25 பிப்., 2013

சசிக்குமாரின் ''குட்டிப்புலி'' + படங்கள்சுந்தரபாண்டியன் சூப்பர் வெற்றிக்கு பிறகு சசிக்குமார் நடிக்கும் படம் குட்டிப்புலி. சுந்தரபாண்டியன் மதுரை - உசிலம்பட்டி சுற்றுப்பகுதியில் எடுக்கப்பட்டது, குட்டிப்புலி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வாழ்ந்த நிஜமான கேரக்டர்.
அதே பகுதியில் ஷூட்டிங் நடக்கிறதால வேடிக்கை பார்கக வரும் கூட்டத்திலிருந்து சிலர்   சசிக்குமாருக்கு  சார் கைய நல்ல ஏத்தி விடுங்க, மீசை திருக்கிவிடுங்க, அப்படி நில்லுங்,இப்படி நில்லுங்க என நடிக்க டிப்ஸ் கொடுக்கிறார்களாம்?.... இந்த படத்திலும் லட்சுமிமேனன் தான் கதாநாயகி. சசிக்குமாருக்கு ஒரு சென்டிமென்ட், இதுவரை அவருடன் நடித்த எல்லா கதாநாயகிகளுடனும் இரண்டுமுறை நடித்திருககிறார். சுப்பிரமணியபுரம்,போராளியில் சுவாதியுடன், ஈசன்,நடோடிகள் படங்களில் அபிநயா,நடோடிகள்,மாஸ்டர்ஸ்(மலையாளம்) அனன்யா என அவரின் மூன்று கதாநாயகிகளுடனும் இரண்டு,இரண்டு முறை நடித்திருக்கிறார்.
         
             
சுந்தரபாண்டியனில் தனது உதவியாளர் பிபபாகரனை இயக்குனராக ஆக்கியதை போல குட்டிப்புலி படத்திலும் முத்தையா என்ற தனது உதவியாளரை இயக்குனரா நியமித்திருக்கிறார்.இந்த படத்தில் குட்டிப்புலியின் அம்மாவாக தெய்வனை கேரக்டரில் சரண்யா நடித்திருக்கிறார். அவருக்கே உரித்தான கிராமத்து நடிப்பு இந்த படத்திலும் பிரமாதமாக செய்திருக்கிறார்.குட்டிப்புலி கிராமத்திற்கே உரிய திருவிழா, ஊர்வம்பு,சண்டை ,சச்சரவுகளுடன் யதார்த்தமாக வருகிறது.

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...