நடிகர் கமல்ஹாசனின் facebook கவிதை


கமலஹசன் நடிகர் என்பதை தாண்டி பாடகர், இயக்குனர், கதாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பண்முக வடிவம் கொண்டவர். அவரின் கவிதைகள் தொகுப்பாக கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவரது பேஸ்புக்கிலிருந்து ''வாலில் தீ'' என்ற கவிதை வாசிக்க கிடைத்தது, அதை தொகுத்து கொடுத்துள்ளேன்.
சூற்றுச்சழல், அரசியல்,வால்மார்ட்,அறிவியல் என் பரமக்குடியில் தனது கனவிலிருந்து துவங்கும் நிண்ட கவிதை  படிக்கும்
ஒவ்வொரு முறையும் பல கருத்துக்களை தருகிறது.
சமுக நடப்புகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல், அதை கவிதையாக படைத்திருக்கிறார். அவரது கவிதை பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. படித்துபாருங்கள்...


வாலில் தீ

பத்மஸ்ரீகமல்ஹாசன்

ரு கடும் வேனல்கால மாலைப்பொழுதில் 
நதிக்கரையில் முன்பு யாரோ தோண்டி வைத்திருந்த
ஊற்றுக்குழியை நோக்கியவாறு நான் நிற்கிறேன்
குனிந்து மண்டியிட்டு அந்தக் குழியிலிருந்து
தாகத்தோடு ஜந்து கை மண்ணை நான் அள்ளி 
எடுத்தேன்...
முன்றாவது தடவையிலேயே எனது கை சிறிதாக 
நனைந்தது
ஆறு... ஏழு... எட்டு... தண்ணீர் எட்டிபார்க்கிறது
தாகத்தால் வறண்ட எனது முகத்தை பிரதிபலத்துக்
கொண்டு 
எனது தாகத்தைத் தணிக்கிறது
மூக்கின் நுனியில் ஒட்டிய நனைந்த மணலையும்
எனது சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் 
தட்டிவிட்டு நான் எழுந்து நிற்கிறேன்.
கனவு கலைந்தது. எல்லாம் கனவு...

ரு பரமக்குடிக்காரனாகிய எனது அறிவுக்கு 
எட்டியவரை 
இது போன்றவொரு சம்பவம் இப்பொழுது நடைபெற
எந்தவித சாத்தியமுமில்லை
பரமக்குடியை கடந்து செல்லும் ஆற்றின் கரைகளுக்கு
மூடுவிழா நடத்தப்பட்டு பல மாமாங்கங்கள்
ஆகிவிட்டது.
அருகமையில் இருந்த வீடுகள் பலவும் 
திருடர்களைப் போல தங்களது இடம்விட்டு நகர்ந்து
நதிக்கரை ஓரத்தில் புதிய வடிவில்
தங்களது கழிவுகளை ஆற்றில்  கலக்கத்துவங்கியே
ஒன்றிரண்டு மாமாங்கங்கள் ஆகிவிட்டன.

ன்றிகளை போலவே நாமும்
அனைத்துண்ணிகள் ஆகிப்போனோம்...
கழிவுகளையும் நச்சுப் பொருட்களையும்
நமது உணவாக மாற்றிவிட்டு
இயற்கை நமக்களித்த உணவுகளை
நாடு கடத்திக் கொண்டிருக்கிறோம் நாம் இப்போது
இங்கு கூறியதற்கும் வாலமார்ட் இந்தியாவில்
பிரவேசிப்பதற்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்டால்
அது குறித்து விரிவாக விவாதிக்க
நிறைய இந்தியர்கள் காத்திருக்கிறார்கள்.

மிழகத்தின் வாசல்கதவை தற்காலிகமாக
முதல்வர் அடைத்து வைத்திருக்கிறார்.
அதற்காக என்னைப் போல் உள்ளவர்களின்
தற்காலிக நன்றி முதல்வருக்கு உண்டு.
முதல்வர் தனது நிலையில் உறுதியாக இருந்தால்
நாங்கள் என்றென்றும் அவருக்குக்
கடமைப்பட்டவர்களாக இருப்போம்
மேலும் வரும் தலைமுறையும் முதல்வருக்கு 
நன்றி கடமைப்பட்டிருக்கும்.
இந்த வால்மார்ட் என்ன செய்யும் என்று கருதி
நீங்கள் இவ்வளவு அச்சப்படுகிறீர்கள்
என்று கேட்டால்
வால்மார்ட் என்ற அமெரிக்க பன்னாட்டுக் குத்தகை
பாவம் கிராமத்தானையும்
தங்களது உபயோகிப்பாளனாக மாற்றிவிடும்
அவர்களுக்கு  தெரியாமலேயே அவர்களது
கழுத்தில் கைவைத்து தங்களது
பணப்பெட்டியில் காசு போடச் செய்யும்
பன நொங்கு குடிக்கும் என்னைப்போன்ற
பழைய ஆட்களுக்கு பாட்டிலில்
பனநொங்கை விற்கும் 
இந்த வால்மார்ட்...

