9 மே, 2013

சிங்கம் 2 கதை + படங்கள்சிங்கம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை  கொடுத்தபடம். இந்தியில் எடுக்கப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட் கொடுத்த படம். சிங்கம் படத்தின் ''ஓங்கி அடிச்சா ஒன்றரை டன், பாய்ஞ்சு அடிச்சா பத்தரை டன்’ என்ற பஞ்ச்  டயலாக் உடலை முறுக்கி அவர் சொல்லும் விதத்தில் மிக  பிரபலமானது. சிங்கம் படத்தில் ஆள் கடத்தல்  வில்லன் பிரகாஷ்ராஜ் டீமை ஒழித்துவிட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு திரும்புவார் சூர்யா.
அப்போது  அமைச்சராக நடித்த விஜயகுமார் ''தூத்துக்குடிக்கு போ, அங்கே உக்காரு, என்ன ஆகுதுன்னு பாரு, மளிகைக்கடைக்காரனாவே இரு. தூத்துக்குடி எப்ப கன்ட்ரோலுக்கு வருதோ, அப்ப பொறுப்பு ஏத்துக்கோ’என  சூர்யாவிடம் சொல்வார்.ஆங்கிருந்து தான் சிங்கம் 2 படம் துவங்குகிறது.  மேலும் படம் முடியும் போது சிங்கத்தின் வேட்டை தொடரும் என முடிப்பார்கள்.
                    சிங்கத்தில் தூத்துக்குடி, சென்னை என உள்ளூர் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா. இந்த படத்தில் இன்டர்நேசனல் போலீஸ்( இப்போ தமிழ் சினிமா டிரண்ட் இது தான், விஸ்வரூபம் படத்திற்கு பிறகு).சௌத் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா என சிங்கம் 2 பயணிக்கிறது.சிங்கம் பட நாயகி அனுஷ்காவுடன், ஹன்சிகாவையும் சேர்த்து இரண்டு கதாநாயகிகள். இவர்களோடு விவேக்,சந்தானம்,விஜயகுமார்,நாசர், மனோரமா,கே.விஸ்வநாதன்,ராதாரவி,சுமித்ரா என் பிரபலமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

                                           சிலைடு சோ  படங்கள்இயக்குனர் ஹரி...
                 
தமிழ் சினிமாவின் வசூல் பட இயக்குனர். சிங்கம் 2 சூர்யாவை வைத்து ஹரி இயக்கும் நான்காவது படம். நல்ல கருத்தை சொல்லும் படமாக இல்லாவிட்டாலும் கூட பொழுது போக்கு தன்மையில் கவர்ச்சியில்லாத படங்களை இயக்குபவர் ஹரி. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்தபடத்தை படமாக்கியிருக்கிறார். சூர்யாவின் நடிப்பை பற்றி சொல்லும் போது ‘‘நாலு படம் செய்திட்டேன் அவர்கூட. இப்படி இருக்கணும்னு சொன்னால், டைரக்டர் இன்னும் அதைவிட கூட எதிர்பார்க்கிறார்னு அவருக்குத் தெரியும். ராத்திரி வரை வேலை போனாலும், ‘காலையில் ஆறு மணிக்கு வந்துருங்களேன்’னு சொல்லிட்டு போனால், ஐந்தே முக்காலுக்கு மலர்ந்து சிரிச்சுக்கிட்டு, ‘குட்மார்னிங்’னு நிற்பார். இரண்டு பேரும் இணைஞ்சு ஒரு படம் பண்றது... அது பெரிய வியாபாரம். என்னை விட அவரை வச்சு படம் பண்றது இன்னும் பெரிய வியாபாரம். சௌத் ஆப்ரிக்காவில் கடலில் படகில் தனியாகப் போகணும். அப்புறம் ஹெலிகாப்டரில் பறக்கணும். கரையே தெரியாத ஆழத்திற்குப் போய் சொந்தமா படகு ஓட்ட கத்துக்கிட்டு, மின்னல் வேகத்தில் போறதும், உயிரைப் பணயம் வைக்கறதும் சாதாரண வேலையில்லை. இதுவரைக்கும் நம்ம ஹீரோக்களை இது மாதிரி சீனில் நெற்றி வியர்வையை துடைச்சு எறிகிற மாதிரிதான் காட்டியிருக்கோம். நான் நினைச்ச துரைசிங்கத்திற்கும், அவர் அதில் கொடுக்கிற துரைசிங்கத்திற்கும் செம போட்டி....
இந்தபடம் சூர்யாவுக்கு நல்ல நடிகர் என் பெயரைவிட நல்ல வசூல் செய்துகொடுக்கும்

. செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...