10 ஜூலை, 2012

முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு தர மாட்டோம்


 

இந்தியாவில் ஓரு குறிபிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு வீடுவாடகைக்கு தரமுடியாது என்கின்ற அளவிற்கு மத வெறி அதிகரித்துள்ளது. இது மோசமான நிலையை இந்தியாவில் ஏற்படுத்தும்.
தலைநகர் தில்லியில் இடநெருக் கடியால் வீடு கிடைப்பது என்பது மிக கடுமையான பிரச்சனையாக உள்ளது. அதுவும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபருக்கு, தில்லியில் வீடு வாடகைக்கு தருவ தற்கு யாரும் தயாராகவே இல்லை. முஸ்லிம்களுக்கு வாடகை வீடு இல்லை என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. முஸ்லிம் களை பிரித்துப் பார்க்கும் பாகு பாடு, தலைநகரில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனை வீட்டு உரிமையாளர்களும், சொத்து டீலர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தில்லியில் அதிகம் படித்தவர் கள் மற்றும் வசதியானவர்கள் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் குன்ஜ், ஜங்க்புரா, ரோகிணி பகுதிகளில் முஸ்லிம்கள் வாட கைக்கு வீடு கேட்டால், நிச்சயம் கிடைக்காத நிலை உள்ளது.

ஆனால் அதற்கு முரண்பா டாக, முகர்ஜிநகர், கரோல்பாக், ஜனக்புல், அசோக்விகார் பகுதி களில் இரண்டு நிலைகளிலான பதில்கள், வீடு கேட்கும் முஸ்லிம் களுக்கு ஏற்படுகின்றன. சில இடங்களில், வாடகைக்கு வீடு இல்லை என்றும், சிலருக்கு வாட கைக்கு விட தயாராக இருப்ப தாகவும் வீட்டு உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

வீட்டு உரிமையாளர் சார்பில் ஆஜராகும் ஏஜெண்ட் ஒருவர் கூறுகையில், நிலச்சுவான்தாரர் கள் இந்தியர்களைத்தான் விரும்பு கிறார்கள். முஸ்லிம்களை அல்ல என்று வெளிப்படையாக கூறி னார்.

நியூ பிரண்ட்ஸ் காலனியில் வீட்டுமனைகள், நீண்டகாலம் காலியாக இருந்தாலும், அதனை முஸ்லிமுக்கு வாடகைக்கு தர மாட்டோம் என உரிமையாளர் கள் கூறுகிறார்கள் என தில்லியில் உள்ள ஒரு முஸ்லிம் வருத்தத் துடன் தெரிவித்தார்.

ரோகிணி செக்டார் - 8 பிரிவில், செய்தியாளர்கள் முஸ் லிம் தம்பதியை போல, வீடு கேட்க சென்ற போது, பாலாஜி பிராப்பர்ட்டி நிறுவனத்தின் தீபக் சர்மா கூறுகையில், தங்களது வீட்டுமனைகள் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு விடப்படுவது இல் லை. இந்தப் பகுதியில் முஸ்லிம் களுக்கு வீடு வாடகைக்கு கிடைக் காது என் றார்.

மேற்குதில்லியின் ஜனக்புரி யில் தனிப் பெண்ணுக்கு வீடு கிடைப்பது என்பது மிக பரிதா பமான ஒன்றாக உள்ளது. அந்தப் பகுதியில் பெண் செய்தியாளர் கணவர் இல்லாத பெண்ணாக, அடையாளம் காட்டி வீடு வாட கைக்கு கேட்டபோது, வீடு வாட கைக்கு தர பலரும் தயங்கினர். ஒரு டீலர், உற்சாகம் உள்ள குர லில், நாளை வாருங்கள், வீடு இருக்கிறதா எனப் பார்ப்போம் என்றார். இந்த நிலையில், தான் ஒரு முஸ்லிம் என்று அந்த செய்தி யாளர் கூற, அந்த டீலர், உங்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பது சிரமம். வீட்டு உரிமையாளரிடம் பேசிய பின்னர் தொடர்பு கொள்கிறேன் என நழுவினார்.

வீடு வாடகைக்கு விடுவதில் சொத்து டீலர்கள், மதபாகுபாடு வலைத்தளத்தில் செயல்படும் நிலை காணப்படுகிறது. முஸ்லிம் களுக்கு வீடு வாடகைக்கு கிடைப் பதில் பெரும் சிரமம் இருப்பது போல சில நேரங்களில் தலித்துக் களுக்கு வீடு வாடகைக்கு கிடைப் பதில் சிரமம் உள்ளது என ஒரு டீலர் கூறினார்
- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...