உங்கள் பென்டிரைவில் எப்போதும் இருக்கவேண்டிய மென்பொருள்கள்

தொழில், வணிகம் தொடர்பாக பல்வேறு இடங்களுக்குப் பயணிப்பவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வெளி இடங்களில் உள்ள கணினியைப் பயன்படுத்தவேண்டிய தேவை இருக்கும். நாம் பயன்படுத்தும் கணினிகளில் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மென்பொருள்கள் இல்லாமல் இருந்தால் நம்முடைய பணியைச் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். நமக்குத் தேவையான மென்பொருள்களை நிறுவிக்கொள்ள அனுமதி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். அப்படியே மென்பொருள்களைப் பதிவதாக இருந்தால் அதற்காக சிறிது நேரம் காத்திருக்கவேண்டும். இத்தகைய சமயங்களில் நமக்கு உதவுவதுதான் போர்ட்டபிள் ஆப்ஸ்.


கல்லூரி மாணவர்களும், வணிகர்களும் பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய சில ஆப்ஸ்கள் போர்ட்டபிள் எனப்படும் சுருக்கப்பட்ட சிறு மென்பொருள்களாகக் கிடைக்கின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் பென்டிரைவ்களில் சேமித்துவைத்துக் கொண்டால், எங்கேயும் எப்போதும் வேறு கணினிகளில் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மென்பொருள்களை அந்தக் கணினிகளில் நிறுவவேண்டும் என்ற அவசியம் இல்லை. பென்டிரைவை அக்கணினியில் இணைத்து மென்பொருளைக் கிளிக் செய்தால் போதும், உடனே திறந்து பயன்படுத்தத் தயாராகிவிடும்.

போர்ட்டபிள் வடிவத்தில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய சில மென்பொருள்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

கூகுள் குரோம் பிரௌசர்

பெரும்பாலான கணினிகளில் இந்த பிரௌசர் இருந்தாலும், செட்டிங்குகள், புக்மார்க் எனப்படும் நமக்குப் பிடித்த அல்லது அதிகம் பயன்படுத்தும் இணையதளங்களை சேமித்து வைக்கும் வசதி, நாம் பயன்படுத்தும் இணையதளக் கணக்கின் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டு விபரங்கள், குக்கீகள், முன்பு பார்த்த இணையதள ஹிஸ்டரி டேட்டா போன்றவை நம்முடைய பென்டிரைவிலேயே சேமிக்கக்கூடிய வசதி இருப்பது நல்ல விஷயம் அல்லவா. அத்தகைய வசதியுடன் இருந்தால் நாம் எந்தக் கணினியைப் பயன்படுத்தினாலும் நம்முடைய கணினியைப் பயன்படுத்துவது போன்ற அனுபவத்தைத் பெற இயலும். பென்டிரைவிற்கான கூகுள் குரோம் பிரௌசரைப் பதிவிறக்கம் செய்ய https://portableapps.com/apps/internet/google_chrome_portable

மொஸில்லா ஃபயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் அதன் போர்ட்டபிள் பதிப்பைப் பதிவிறக்கம் செய்ய https://portableapps.com/apps/internet/firefox_portable

7 ஜிப்

வணிக ரீதியாகக் கிடைக்கும் வின்ரேர் மற்றும் வின்ஜிப் போன்ற மென்பொருள்களுக்கு மாற்றாகக் கிடைக்கும் இலவச மென்பொருள் இது. கோப்புகளைச் சுருக்கி அனுப்பவும், எந்த ஒரு சுருக்கப்பட்ட கோப்பினைத் திறந்து பார்க்கவும் உதவக்கூடிய மிகச்சிறந்த ஓப்பன்சோர்ஸ் மென்பொருள். மிகச்சிறிய அளவே கொண்ட இந்த மென்பொருளின் போர்ட்டபிள் வடிவம் அனைவருக்கும் பயன்படக்கூடியது. https://portableapps.com/apps/utilities/7-zip_portable

லிப்ரே ஆஃபீஸ்

மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் மென்பொருளுக்கான சிறந்த மாற்று மென்பொருள் இது. வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் ஆகிய மென்பொருள்கள் இல்லாத கணினியிலும் பயன்படுத்த லிப்ரே ஆஃபீஸ் போர்ட்டபிள் மென்பொருள் உதவும். இதனை பதிவிறக்கம் செய்ய https://portableapps.com/apps/office/libreoffice_portable/

ஜிம்ப்

போட்டோக்களை எடிட் செய்ய உதவும் அடோப் போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்றாகக் கிடைக்கும் இந்த ஜிம்ப் மென்பொருள், அதற்கு இணையான பயன்பாடுகளை நமக்கு வழங்குகிறது. ஓப்பன்சோர்ஸில் கிடைக்கும் மிகச்சிறந்த மாற்று மென்பொருள்களில் இதுவும் ஒன்றாகும். பென்டிரைவில் பதிந்து கொள்வதற்கான மென்பொருளைப் பதிவிறக்கம் செய்ய https://portableapps.com/apps/graphics_pictures/gimp_portable

லாஸ்ட் பாஸ்

நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் கணக்குகள், சமூகவலைத்தளக் கணக்குகள் மற்றும் வேறு பல இணையதளக் கணக்குகளுக்கு உள்நுழைவதற்கு பயன்படுத்தும் அனைத்து கணக்கு விபரங்களையும் பதிந்து வைத்துக்கொண்டு இணையதளங்களில் நுழையும்போது உங்களுக்கு மறக்காமல் பாஸ்வேர்ட் விபரங்களைத் தரும் மென்பொருள்தான் லாஸ்ட்பாஸ். இதனை நீங்கள் பயன்படுத்தும் குரோம் அல்லது ஃபயர்பாக்ஸ் பிரௌசரின் பென்டிரைவ் பதிப்புடன் இணைத்துக் கொண்டால் எந்த இடத்திலும் லாகின் செய்து எளிதில் பயன்படுத்தலாம். இதனைப் பதிவிறக்கம் செய்ய https://lastpass.com/misc_download2.php

ன்றி
தீக்கதீர்நாHளிதள்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்