நீங்கள் மன அழுத்தம் உள்ளவரா?இல்லையா?உலகில் 30 கோடி பேருக்கு மன அழுத்த இருக்கிறது.அதில் நீங்களும் ஒருவரா? எப்படி கண்டுபிடிப்பது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம்நாள் உலக சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்தஆண்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ‘மன அழுத்தம் நாம் பேசுவோம்’ என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது. நோயின் அறிகுறியை பொறுத்து மிதமான மற்றும்தீவிரமான மன அழுத்தம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  உலகில் 30 கோடி மக்கள் வயது, பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

  மன அழுத்த நோய் உடல் குறைபாடு நோய்களுக்கு இட்டுச் செல்கிறது.
  உலகில் அதிக நோய்களுக்கு காரணியாக மன அழுத்தம் உள்ளது. ட மன அழுத்தத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகம்பாதிக்கப்படுகின்றனர்.
 மன அழுத்தத்தின் உச்சக் கட்டமாக தற்கொலை முயற்சிக்கு தூண்டுகிறது. முறையான தரமான மன அழுத்தத்திற்கு பயனுள்ளசிகிச்சை முறைகள் இருப்பதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் பயமோ,கவலையோ கொள்ளத் தேவையில்லை.
           உலகில் மன அழுத்த நோயால் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 வயது முதல் 29 வயது வரை நடைபெறும் மரணங்களுக்கு மன அழுத்த நோய் 2வது காரணியாக விளங்குகிறது. நீண்டகால மிதமான தீவிரமான மனஅழுத்தநோய் வேறுசில சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
                      இந்த நோயுள்ளவர்கள் தங்களது அன்றாட பணிகளைச் செய்வதில் மிகவும் சுனக்கமாக பள்ளி மாணவர்கள் படிப்பதில் ஆர்வம் குறைந்து காணப்படுவர்.தரமான முறையான மருத்துவ சிகிச்சைகள் இருந்தும் 10 சதவீதம் மக்களே தரமான சிகிச்சை பெறுகின்றனர். இதற்குக் காரணம் மன அழுத்த நோய் குறித்து பயிற்சி பெற்ற தரமான ஊழியர் இல்லா மையும், மன அழுத்த நோய் குறித்த சமூகத்தின் தவறான புரிதலும் தவறான மதிப்பீடும் இதற்குத் தடையாக உள்ளது.தனிநபர் வருமானம் குறைவாகவோ, அதிகமாகவோ உள்ள நாடுகளில்கூட இந்த நோய்க்கான முறையான பரிசோதனை செய்து அதற்கான மருத்துவத்தை கொடுக்க இயலவில்லை. மனஅழுத்த நோய் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், நாம் மற்றும் நம்மை நேசிப்பவர்களின் மரணம், உறவுகளின் முறிவு, மது அருந்துதல், போதை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல் மற்றும்தொடர்ச்சியான உடல்நலக் குறைவினால் மனஅழுத்த நோய் அதிகமாகிறது.

                    மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாத மனஅழுத்த நோயாளிகள் தங்களது குடும்பம் மற்றும் சமூக நலன்களிலிருந்து விலகியே இருப்பார்கள். இந்த நோயைக் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்ச்சியாக பேசி சரி செய்யலாம் அல்லது மன அழுத்தமுறி மருந்துகளை எடுத்தும் குணமாக்கலாம் அல்லது இரண்டும் கலந்த சிகிச்சையாகவும் பெறலாம். மன அழுத்தம் 2 வகைப்படும். ட மறுநிகழ்வு மனத்தளர்ச்சிநோய் : இந்த வகையானவர்கள் எதிலும் விருப்பம் இல்லாதவர்களாகவும், குறைந்த சக்தி உள்ளவர்களாகவும் 2வாரங்களுக்கு மேல் இருப்பார்கள். பசியின்மை மற்றும் தூக்கமின்மை, ஒருவிஷயம் குறித்து கவனமின்மை மற்றும் குற்றவுணர்வுடன் இருப்பார்கள். குறைந்த மன அழுத்தநோய் உள்ளவர்கள் சாதாரண நோய்தொடரவும், சமூக விஷயங்களில்ஆர்வம் இல்லாதவர்களாகவும்இருப்பார்கள்.
 வெறிகொண்ட மனச்சிதைவு : இவர்கள் சில நேரங்களில் சாதாரண மனநிலையிலும் சில நேரங்களில் எரிச்சலான மன நிலையிலும் இருப்பார்கள். அதிகமான செயல்பாடு, பேசுவதற்கான அழுத்தம், குறைந்த தூக்கம் ஆகியவை இதன் அறிகுறிகள்.

எவ்வாறு தடுப்பது?

சமூக உடல் ரீதியான தலையீடுகள் மூலம் இதை வராமல் தடுக்கலாம். வேலை வாய்ப்பின்மை, உடல் ரீதியான குறைபாடுகள் மனஅழுத்த நோயை அதிகரிக்கும், உடல் நலமும் மனநலமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உதாரணமாக இருதய நோய்மனஅழுத்த நோயை உருவாக்கும். ஒருங்கிணைந்த தரமான சமூகதலையீடு மூலம் இதனை வராமல்தவிர்க்கலாம். குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே முற்போக்கான மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்திலான பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் வராமல் தவிர்க்கலாம். தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வது, அதை சரிசெய்வதில் உதவி செய்வதன் மூலம் பெற்றோர்களின் மன அழுத்தத்தை குறைக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் திறன்களையும் வெளிக்கொணரலாம்.வயதானவர்கள் சிலஉடற்பயிற்சி மூலமாக மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். இறுதியாக அனைத்து விதமான மனஅழுத்த நோய்களுக்கும் தரமானமருத்துவ சிகிச்சைஇருக்கிறது.
                உடல்நல ஆலோசனைகள் மற்றும் மனஅழுத்த எதிர்மருந்துகள் உட்கொள்வதன் மூலம் இந்த நோயை பெருமளவுகுறைக்கலாம்.உலக சுகாதார நிறுவனம் மனநலம் குறித்த தங்களது திட்டத்தில் மன அழுத்தநோய்க்கு முன்னுரிமை அளிக்கிறது. மனநலம் மற்றும் நரம்பியல் தொடர்பானபிரச்சனைகளுக்கு முறையான பராமரிப்பினால் பல லட்சக்கணக்கானவர்களை இந்தப் பிரச்சனையிலிருந்து மீட்டெடுக்கலாம்.மக்கள் அறிவியல் இயக்கத் தொண்டர்கள் ஆங்காங்கே இருக்கக்கூடிய மனநல மருத்துவர்கள் மற்றும்மனநோய் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

நன்றி : விஞ்ஞானச் சிறகு


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Yarlpavanan said…
சிறந்த உளநல வழிகாட்டல்
நன்றே சிந்திப்போம்