வடிவேலுவாக மாறிய வைகோ...

மிக நீண்ட நாட்களுக்கு  பிறகு பரபரப்பாக செய்திகளில் கடந்த 10  நாட்களாக பேசப் படுகிறார் வைகோ. பொட சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது எற்பட்ட பரபரப்பு.
      வைகோ கட்சி அரமித்த போது நடைபயணம் மேற்கொண்டார். (அவர் நடைபயணத்தால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ.அவர் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.)மதுரை பக்கம் வந்த போது அப்படி ஒரு கூட்டம்.நான் உட்பட பலர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தோம். இன்னைக்கு அவரும்,அவர் கட்சியும்????.கருப்பு துண்டை மேலே தூக்கி விட்ட படியே நல்லத்தான் பேசுறார்.இலங்கை பிரச்சனை,முல்லை பெரியாறு ,காவிரி வரை அவரின் பேச்சுக்கு ஈடுஇணையே இல்லை.பிறகு ஏன் அவருக்கு ஓட்டு போடமாட்டேங்குறாங்குன்னு தான் தெரியலை.
            மோடி ... ராஜபக் ஷேயுடன் கூடு கூலாவுவதை பொறுக்க முடியாமல் வைகோ உணர்ச்சி வசப்பட்டார். பாஜகா பார்ட்டிகள் கொந்தளித்தார்கள். அதில் குறிப்பாக எச்.ராஜா பேசிய பஞ்ச் டையலாக் ...

‘பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத்சிங் போன்ற தலைவர்களை பற்றியோ, வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லும் இடங்களில் இருந்து பாதுகாப்பாக திரும்ப முடியாது’ ...
எச் ராஜா மட்டுமல்ல பாஜாக மாநில  தலைவர் தமிழிசை உட்பட பலரும் வைகோ வை நார்நாராக கிழித்தெரிந்தார்கள்.  ஆனாலும் வைகோ , பாஜாக கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை.  பிரதமர் மோடியும்  வைகோவை கண்டு கொள்ளவில்லை. கடையில்        வைகோ ,பாஜாக கூட்டணியில் தான் இன்னமும் இருக்கிறார்   என்கிறார்  - பொன்ராதகிருஷ்ணன்.      இதை பார்க்கும் போது


கார்டூன்..வீரா

ஒருபடத்தில் ரவுடிகளிடம் செமத்தியாக அடிவாங்கிய வடிவேலு

              அடிக்கும் போது ஒருத்தன் சொன்னான்
              எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா
             இவன் ரொம்ப நல்லவன்னு
            ஓருவார்த்தை சொல்லிட்டான்யா....

இப்படித்தான் இருக்கிறது வைகோவின் நிலை...


செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Seeni said…
இன்று வெளியேறி விட்டார்...
I think its a right decision... but he need a man power and money power to reach a good level in TN politics...
Cinemajomblo said…
f__ck the sistem. im from indonesia
  • பிரபஞ்ச ரகசியமும் - நோபல்பரிசும்
    05.10.2011 - 1 Comments
    பிரபஞ்சம் விரிவடைவது தொடர்புடைய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான 2011ம்ஆண்டுக்கான  நோபல் பரிசு…
  • முதல் பிரதமர் நேருவுக்கு காந்தி கொடு்த்த பரிசு என்ன?
    02.10.2013 - 2 Comments
    1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி நாடு விடுதலைப் பெற்ற அந்த பொன்னான பொழு தில் உற்சாக பெருவெள்ளம் தேசமெங்கும்…
  • சிங்கம் 2 கதை + படங்கள்
    09.05.2013 - 2 Comments
    சிங்கம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை  கொடுத்தபடம். இந்தியில் எடுக்கப்பட்டு அங்கும்…
  • மதுரை அருகே   முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
    24.09.2023 - 0 Comments
    மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி  கிராமத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த…
  • காமராஜரும் மோடியும் ஒரே சிந்தனை உடையவர்களாம்-  வெங்கய்யா நாயுடு
    16.07.2015 - 1 Comments
    காமராஜரின் 113 வதுபிறந்த தின விழா விருதுநகரில் கொண்டாடப்பட் டது. ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பினர்,…