கொரோனா என்ற பெயர் கொண்ட சொகுசு பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் தயக்கம்!!


உலகமெங்கிலும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கொரோனா சொகுசு பஸ்களில் பயணம் மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சீன தேசத்தில் வுஹான் பிரதேசத்தில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர்.மேலும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.இதனால் எளிதில் பரவிவிடும் தன்மை கொண்ட கொரோனா வைரஸ் குறித்த அச்சம் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இதையடுத்து கொரோனா வைரஸ் பரவிடாமல் தடுத்திட இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.அதே சமயம் பல்வேறு உலக நாடுகளிலிருந்து அத்தியாவசிய மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சீன தேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அச்சப்படும் நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கொரோனா என்ற பெயரில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் பொதுமக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள கொண்டாபூர் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த கொரோனா வகை சொகுசு பஸ்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பொதுமக்களின் பயணத்திற்கு பெரிதும் உதவி வருகிறது.விலை உயர்ந்த அதிநவீன வால்வோ மற்றும் பென்ஸ் ரக பஸ்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் சர்வதேச கட்டமைப்பு கொண்ட கொரோனா வகை பஸ்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களால் இன்று வரை அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சீன தேசத்தில் பரவி பல்லாயிரம் பேரை பலிவாங்கியதுடன் லட்சக் கணக்கானோரை பீடித்திருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் உலக மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில் கொரோனா என்ற பெயரில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உலா வந்து கொண்டிருக்கும் கொரோனா சொகுசு பஸ்களில் ஒருவித அச்சத்துடனே பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.மேலும் கொரோனா பஸ்சில் பயணம் செய்தால் கொரோனா வைரஸ் பற்றிக் கொள்ளும் என்று சமூக வலைத் தளங்களில் விஷமிகள் சிலர் கருத்துக்களை பதிவிட்டதால் பொதுமக்களில் பெரும்பாலானோர் கொரோனா பஸ்களில் பயணிப்பதை பெருமளவு தவிர்த்து வருகின்றனர்.குறிப்பாக பெங்களுரில் இயக்கப்படும் கொரேனா பஸ்கள் அனைத்தும் அச்சத்தின் காரணமாக ஆட்களின்றி பயணம் மேற்கொண்டு வருகிறது.
கொரேனா வைரஸ் காரணமாக கொரோனா பெயர் கொண்ட சொகுசு பஸ்களில் பயணம் மேற்கொள்வதை பொதுமக்கள் தவிர்த்து வருவதால் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நீங்கிடும் வரையில் தங்களிடம் உள்ள கொரோனா பஸ்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இதுபற்றிய தகவல்கள் முற்றிலும் தவறானது கொரோனா வைரஸ்க்கும் கொரோனா பஸ்சுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனினும் இதனை பற்றி கவலைப்படாத ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்து அரசு போக்குவரத்துக் கழக கொரோனா பேருந்துகள் மட்டுமே தொடர்ச்சியா இயக்கப்பட்டு வருகிறது.கொரோனா வரைஸ் குறித்த அச்சம் முழுமையாக நீங்கிடும் வரையில் கொரோனா சொகுசு பஸ்சில் பயணம் மேற்கொள்வது என்பது ஒருவித அச்சத்துடனே இருந்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் செல்வராஜ்
தினபூமி நாளிதழ் நிருபர்

Comments

  • தமிழ்திரையுலகின்  வெள்ளிக்கிழமை “ராசி” சென்டிமென்ட்
    26.12.2011 - 0 Comments
    அண்மை க்காலங்களில் வெள் ளிக் கிழமைகளில் படங்களை வெளியிடும் வழக்கம் அதிகரித் துள்ளது.அந்த நாளில் வெளியாகும்…
  •  ஆபிஸில் தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம்
    13.11.2021 - 0 Comments
     முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் உறங்குவதாக திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம்…
  • 'ஏழாம் அறிவு’  திரைக்கதையின் உண்மை வரலாறு என்ன?
    26.09.2011 - 8 Comments
    மணிரத்னம், ஷங்கர் படங்களை போல தற்போத ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கும் கதை தெரிந்து கொள்வ தில் ஆர்வம்…
  • தற்கொலையில் தமிழகம் முதலிடம் ஏன்?.என்ன செய்யலாம் .......
    28.06.2013 - 1 Comments
    தற்கொலைகளின் தலைநகராக பெங்களூர் கடந்த ஆண்டுகளில் இருந்து வந்தது. தற்போது அந்த இடத்தை சென்னை…
  • இயக்குனர் மணிரத்தினத்தின் பெர்சனல்
    20.09.2012 - 4 Comments
    உலக அளவில் சிறந்த 10 படங்களில் மணிரத்தினத்தின் ''நாயகன்'' இடம்பிடித்துள்ளது. அவரின் படங்கள் சினிமா…