என்னை அறிந்தால்.....சூடுபடுத்தபட்ட பழைய சாதம்

அஜித் படங்கள் குறித்து இதுவரை எந்த பதிவும் எனது வலைப்பதிவில் இடம் பெற்றதில்லை. எல்லா நடிகர்களையும் விருப்பு ,வெறுப்பு களோடு விமர்சிக்க முடிகிற போது அஜித் அப்படி பார்க்க முடியவில்லை. அஜித்தை ஓரு நடிகராக கூட பார்க்க மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது படங்கள் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். எந்தவித மாறுபட்ட உடல் மொழியோ, நடிப்போ அவரிடம் இல்லை.துவக்க காலத்திலிருந்து இதுவரை ஓரே மாதியான சலிப்பு தட்டுகிற நடிப்பு அவருடையது.
                      ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு இத்தனை ரசிகர்கள் எப்படி ? அதுவும் இளைஞர்கள் பட்டாளம் குவிகிறதே? மதுரை தியேட்டர்களில் ரஜினியின் லிங்கா படத்தை மிஞ்சுகிற அளவுக்கு
 அடங்காத அஜித் வெறியர்களின்... பிளாக்ஸ்போர்டுகள்.வால்போஸ்டர்கள் . ஓரு பிளாக்ஸ் போர்ட் வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது."ஆயிரத்தில் ஒருவனல்ல நீ.... ஆயிரமும்் நீயே" .நான் காலைகாட்சிக்கு படத்திற்கு செல்பவன். காலை காட்சியில் எப்படி பட்ட படத்திற்கும் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் என்னை அறிந்தால் .... படத்திற்கு தலைகீழ் இளைஞர் படை திரண்டு தான் வந்திருந்தது.
         கதை சுருக்கத்திற்கு முன்பாக என்னை அறிந்தால் தெறிமாஸ் என்கிறார்கள்.  இரண்டு நாட்களில் 21 கோடி வசூலாம்.....
அதற்கான முக்கிய காரணம் என்னை அறிந்தால் படத்திற்கு போட்டியில்லை ... என்பது கவனிக்க தக்கது.

கதை சுருக்கம்......
சென்னையில் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் சுமனின் உடல் உறுப்புகள் செயல் இழந்துவிட்டதால், அவருக்கு வேறு ஒருவருடைய உடல் உறுப்புகளை பொருத்தியாகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்று, பணம் சம்பாதிக்கும் கும்பலை சேர்ந்த அருண் விஜய்யின் கும்பலிடம், சுமனுக்கு மாற்று உறுப்புகளை கொண்டு வரும் பணி தரப்படுகிறது.
அதன்படி, அமெரிக்காவில் வசித்து வரும் அனுஷ்காவின் உறுப்புகள் சுமனுக்கு பொருந்தும்படியாக இருப்பதால் அவளை கடத்த திட்டமிடுகின்றனர். இந்த கடத்தல் கும்பலின் திட்டத்தை தெரிந்துகொண்ட போலீஸ் கமிஷனரான அஜித், அனுஷ்காவுக்கு தெரியாமலேயே அவரை காப்பாற்ற திட்டம் போடுகிறார்.
அதன்படி, அஜித்தும் அமெரிக்கா சென்று, அனுஷ்கா பயணம் செய்யும் விமானத்தின் இருக்கைக்கு பக்கத்திலேயே தானும் பயணிக்கும்படி ஏற்பாடு செய்கிறார். விமானத்திலேயே அனுஷ்காவிடம் சகஜமாக பழகும் அஜித்தை அனுஷ்காவுக்கு பிடித்துப் போய்விடுகிறது. அவருடன் நட்பு வைத்துக் கொள்ள நினைக்கிறார்.
மறுநாள் குறிப்பிட்ட இடத்தில் தன்னை சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அவளை பிரிகிறார் அஜித். மறுநாள் அஜித் கூறிச்சென்ற இடத்துக்கு செல்லும் அனுஷ்காவை அருண் விஜய் ஆட்கள் கடத்த முயற்சிக்க, அவர்களிடமிருந்து அனுஷ்காவை காப்பாற்றுகிறார் அஜித்.
அஜித்தைத்தான் கொல்ல வந்திருப்பதாக நினைக்கும் அனுஷ்காவிடம், அவர்கள் உன்னைத்தான் கடத்த வந்தார்கள் என்று அஜித் கூறுகிறார். இதனால் ஆச்சர்யமடைகிறார் அனுஷ்கா.
அதன்பின், அருண் விஜய் கும்பலின் திட்டம் தனக்கு எப்படி தெரிய வந்தது என்பதை அனுஷ்காவிடம் விவரிக்கிறார் அஜித். இறுதியில், அருண் விஜய் கும்பலிடமிருந்து அனுஷ்காவை அஜித் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
         
    படம் செல்வதற்கு முன்னாள்  "படம் நல்லாயிருக்காம் ஆனா காக்க...காக்க ,வேட்டையாடு விளையாடு இரண்டையும் மிக்ஸ் பண்ணி எடுத்திருக்காங்க "என்றார் நண்பர் . உண்மை தான். ஒவ்வெரு இயக்குனருக்கும் ஒரு பாணி.. அதில்  கெளதமும் விதிவிலக்கல்ல. ஒரே பார்மூலாவை மாத்தி மாத்தி போட்டு படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் கெளதம்.சூடு செய்யப்பட்ட பழைய சோறு...

 செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments