லோகத்துலேயே’ ரொம்ப பெரிய்ய்ய கட்சியாமே பா.ஜ.க.

உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்ற `பெருமை’ பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துவிட்டதாம். அக்கட்சியில் 8 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை முந்திவிட்டதாம்.பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டிருந்தாராம்.இதைத்தொடர்ந்து நாடெங்கும் அக்கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள்.

இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பாஜக உறுப்பினர்களாகச் சேர்ந்ததாக அறிவித்துக் கொண்டார்கள். தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அக்கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அக் கட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டு 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா முதல் இடத்துக்கு வந்துள்ளதாம்.


பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31ல் முடிவடையும் நிலையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துவிடுமாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த 10 கோடிப் பேருக்கும், தாங்கள் பாஜக உறுப்பினர்கள் என்பது தெரியாதாம்!

நன்றி தீக்கதீர்
தொகுப்பு செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
poda loosu
M jeevan said…
Well said. Nice Article.
Anonymous said…
poor indian people voted to BJP
  • திருப்பறங்குன்றம்- ஆன்மீகம் தாண்டிய  புதிய அனுபவம்
    01.11.2011 - 8 Comments
    இது ஆன்மீக அனுபவமல்ல. திருப்பறங்குன்றம் என்றாலே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தை சரியாக…
  • மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து! எச்சரிக்கிறார் நடிகை நந்திதா தாஸ்
    10.06.2014 - 3 Comments
    நரேந்திரமோடி ஆட்சியின் கீழ் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அஞ்சுவதாக பிரபல…
  • ‘ந்தா வந்துட்டாருய்யா ஜகஜ்ஜால புஜபல வடிவேலு..+ படங்கள்
    13.12.2013 - 1 Comments
    வடிவேலு மீண்டும் தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார்.‘ந்தா வந்துட்டாருய்யா நம்ம வைகை காமெடிப் புயல்…’…
  • தி இந்து தமிழில் - எனது கட்டுரை
    16.11.2015 - 1 Comments
    எனக்குப் பிடித்த வீடு: இயற்கையின் வரவேற்பறை வாஞ்சையுடன் வரவேற்கும், இன்முகத்தோடு வழியனுப்பும் இடமான…
  • ஆனந்தவிகடன் - என்விகடனில் ''இன்றையவானம்''
    07.06.2012 - 15 Comments
    சந்தோசமான தகவலை உங்களோடு பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.துவங்கிய 10 மாதங்களிலேயே விகடன் மூலமாக…