கண்ணாடிபோல் உங்கள் வாழ்க்கை...


குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். "என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார். புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்... "ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். 


அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும்" என்றார் குரு.

Comments

  • கனவாற்றின் கரை
    16.09.2011 - 0 Comments
    வணக்கம் வாசகர்களே, மனதை தொடுகிற, சோர்வை அகற்றுகின்ற, உத்வேகம் தருகிற, மகிழ்ச்சியை தருகின்ற கருத்துக்களை…
  • இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி - 2
    20.04.2012 - 1 Comments
    அரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும்…
  • எனது நடிப்பில் வரும் ஒவ்வொரு படத்தின் வசூலையும் அடுத்த படம் தாண்ட வேண்டும் - சூர்யா
    08.11.2011 - 0 Comments
    தீபாவளிக்கு வெளியான படங்களில் 75 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருகிறது 7-ஆம் அறிவு. ஆனால் விஜயின்…
  • டின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை
    23.11.2011 - 63 Comments
    சினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர்…
  • டூவிலர் பகுமானத்தை விட்டு சைக்கிள்  ஓட்டலாமே....
    09.01.2013 - 0 Comments
    இன்னும் நீங்க கார் வாங்கலயா?  என்ற கேள்விகள் வரத்தொடங்கி விட்டன. டூவிலர்,கார் வைத்திருப்பது தேவை…