிய்ய்ய கட்சியாமே பா.ஜ.க.

உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்ற `பெருமை’ பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துவிட்டதாம். அக்கட்சியில் 8 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முந்திவிட்டதாம்.பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டிருந்தாராம்.இதைத்தொடர்ந்து நாடெங்கும் அக்கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள்.

இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பாஜக உறுப்பினர்களாகச் சேர்ந்ததாக அறிவித்துக் கொண்டார்கள். தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அக்கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அக் கட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டு 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா முதல் இடத்துக்கு வந்துள்ளதாம்.


பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31ல் முடிவடையும் நிலையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துவிடுமாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த 10 கோடிப் பேருக்கும், தாங்கள் பாஜக உறுப்பினர்கள் என்பது தெரியாதாம்!

நன்றி தீக்கதீர்
தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
poda loosu
M jeevan said…
Well said. Nice Article.
Anonymous said…
poor indian people voted to BJP
  • நோட்டாவுக்கு 60 லட்சம்  ஓட்டு...
    18.05.2014 - 0 Comments
    நாட்டில் 60லட்சம் வாக் காளர்கள் எந்த வேட்பாளருக் கும் வாக்களிக்க விரும்பவில் லை என்கிற நோட்டா பொத்…
  • செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை!
    14.07.2012 - 1 Comments
    ‘அண்டர் அச்சீவர்’ - இந்த வார்த்தை, இந்தியாவில் இப்போது பிரபலம். மவுனச்சாமியார் போன்ற அதே, வழக்கமான பிரதமர்…
  • மதுரையில் சுத்தி  பார்க்க என்ன இருக்கு...?
    05.07.2023 - 0 Comments
      மதுரையின் ஒவ்வொரு தெருவும் வரலாற்று முக்கியதுவம் கொண்டது.மதுரையின் வரலாற்றை பல எழுத்தாளர்கள்…
  • சிங்கம் 2 கதை + படங்கள்
    09.05.2013 - 2 Comments
    சிங்கம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை  கொடுத்தபடம். இந்தியில் எடுக்கப்பட்டு அங்கும்…
  • முதல் ''குடிமகனும்'' கடைசி ''குடிமகனும்''
    13.09.2012 - 4 Comments
    டாஸ்மாக் பார்ல கடைதிறக்க சரக்கு வாங்குற முதல்குடிமகன்,இரவு 10 மணிக்கு பார் அடைக்கும் போது கடைசியா சரக்கு…