‘ஏடாகூடம்’- கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது

‘ஏடாகூடம்’ எனும் சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு.சிக்கலில் மாட்டுவதை ஏடாகூடத்தில் பட்டதாக கூறுவோம். உண்மையில் ஏடாகூடம் என்பது ஒரு புதிர் விளையாட்டுப் பொருள். “ரூபிக்ஸ் கியூப்”போன்று மரக்கட்டைகளால் செய்யப் பட்ட விளையாட்டுக் கருவி.பல ஆண்டுகளுக்கு முன் கேரளாவிலும், திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் உள்ள மரத்தாலான வீடுகளில்அதிகம் காணப்பட்டன. மூன்று கட்டை,ஆறு கட்டை, பனிரண்டு கட்டை எனபல வகையான ஏடாகூடங்கள் உள்ளன.இதில் ஆறு கட்டை ஏடாகூடம் மிகஅதிகம் காணப்பட்டன. இந்த ஆறுகட்டைகளையும் அதன் உரிய வெட்டு களில் வைத்து ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம். சேர்த்தவற்றை பிரிப்பதும் கடினம். அதன் ஆப்பை கண்டுபிடித்தால் பிரிப்பது எளிது.
எனவே தான் ஏடாகூடம் என பெயர். ஊரா குருக்கு (அவிழ்க்க முடியாத முடிச்சி) எனவும் கூறுவர்.  . நிஜ ஏடாகூடம் நான்குஅங்குலத்திற்குள், கைக்கு அடங்கும் விதத்தில் காணப்படும்.குமரி மாவட்டம் களியக்காவிளை, மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் ராஜசேகரன். 2008 ஆம் ஆண்டுமிகப் பெரிய ஓவிய பீடம் நிறுவி, அதில்இஎம்எஸ் நம்பூதிரிபாட்டின் ஓவியம் தீட்டி, கின்னஸ் உலக சாதனை படைத்தவர். திரைப்பட கலை இயக்குநரான இவர், 2007 ஆம் ஆண்டு கேரளஅரசின் சிறந்த கலை இயக்குநருக் கான திரைப்பட விருது பெற்றவர். மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரி யில் கணிதம் பயின்ற இவர், புதிர்கணக்குகள் செய்வதில் ஆர்வ முடையவர். சிறு வயதில் ஏடா கூடத்தைப் பற்றி தெரிந்த இவர்,கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் மிகப் பெரிய ஏடாகூடத்தைபார்த்ததும் அந்த கின்னஸ் சாதனை யை முறியடிக்க விரும்பினார். சென்றஏப்ரல் மாதம் அதற்காக விண்ணப்பித் தார். கின்னஸ் அதிகாரிகள் அந்த சாதனையை முறியடிக்க ஒப்புதல் அளித் தனர்.அது 19 அடி நீளமும், 15 அங்குலம் வீதியும், 15 அங்குலம் உயரமும் உடைய ஆறு மரக்கட்டைகளால் செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின், வால்ச்சவாவில் , குடிககய ஊடிசேயனகளால் செய்யப்பட்டது.அதற்கான செலவினங்களுக்கு ஏராளமான நிறுவனங்களை அணு கினார். கடைசியாக இந்தியாவின் தொழிலதிபர்களில் ஒருவரான டாக்டர்ரவி பிள்ளை அதற்கான அனைத்து செலவுகளையும் செய்வதாக கூறினார்.
அதன்படி முந்தைய சாதனையை முறியடித்து 24 அடி நீளமும், 24 அங்குலம் வீதியும், 24 அங்குலம் உயரமும் உடைய பிரம்மாண்டமான ஏடாகூடம் உருவாக்கி அதை கேரளா வில் கொல்லம் நிறுவியுள்ளார். புத்தாண்டில் ஜனவரி மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை திறந்து வைக்க உள்ளார். சுற்றுலா பயணிகளும், நாட்டு மக்களும் கூட்டம்கூட்டமாக சென்று இந்த கின்னஸ் உலக சாதனை ஏடாகூடத்தை பார்த்துவருகின்றனர்.முதல் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தி பத்தாம் ஆண்டு முடியும் நிலையில், ஓவியர் ராஜசேகரன் இரண்டாவது கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் உலக சாதனை படைத்தமைக்கு தமிழக அரசிடமிருந்துஉதவி கிடைக்குமா என கேட்டு விண்ணப்பித்தபோது, கின்னஸ் உலக சாதனைக்கு ஒன்றும் கிடைக்காது என தமிழக அரசு பதில் அளித்ததாகவும், அரசிடம் உதவி கேட்டதை எண்ணி வெட்கப்படுவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.
நன்றி
தீக்கதீர்

Comments

உங்கள் பதிவின் நடுநடுவில் ஏதோ புதிதாக ஒரு மொழி வருகிறதே, அது என்ன மொழி?
தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது நண்பரே
அருமையான கண்ணோட்டம்

இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!