80,000 கோடியில் வானத்தில் ஒரு டெலஸ்கோப்

               


கலிலியோகலிலி முதன்முதலில் மிகச்சிறிய டெலஸ்கோப்பை கண்டுபிடித்தார்.வியாழன் கோளுக்கு 4 க்கும் மேற்பட்ட நிலாக்கள் உண்டு என்பதை கண்டுபிடித்ததும் அவரே. அதன் பிறகு மிகபிரமாண்டமான டெலஸ்கோப்களை மலை பிரதேசங்களி நிறுவி  வானத்தை ஆய்வு செய்தனர். 

மழை,மேகக்கூட்டம் ,தூசுகளால் மிகதுல்லியமாக புகைப்படங்களோ,தகவல்களோ கிடைப்பதில்லை .இதனை தவிர்க்க அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளியிலேயே டெலஸ்கோப்களை நிறுவி யது. 

இதன் மூலம் நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் அதிசயங்கள் தெரியத்துவங்கின.உயிரனங்கள் வாழக்கூடிய ,மனிதர்கள் வாழ தகுயான பல கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுவரை நாசா ஹப்பில்,கெப்ளர்  டெலஸ்கோப்புகளை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது.

2009-ல் விண்ணில் செலுத்தப்பட்ட கெப்லர் தொலைநோக்கி 2018-ம் ஆண்டு தன் பணியை நிறைவு செய்தது. கெப்லர் தொலைநோக்கி அனுப்பிய தகவல்களைக் கொண்டு   17 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

அவற்றுள் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான இடத்தில் ஒரு கோளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 கெப்ளர் தொலைநோக்கியை போலவே ஹப்பில் என்ற தொலைநோக்கியும் அனுப்பி வைக்கப்ட்டது.

வானியல் ஆராய்ச்சியில் ஹப்பிள் தொலைநோக்கியின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1990-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட இது கடந்த 28 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

 அன்றிலிருந்து பிரபஞ்சம் தொடர்பான பல முக்கிய புகைப்படங்களை ஹப்பிள் கொடுத்திருக்கிறது. இந்நிலையில்  ஹப்பிள் தொலைநோக்கி 'சேஃப் மோட்' நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.  தொலைநோக்கியில் உள்ள ஜைரோஸ்கோப் (gyroscope) எனும் கருவி பழுதடைந்துள்ளதாக நாசா தெரிவித்திருக்கிறது.

               தற்போது கெப்ளர்,ஹப்பில் தொலைநோக்கிகளை விட பலமடங்கு சக்தி வாய்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை வானில்  நிறுத்தி நாசா ஆய்வு செய்ய உள்ளது. இந்த தொலைநோக்கி 2021 அக்டோபர்,நவம்பரில் விண்ணில் அனுப்படலாம் என்கிறது நாசா. 

கெப்ளர்,ஹப்பில் போல இது பூமியை சுற்றிவராது இதனை சூரியனை சுற்றிவரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.



              இந்த தொலை நோக்கிய உருவாக்க ஆகும் செலவு 1000 மில்லியன் டால்ர் என்கிறார்கள், நமது இந்திய மதிப்பீட்டில் 80000கோடி என கணக்கிடலாம்.

இந்த தொலைநோக்கி மூலம் முன்னெப்போதும் இல்லாத வகை யில் மிக தூரத்திலுள்ள சிறிய கிரகங்களைக் கூட  மிக அருகே பார்க்க முடியும். மேலும்,  நமது சூரியன் அங்கம் வகிக்கும்பால்வெளி புதிர்க ளுக்கும் விடை கிடைக்கலாம் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியில், 18 குவி ஆடிகள் உட்பட தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்படவுள்ளன. 

புவியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ., தொலைவில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிறுத்தப்படும்.இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் நம்மைசுற்றியுள்ள பிரபஞ்சத்தின் பல புதிய தகவகள்,ரகசியங்கள் வெளிவரலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்

Comments