விஸ்வரூபம் சூட்டிங்ஸ்பாட் படங்கள் - கமல் பேட்டி


விஸ்வரூபம் படம் தமிழ், இந்தியில் நேரடி படமாக ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படத்தில் நடிக்க நானும் சோனாக்சி சின்காவும் தேதி ஒதுக்கி இருந்தோம். ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி துவக்கப்படாமல் எங்கள் கால்ஷீட் வீணானது. எனக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. அதனால்தான் பிறந்தநாளை கூட கொண்டாடுவது இல்லை.
எனவேதான் நானே படத்தை இயக்குகிறேன்.

இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. தசாவதாரம், ஹேராம் போன்ற எனது படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டன.
ஆனால் இந்தி வசன உச்சரிப்புகள் அவற்றில் சரியாக பொருந்தவில்லை. எனவேதான் ‘விஸ்வரூபம்’ படத்தை இரு மொழிகளிலும் நேரடியாக எடுக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது. இன்னும் நடிப்பில் சலிப்பு வரவில்லையா? என்று கேட்கிறார்கள்.

பணம், புகழுக்காக நடிக்க வந்து இருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது. எனவேதான் தொடர்ந்து சினிமாவில் இருக்கிறேன். என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.இவ்வாறு கமல் கூறினார்
-.தொகுப்பு சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

விஸ்வரூபம் எப்பொழுது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். கமல்ஹாசன் இயக்கத்தில் வந்த படங்கள் எல்லாமே முக்கியமானவை. பகிர்விற்கு நன்றி.
  • தீபாவளி பண்டிகையை தமிழர்கள் கொண்டாடலாமா?
    21.10.2011 - 1 Comments
     தீபாவளிக்கு என்ற வார்த்தை தீபாவளி தினதிற்கு முன்று மாதங்களுக்கு முன் புழங்கத் தொடங்கி,தீபாவளி பட்ஜெட்…
  • 28 நாட்கள் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள் ....
    15.01.2015 - 2 Comments
    தமிழர்கள் தனித்துவமிக்க ஒரு இனம் என்பதை உணர்த்துகிற விழா பொங்கல்.இயற்கையுடன் இணைந்து தமிழர்கள் கொண்டாடும்…
  • பெட்ரோலின் சுவை... கசப்பு!
    17.09.2011 - 2 Comments
    பெட்ரோலின் சுவை எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. ஆனால், இரு சக்கர வாகனங்களில் நித்தமும் வாழ்க்கையை…
  • மாற்றான் படம் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த பேட்டி
    01.03.2012 - 0 Comments
    ‘மாற்றான்’ படம் வித்தியாசமான கதையமைப்புடன் உருவாகிறது. ’7ஆம் அறிவு’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும்…
  •  புத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....
    09.07.2013 - 2 Comments
    அமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள்.…