கவிச்சியான தலைப்பாக தெரிகிறதே... கட்டுரையும் கவிச்சி,அவமானம்,போராட்டம் நிறைந்ததுதான்.
கடந்த மார்ச் -8 சர்வதேச மகளிர் தினத்திற்காக இலக்கிய அமைப்பிற்காக மிக சுருக்கமாக பேச அழைத்தார்கள். புதிதாக எதாவது தகவல் கிடைக்குமா நூலகம்,இணைத்தில் தேடியதில் பெண்கள் முலைகளை அறுத்து எறிந்து போராட்டம் நடைத்திய அவமானமும்,கோபத்தையும் உருவாக்குகிற தகவல் கிடைத்தது.
நம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த வரலாறு. 200 ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலோயர்களே "உலகில் வேறு எங்கும் கண்டதில்லை "என மிக கொடூரமான நிகழ்வாக பதிவு செய்திருக்கிற வரலாறு அது.
கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த விவேகானந்தர் "திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் " என கோபத்தோடு சொல்லியிருக்கிறார்.
காதலர் தினம், அம்மாதினம், அப்பாதினம், நண்பர்கள் தினம் என எந்த நிகழ்வாக இருந்தாலும் மேலைநாடுகளை பின்பற்றுவது நம் அடிமை புத்தி. ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளில் நடந்த நிகழ்வுகளை மையமாக கொண்டு கொண்டாடப்படுகிற தினங்களுக்கு இணையாக நம் நாட்டிலும் வரலாறுகள் உண்டு . அவற்றை மறப்பதும்,மறக்கடிக்க நினைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
கடவுளின் தேசத்தில் நிகழ்ந்த கொடுமை...
நமது பக்கத்து மாநிலமான கேரளா பரசுராமனால் நேரடியாக நம்பூதரிகளுக்கு அளிக்கப்பட்ட நிலமாக நம்பப்படுகிறது. கேரளா அதனால் தான் கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது.
சேர மன்னர்களில் முக்கியமானவரும் திருவனந்தபுரத்தை மையமாக கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டவர் ராஜா மார்த்தாண்ட வர்மா. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இன்றைய தமிழக நிலப்பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் இருந்தது.
மன்னனாக மார்த்தாண்ட வர்மா இருந்தாலும் அதிகாரம் முழுவதும் கேரளாவின் உயர்சாதி சமூகத்தைச் சேர்ந்த நம்பூதரிகளிடமே இருந்தது. அவர்கள் நடத்திய தீண்டாமை கொடுமை வர்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.நம்பூதிரிகள் எதிரில் வந்தால் தீண்டத்தாகதவன் தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளவேண்டும். பெண்கள் தங்கள் மார்பகங்களை திறந்த நிலையில் வைத்த்தபடியே அவர்களை கடந்த சொல்லவேண்டும்.
மதத்தின் பெயரால் நம்பூதிகள் நிகழ்த்திய கொடுமை
ராஜாமார்த்தாண்ட வர்மாவுக்கு உடம்பு சரியில்லையா ? அல்லது எதிரி நாட்டு அரசன் படை எடுத்து வருகிறான ... 4 தலித் குழந்தைகளை பிடித்து உடலில் செம்புப் பட்டயத்தை பதிந்து நாட்டின் எல்லைப்பகுதியில் உயிரோடு புதைத்துவிடுவார்களாம்.
1150 சாதிகள் அடிமை சாதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் நாடார்கள்,முக்குவர்,ஈழவர்,வேளாளர் உள்ளிட்ட சாதிகள் அடங்கும். அடிமைசாதிகளாக அறிவிக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்களுக்கு மேலாடை அணிய உரிமையில்லை.
இன்றைக்கு நினைத்தால் நகைச்சுவையாக தோன்றுகிற அளவுக்கு வரி விதிப்பு. முடி வளர்த்தால் வரி கட்ட வேண்டும், மீசைவளர்த்தால் வரி, பெண்கள் சேலைகட்டினால் வரி,மார்பகங்களுக்கு வரி... அதிலும் பெரிய மார்பகங்களுக்கு கூடுதல் வரி என கடவுளின் பெயரால் கொடூரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள் நம்பூதிரிகள்.
