எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விளையாட்டுப் புத்தகங்கள்...

விளையாட்யையும்... கதையையும்  இணைத்து புதுமையான முறையில் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இது குறித்து அவரது இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள்...
ஆறு முதல் பனிரெண்டு வயதுள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக இரண்டு விளையாட்டுப் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறேன்.

இயக்குனர் ஆர்.சி. சக்தி மரணம்... கமல் அஞ்சலி

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி, திங்களன்று சென்னை யில் கால மானார். அவருக்கு வயது 76. ரஜினி காந்த்தை வைத்து “தர்மயுத்தம்“, கமல்ஹாசனை வைத்து “உணர்ச்சிகள்”, லட்சுமி நடித்த “தவம்“, “வரம்“, ரகுவரன் நடித்த “கூட்டுப் புழுக்கள்”, விஜயகாந்த் நடித்த “மனக்கணக்கு” உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் திரைத் துறையில் நாட்டம் கொண்டிருந்தார்.
சுப்பு ஆறுமுகம் நடத்திய வில்லுப்பாட்டு குழுவில் சேர்ந்தார். பின்னர் அன்னை வேளாங்கண்ணி படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

ஸ்ரீரங்கம் தேர்தல் வெற்றி ரகசியம்...

இடைதேர்தல் என்றாலே அது ஆளும்கட்சிக்கு தான் சாதகமாக இருக்கும் என்பது எழுதப்படத வீதி. இதில் ஸ்ரீரங்கம் மட்டும் வீதிவிலக்காக இருக்க முடியாது. ஆள்பலம்,பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட அனைத்தும் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்யப்படும். தேர்தலின்   போது 10 நாட்களுக்கும் மேலாக அமைச்சர்களிலிருந்து,வட்டச்செயலாளர் வண்டு முருகன்கள் வரை ஸ்ரீரங்கத்தை சுற்றி வளைத்தார்கள்.
               தேர்தல் முடிவுகள்  வெளிவரத்தொடங்கிய காலை நேரத்தில்  தொலைகாட்சியில் யாருக்கு எவ்வளவு ஓட்டுக்கள் என பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவி சொன்னார்.... அவங்கதான் ஜெயிப்பாங்க ... இது தெரியாத ? என்றார்.

அனேகன்...காலம் கடந்து நிற்கும் காதலின் கதை

1960 களில் பர்மாவில் துவங்கும் காதல் காட்சிகளும், பாடல்காட்சிகளும், பர்மாவில் ஏற்படும் ராணுவ புரட்சி காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார்.   படத்தின் துவக்கமே படம் நல்லாயிருக்கே, புதுகதையாக இருக்கே என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.  மூன்று விதமாத காலகட்டதில் காதலர்களாகவரும் தனுஷ் ,அமைரா அசத்திகிறார்கள்.அமைரா உதடை குவித்து விடும் முத்தம் சூப்பர். 14 வயது பள்ளி மாணவி, 25 வயது ஐடி மாடர்ன் பெண் இரண்டிலும்  அமைரா அசத்தலாக நடித்திருக்கிறார். கதை முழுவதும் இவரைச் சுற்றியே நகர்வதால், அழகு பதுமையாக இல்லாமல் நடிப்பிலும் தனது திறமையை காட்டியிருக்கிறார்.

மோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...

டெல்லி தேர்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் மிகப்பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த கட்சிக்கும் கிடைக்காத தோல்வி... தோல்வி என்பதை விட மரணஅடி என்று சொல்லலாம்
மோடியை பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லாமே பொய் என்பதை பாஜகவின் இந்த 6 மாத ஆட்சி சொல்லிவிட்டது. ஓபாமா வந்த போது மோடியின் உடை அலங்காரத்தை பார்த்து நாடே  அதிர்ந்தது. மோடியால் இந்தியா வல்லரசாகும் என்றார்கள். இலங்கையில் ஆட்சி மாற்றமே மோடியால்தான் என்றார்கள்.... இப்படி இன்னும் பல பில்டப்புகள் கொடுத்தார்கள் .

என்னை அறிந்தால்.....சூடுபடுத்தபட்ட பழைய சாதம்

அஜித் படங்கள் குறித்து இதுவரை எந்த பதிவும் எனது வலைப்பதிவில் இடம் பெற்றதில்லை. எல்லா நடிகர்களையும் விருப்பு ,வெறுப்பு களோடு விமர்சிக்க முடிகிற போது அஜித் அப்படி பார்க்க முடியவில்லை. அஜித்தை ஓரு நடிகராக கூட பார்க்க மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது படங்கள் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். எந்தவித மாறுபட்ட உடல் மொழியோ, நடிப்போ அவரிடம் இல்லை.துவக்க காலத்திலிருந்து இதுவரை ஓரே மாதியான சலிப்பு தட்டுகிற நடிப்பு அவருடையது.
                      ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு இத்தனை ரசிகர்கள் எப்படி ? அதுவும் இளைஞர்கள் பட்டாளம் குவிகிறதே? மதுரை தியேட்டர்களில் ரஜினியின் லிங்கா படத்தை மிஞ்சுகிற அளவுக்கு

தமிழா - தமிழில் பேசு.... காணொலி

தமிழ்,தமிழர்  என தமிழ் சமூகம் பேசி வருகிற நேரம் இது. தமிழக அரசி யல்வாதிகள் தமி ழையும்,தமிழ் சமூ கத்தையும் தனது அரசியல் ஆதா யத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தமிழ்வழி படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை எந்த அரசும் இதுவரை செய்யவில்லை. இப்போது புதிதாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கட்சியினர் தமிழ் மொழி பாசம் பிடித்து அலைகிறார்கள். திருக்குறளின் பெருமையை இப்போது தான் தெரியவந்திருக்கிறது அவர்களுக்கு..... எல்லாம் 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் வந்த தமிழ் காதல்....