உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

 


நம் உடலில்ல வைரஸ் புகுந்துவிட்டால் நம்மை பாடாதபாடு படுத்திவிடும் அதே போல த்தான்  உங்கள் செல்போனில் வைரஸ் புகுந்து விட்டால் செல்போனும் நம்மைபோலவே பாடாதபாடுபடும்.

உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 

அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும். 

அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம். 

உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். 

உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும்.

 புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள். 

விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் யூஸ் செய்யும்.

 பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி.

Comments

  • 2011 கடந்து வந்த பாதையும்... - கடக்க வேண்டிய துரமும் 2012,2013....
    30.12.2011 - 1 Comments
    புத்தாண்டை வரவேற்க எல்லோரும் தயாராக இருப்பீர்கள். ''தண்ணீ'' (அல்கஹால்) அடித்து ஆட்டம் பாட்டமாக வரவேற்பதுதான்…
  • தலைவா பட தடைக்கு 3 காரணங்கள் ....
    16.08.2013 - 3 Comments
    தலைவா படம் ஒரு வாரகாலமாக தடை செய் யப்பட்டுள்ளது. படம் தடை செய்ய ப்பட பல காரணங் கள் சொல்லப் படுகின்றன.…
  • கூகுள் மின்ன்ஞ்சலில் புதிய மாற்றம்
    16.05.2018 - 0 Comments
    தேடல் தளமாகத் தொடங்கப்பட்ட கூகுள் மின்னஞ்சல் சேவை, ஆண்ட்ராய்ட் இயங்குதளம், யு டியூப், கூகுள்டாக்ஸ்,…
  • மீண்டும் தேர்தல் திருவிழா
    03.10.2011 - 0 Comments
    சட்டமன்ற தேர்தலில் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை அழிவதற்கு முன்னால் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் திருவிழா…
  • ஜி-மெயிலில் தேவையற்ற ஐ.டி.க்களை பிளாக் செய்ய புது வசதி
    25.09.2015 - 0 Comments
    தேவையில்லாமல், மலை போல வந்து குவியும் மெயில்களில் இருந்து விடுதலை பெறும் வகையில், ஜி-மெயில் ‘பிளாக்’…