வரிகளை செலுத்த முடியாதவர்களை ஒடப்பில் போட்டு முடிவிடுவார்களாம். ஒடப்பு என்பது வயலுக்கு நீர் பாயும் சிறிய பகுதி . ‘‘அவன ஒடப்புல போட்டு மூடுல’ என்ற சொலவடையே குமரி மாவட்ட த்தில் இன்றும் புழகத்தில் உண்டு. தண்ணீர் தொடர்ந்து விழும் இடத்தில் வைத்து முடிவிட்டால் மூச்சு திணறி சாகவேண்டியது தான்.
புதிதாக திருமணமான பெண் ,அதுவும் கர்ப்பிணி பெண்,தாலி அணிந்து மாரப்போடு இருந்த காரணத்திற்காக அவளின் தலைமுடியை நிலத்தில் உழுகும் ஏர்க் கலப்பையில் கட்டி சாகும் வரை உழுதிருக்கிறார்கள். அவளின் தாலியையும் அறுத்து எறிந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்த இடம் தாலியறுத்தான் சந்தை இன்றும் உள்ளது.
நம்பூதரிகள் தாழ்ந்த சாதி பெண்களை மட்டுமல்ல தங்களுக்கு அடுத்த சாதிய நிலையில் இருந்த நாயர்கள், சைவ வேளாளர்கள் மீதும் அடுக்குமுறையை கையாண்டார்கள். குறிப்பாக நாயர் இன பெண்களின் மீது. நம்பூதியிரிகளின் பாலியல் தேவைகளுக்காக நாயர் இனப்பெண்களை அடிமையாக்கியிருந்தார்கள். ஒரு நாயர் இனப்பெண்ணின் மீதான முதல் உரிமை நம்பூதிரிக்கே. இதனால் தாய் தெரிந்த தகப்பன் யார் என்றே தெரியாத ஏராளமான குழந்தைகள் திருவிதாங்கூரில் இருந்தார்கள். ‘‘மருமக்கள் தாயம்’ என்ற பெண் வழித் தலைமையேற்ற குடும்ப அமைப்பாக அது உருவானது.
இப்படி பல கொடூரங்களை நிகழ்த்திய திருவீதாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் தங்களின் மார்பங்களுக்கு வரி வாங்க வந்தவர்களிடம் . மார்பகம் இருந்தால் தானே வரி கேட்பீர்கள். எங்களுக்கு மார்பகமே தேவையில்லை என அறுத்தெரிந்த வீரம் செறிந்த போராட்டத்தை குமரி மாவட்ட பெண்கள் நடத்தினார்கள்.
குமரி மாவட்டத்தில் திங்கள் சந்தை, பாறசாலை , பகுதியில் முலையறுத்தான் சந்தை என்ற பெயரில்ஒரு பகுதி உள்ளது. இப்படி ரத்தம் சிந்திய,அவமானங்களை கடந்த வரலாறு நம்மிடம் இருக்க எங்கோ பிரான்ஸ் தேசத்தில் நடந்த பெண்களின் போராட்டத்தை முன்வைத்து பெண்கள் தினத்தை அனுசரிப்பது சரியா? குமரிமாவட்ட பெண்களின் வரலாற்றை நினைவுகூறும் விதமாக தமிழகத்தில் ஒரு தினத்தை உருவாக்கலாமே. இன்றைக்கு பெண்களின் நிலையில் நிறைய மாற்றம் நிகழ்திருக்கலாம். ஆனால் உங்கள் ஊரின் திருமண தகவல் மையங்களில் கேட்டு பாருங்கள் விவகாரத்து பெற்று மருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் எண்ணிக்கையை ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

- அ.தமிழ்ச்செல்வன்