விஸ்வரூபம் சூட்டிங்ஸ்பாட் படங்கள் - கமல் பேட்டி


விஸ்வரூபம் படம் தமிழ், இந்தியில் நேரடி படமாக ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படத்தில் நடிக்க நானும் சோனாக்சி சின்காவும் தேதி ஒதுக்கி இருந்தோம். ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி துவக்கப்படாமல் எங்கள் கால்ஷீட் வீணானது. எனக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. அதனால்தான் பிறந்தநாளை கூட கொண்டாடுவது இல்லை.
எனவேதான் நானே படத்தை இயக்குகிறேன்.

இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. தசாவதாரம், ஹேராம் போன்ற எனது படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டன.
ஆனால் இந்தி வசன உச்சரிப்புகள் அவற்றில் சரியாக பொருந்தவில்லை. எனவேதான் ‘விஸ்வரூபம்’ படத்தை இரு மொழிகளிலும் நேரடியாக எடுக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது. இன்னும் நடிப்பில் சலிப்பு வரவில்லையா? என்று கேட்கிறார்கள்.

பணம், புகழுக்காக நடிக்க வந்து இருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது. எனவேதான் தொடர்ந்து சினிமாவில் இருக்கிறேன். என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.இவ்வாறு கமல் கூறினார்
-.தொகுப்பு சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

விஸ்வரூபம் எப்பொழுது வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். கமல்ஹாசன் இயக்கத்தில் வந்த படங்கள் எல்லாமே முக்கியமானவை. பகிர்விற்கு நன்றி.
  • விஸ்வரூபம் அமெரிக்க படப்பிடிப்பு வீடியோ காட்சிகள்
    03.04.2012 - 1 Comments
    தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் இரண்டு,கமல்ஹாசனின் விஸ்வரூபம், மற்றோன்று…
  • கூடங்குளம் அனு(ணு)மதிப்போம்
    13.10.2011 - 4 Comments
    அணு ஓர் பார்வை.... அணுவை குறிக்கும் "ஆட்டம்" என்ற ஆங்கிலச்சொல் பிரிக்கமுடியாது என்ற கிரேக்க மொழி…
  •  உலகின் விலை உயர்ந்த  பழம் - ஒரு கிலோ 20 லட்சம் ரூபாய்
    09.11.2021 - 0 Comments
    உங்களிடம் 20 லட்ச ரூபாய் இருந்தால் நீங்கள் என்ன வாங்குவீர்கள்? தங்கம்? வைரம் அல்லது நிலத்தில் முதலீடு?…
  •  சல்மான்கானுக்கு  திரையுலகமே கண்ணீர் சிந்துகிறது; இவர்களுக்கு...?
    10.05.2015 - 2 Comments
    சல்மான் கார் ஏறியதால் காலை இழந்தவர்தான் அப்துல்லா ரவுப் ஷேக். இவர் ஒரு பேக்கரி தொழிலாளி. அவர் பணியா…
  • கரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து  தகவல்களை மீட்பது எப்படி.?
    23.03.2017 - 2 Comments
    நாம் அனைவருமே இண்டர்னெல் மெமரி எனப்படும் நமது கருவிகளின் உள்ளடக்க சேமிப்புத் திறனை மட்டுமே…