மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடும் சோவா வைரஸ்


 வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து சேவா என்ற வைரஸ்  மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை.

  இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.   செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'சோவா' என்ற வைரஸ் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது. அது, யூசர்நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை திருடக்கூடியது. முதலில், அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை அந்த வைரஸ் குறிவைத்தது. கடந்த ஜூலை மாதம், இந்தியா உள்பட பல நாடுகளை தனது இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது. 

அந்த வைரஸ் மொபைல் ஆப் மூலமாக  நுழைந்து  மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது, யூசர்நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருடி விடும். இது, வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடு போவதற்கு வழி வகுக்கும்.  எனவே, வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். முறையான 'ஆப் ஸ்டோர்' மூலமாக செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  நம்பகத்தன்மையற்ற வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாது. மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் சந்தேகத்துக்குரிய 'லிங்க்'குகளை திறக்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Comments

  • படுக்கையில் பாம்புகளுடன் மசாஜ் - படங்கள்
    21.02.2012 - 0 Comments
    ஆயில் மசாஜ் தெரியும், அதென்ன பாம்பு மசாஜ்?. உடல் வலிகளை நீக்கி புத்துணர்ச்சி கிடைக்கும் ஒருவித பிஸியோதொரப்பி…
  •  நீங்கள் மன அழுத்தம் உள்ளவரா?இல்லையா?
    09.04.2017 - 1 Comments
    உலகில் 30 கோடி பேருக்கு மன அழுத்த இருக்கிறது.அதில் நீங்களும் ஒருவரா? எப்படி கண்டுபிடிப்பது. ஒவ்வொரு…
  • அம்மா படத்தை அப்புறம் ஒட்டலாம் -  கிழிந்து கிடக்கும் வாழ்க்கையை ஒட்டுங்கள்!
    07.12.2015 - 0 Comments
      சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால்…
  • நித்யானந்தா vs கவுண்டமணி,வடிவேலு  காமடி பேட்டி
    26.03.2012 - 1 Comments
    வயிற்று வலி இருப்பவர்கள் பார்க்க வேண் டாம்.நித்யானந்தாவின் பேட் டியுடன்,கவுண்டமணி, வடிவேலுவின் குரல்களும்…
  • கார்த்தி நடிக்கும் கொம்பன் சூட்டிங் ஸ்பாட்..
    24.06.2014 - 1 Comments
    கார்த்தி ... நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் சமீபத்தில் வந்த  ஆல் இன் ஆல் அழகு ராஜா…