நடிகை அஞ்சலி விவகாரமும் பதிவர்களும்....


கடந்த வாரத்தில் ஒரு நாள் நடிகை அஞ்சலி எனது சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், எனது சித்தியும்,இயக்குனர் களஞ்சியமும் சேர்ந்து எனது சொத்தை அபகரித்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.அடுத்த நாள் இயக்குனர் களஞ்சியம் அஞ்சலி மீது வழக்கு தொடர்ந்தார். சித்தி அஞ்சலியை காணவில்லை, கடத்தப்பட்டுள்ளார் என புகார் கொடுக்க.. ஆந்திரா, தமிழக காவல் துறை நடிகையை  தேட நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை ) நான் கடத்தபடவில்லை என்து மனநிலை காரணமாக மறைவிடத்தில் இருந்தேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். என பேட்டி கொடுக்க....இதெல்லாம் தமிழகத்தின் மாலை நேர நாளிதழில்களில் தலைப்பு செய்திகள்,சில காலை நாளிதழில் கூட முக்கியதுவம் கொடுக்கபட்டு வெளிவர துவங்கின.
                   சில ஆண்டுகளுக்கு முன் கடந்த ஆண்டாக கூடஇருக்கலாம் நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகளுக்குமான பிரச்சனை, முதல் கணவர், இரண்டாவது கணவர் விவகாரம், என 10 நாட்கள் தினசரிகள் எழுதி தங்களது வருமானத்தை பெருக்கி கொண்டன.

                            நாளிதழ்கள், சில வார இதழ்கள் அவற்றின் வியாபாரத்திற்காக  அப்படி செய்கின்றன என்றால்.. நாமுமா(பதிவர்கள்)? நான் பார்த்த சில பதிவின் சில தலைப்புகள்...

            1. அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... செல்போனில் கதறிய அஞ்சலி

            2. இரு தினங்களில் வெளி உலகத்துக்கு வருகிறார் அஞ்சலி...!!!

            3. சென்னையில் அஞ்சலி...? விலகும் மர்மங்கள்...!

            4. நடிகை அஞ்சலி சென்னையில் பதுங்கலா?

            5.நடிகை அஞ்சலியின் நிர்வாணப்படத்தை வெளியிட்டது யார்?.....
         
           
இப்படி இன்னும் இன்னும் நிறைய அக்கரையோடு எழுதி தள்ளுகிறார்கள். இதெல்லாம் தேவைதானா? நடிகை அஞ்சலி சிறந்த நடிகையோ, சமூக அக்கறை உள்ளவரோ அல்ல. சம்பாதிக்கும் நோக்கத்தோடு  சினிமா உலகத்திற்கு வந்த நடிகை அவ்வளவு தான்.அவருக்காக இத்தனை பதிவுகளா? சினிமா பதிவே வேண்டாம் என்று சொல்லவில்லை விஸ்வரூபம் பட விவகாரத்தில் இரு தரப்பு நியாயங்கள் குறித்து பதிவுகள் குவிந்தன. அது சரியான செயல். ஆனால் ஒரு நடிகரின்,நடிகையின் தனிப்பட்ட விவகாரத்திற்கு இந்தனை முக்கியதுவம் கொடுத்து பதிவுகள் தேவைதானா? நல்ல சினிமாவை அறிமுகப்படுத்துங்கள்,நல்ல  சினிமா விமர்சனம் எழுதுங்கள்...

 இந்தியாவில், உலகத்தில் வேறு பிரச்சனைகளே இ¢ல்லையா?

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

//நடிகை அஞ்சலி சிறந்த நடிகையோ, சமூக அக்கறை உள்ளவரோ அல்ல//

அது எப்படிங்கண்ணா, அஞ்சலி சிறந்த நடிகை இல்லை என்று கண்டுபிடிச்சிங்கோ ???
ஹா.. ஹா... விட்டுவிடுங்கள்... இதெல்லாம் அவரவர் ...?
அவங்களும் பேமஸ் ஆகணும்ல... ( சில பதிவர்களை சொன்னேன் )
Anonymous said…
appadi ippadinnu anjali thayavula neengalum oru pathivu thethitiinga
//இந்தியாவில், உலகத்தில் வேறு பிரச்சனைகளே இ¢ல்லையா?//

அவைகளைப்பற்றி எழுதினால் வேறு விதமாகத் தாக்குகிறார்களே?