ன்றும் சொல்ல முடியாது,
மீனிற்கு வாலும் பாம்பிற்குத் தலையும்
காட்டி மயக்கும் தந்திரத்தை கற்ற
இந்தகைய அமெரிக்க வியாபாரக் குத்தகைகள்
கிராமோத்யோக் பவனின் காந்தியக்
கொள்கைகளையும்
அனுமதியில்லாமல் அபகரிக்கும்.

நெல்,கப்பைக் கிழங்கு என்னவென்று தெரியாத
இந்தியக் குழந்தைகள்
பீட்ஸாதான் நமது பாரம்பரிய உணவு 
என்று நினைத்துக்கொள்வார்கள்.
நினைத்துக் கொள்ளட்டும்...
இதில் என்ன தவறு என்று 
சிலர் கேட்கக்கூடும்
சிந்தித்துப்பார்த்தால் ஒரு நஷ்டமும் இல்லை
கம்யூனிசமும் ஜனநாயகமும் இறந்து போனாலும்
நெல்லும் கப்பைக் கிழங்கும் உயிருடன் இருக்கும்

ரோம் சாம்ராஜியம் உண்டாவதற்கு
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,
மகாவீரர்,தீர்ததங்கரர் ஆகியோர் முந்தைய
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இந்த தேசத்தை  பசுமைபடரச் செய்து
மண்ணும் மரங்களும் இறக்காது
மனிதர்களெல்லாம் இறந்து
மண்ணுக்குள் புதைந்து பல
நூறாண்டுகளில் மரங்கள்
உயிர்தெழுந்து காடாகும்.
நதிக்கரைகளில் இருக்கும் 
இன்றைய வீடுகளெல்லாம்
மண்ணொடு புதைந்து புதிய காடுவளர்த்து
நதிக்கரையாகும்
இவையெல்லாம் முன்பு மனிதர்களும்
வீடுகளும் நிறைந்திருந்த இடங்கள் தான் என்று
நினைத்துப் பார்க்கக்கூட ஒரு ஜீவனும் இருக்காது
நாம் அழிவோம்,ஆனால் உலகம் அழியாது
நாம் உலகின் அச்சாணி அல்ல
சுழலும் அந்த சக்கரத்தின்
சரித்திர புத்தகத்தில் வரும்
ஒரு சிறு வாக்கியத்தின் இறுதியில் வரும் ஒரு சிறுபுள்ளி
மட்டுமே.

தொகுப்பு- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

அருமை...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..,
Mathivanan said…
Thanks for sharing these excellent lines by Kamal
ஆத்மா said…
பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போயிருக்கிறார்
அழகான வார்த்தைப் பிரயோகங்கள்
கெரகம் மிஸ்டர்..

இதைக் கவிதை என்று அவர் சொன்னாரா?
நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை..

எஃப் டி ஐ முடிவு வந்து மறுநாளே இந்த அவரது உரை வெளிவந்து விட்டது !!!!
பன நொங்கு குடிக்கும் என்னைப்போன்ற
பழைய ஆட்களுக்கு பாட்டிலில்
பனநொங்கை விற்கும்
இந்த வால்மார்ட்...

-கமல்ஹாசன்.

அந்நியமுதலீடைத் தவிர்க்க நம் மத்தியஅரசு முடிவு செய்ய வேண்டும்.
  • இனி ரோபோக்களும்குழந்தைகளை பெற்றெடுக்கும் ...
    06.12.2021 - 0 Comments
    எந்திரன் படம் பார்த்திருப்பீர்கள் அதில் ஒரு ரோபோ மற்றொரு ரோபோவை உருவாக்குவதை பார்த்திருப்பீர்கள்  அது…
  •  5 வருடத்திற்கு இடுப்புத்துணியுடன்  அலையப்போகிறீர்களா?
    07.04.2014 - 5 Comments
    அன்று காலை வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அந்த மனிதரை, “மாமா வாங்க மாமா” என வரவேற்றான் ஒரு இளைஞன்.…
  •   அமேசான் கிண்டிலில் எனது நூல்கள்
    16.10.2021 - 0 Comments
       அமேசான் கிண்டிலில் எனது நூல்கள் வாங்கவிருமாண்டியின் மரபணுநூலை வாங்க  இங்கே  கிளிக்…
  • திருப்பதி கோவிலின் மறுபக்கம்
    21.11.2014 - 4 Comments
    திருப்பதிக்கு நீங்கள் சென்றிருந்தால், முடிவில்லாத நீண்ட வரிசையில் வந்து செல்லும் யாத்திரிகர்களை அக்…
  • மதுரையின் வயது என்ன?
    16.07.2015 - 2 Comments
    உலகில் வயதான பல நகரங்களில் இன்றும் உயிரோட்டமாக உள்ள ஒரு பழம்பெரும் நகரம் மதுரை. நகரமயமாக்கலால் மதுரை…